டாஸ்மாக்: கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா?





டந்த 2017 டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 11 கொலைகள்கணவனை தீ வைத்து கொன்ற மனைவிபெற்ற தந்தையை கொன்ற மகன்அம்மாவை கொன்ற மகன்... இப்படி அந்த கொலைகள் அனைத்துமே உறவுகளுக்குள்ளேயே இருந்தனஎஃப்..ஆரில் சொல்லப்பட்ட காரணம் தவிர அனைத்துக் கொலைகளுக்குமான ஒரு பொதுத்தன்மைஎல்லாமே போதையில் நடந்த கொலைகள்போதையினால் நடந்த கொலைகள்.

இந்த கொலைகளுக்கு கைகளில் ஆயுதம் வைத்திருந்தவர்களை தண்டிக்கிறது காவல்துறையும்நீதித்துறையும்ஆனால்அவர்களுக்கு ஊற்றிக்கொடுத்து குற்றத்தின் அந்தப்புரத்துக்குள் பிடறியை பிடித்துத் தள்ளிய இந்த அரசுக்கு என்ன தண்டனைஅதை யார் தருவது?

அவர்கள் ஏன் குடிக்கிறார்கள்போதையின் மயக்கத்தில் திளைத்திருப்பதுஅதன் அடிமையாக்கும் தன்மை என்பது ஒரு அம்சம்மாறாகபெருந்தொகை தொழிலாளர்கள் அன்றாட வாழ்க்கை சிக்கல்களில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் அந்த சரக்கு வண்டியில் ஏறுகின்றனர்.

வேலை இல்லைஇருந்தாலும் முன்பு போல இல்லைகிடைக்கும் கூலி வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லைநேர்வழியில் அவருக்கு எந்த தீர்வும் தென்படவில்லைஎல்லா பக்கமும் இருட்டுதிக்கற்று நிற்கும் நேரத்தில்ஏற்கெனவே பழகிய போதையின் கரங்கள் அவரை பற்றி இழுக்கின்றனஅதனால்தான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் காரணமாக திருப்பூர் என்ற நகரம் அதன் வரலாற்றில் சந்தித்திராத மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ‘தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் வருவாய் ஈட்டும் நகரம்’ என்ற பெருமையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தொழிலாளி வர்க்கம் ரத்தம் சுண்ட உழைக்கும் பணத்தை வழிபறி செய்து பிடுங்கிய கருணாநிதிஜெயலலிதா வரிசையில் இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் இணைந்திருக்கிறதுடி.டி.வி.தினகரனுடன் .பி.எஸ்ஸுக்கும்.பி.எஸ்ஸுக்கும் பஞ்சாயத்துமிடாஸ் சாராய தொழிற்சாலையில் ரெய்டு எல்லாம் நடத்தினார்கள்ஆனால்இப்போதும் டாஸ்மாக் கடைகளில் மிடாஸ் சரக்கு விநியோகம் நடக்கிறதுஎனவே இந்த கள்ளக்கூட்டு கட்சிஆட்சி பேதம் கடந்து நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்கள் யாருக்கும்,’மக்கள் குடித்து சாகிறார்களே’ என்ற கவலை இல்லைமாறாகமேலும் மேலும் புதிய கடைகளை எப்படி திறக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்ஒரு சினிமா வெற்றிகரமாக ஓடுகிறது என்றால்இன்னும் அதிக தியேட்டர்களில் வெளியிட்டு அதிக வசூல் ஈட்டும் தயாரிப்பாளர்களைப் போலமக்களின் குடிமோகத்தை பயன்படுத்திக்கொண்டு எங்கெங்கும் டாஸ்மாக் கடைகளை திறக்கின்றனர்.இதில் நீதிமன்றம் அவ்வப்போது கௌரவ கதாபாத்திரத்தில் வந்து போகிறது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்’ என்று 2017 தொடக்கத்தில் நீதிமன்றம் சொன்னதுஇதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் கடைகள் மூடப்பட்டனஆனால் நவம்பரில் மறுபடியும் கடையை திறக்க தொடங்கிவிட்டது அரசுஇது எப்படி சாத்தியம்தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ‘ஊரக சாலைகள்’ என பெயர் மாற்றிவிட்டார்கள்ரோட்டுக்கு பெயர் மாற்றுவதற்கும் மதுக்கடைக்கும் என்ன சம்பந்தம்கண்ணாடியை திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்ஓடும்’ என்று தமிழ்நாடு அரசு சொன்னதுஅதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் இருந்தால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவார்கள்அதன்மூலம் விபத்துகள் அதிகமாக நடக்கும் என்று சொன்னீர்களே... ரோட்டுக்கு வேறு பெயர் வைத்துவிட்டால் விபத்து நடக்காதா?’ என்று யார் இந்த அரசை கேட்பதுநாம் ‘ஜனநாயக கடமையை ஆற்றி தேர்வுசெய்த மக்கள் பிரதிநிதிகள் கேட்கமாட்டார்கள்சட்டமன்றம் தடுக்காதுநீதிமன்றத்தால் தடுக்க இயலாதுகடையை மூட வேறு என்னதான் வழி?

அதைத்தான் 2017 முழுவதும் மக்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறக்க அரசு முயன்றபோது பெருங்கோபத்தின் உச்சியில் மாநிலம் முழுக்க கடைகளை அடித்து நொறுக்கி சரக்கு பாட்டில்களை சாலையில் கொட்டி நொறுக்கினார்கள்அது அவர்களின் விருப்பம் அல்லஅது ஒன்றே அவர்களிடம் எஞ்சியிருந்த தீர்வுபல்லாயிரம் பெண்களின் தாலியறுத்த விஷக் கடைகள் மீதான வன்மம் அதுதகப்பனை இழந்த பல்லாயிரம் பிள்ளைகளின் மனக்குமுறல் அதுகடையை மூடுவதற்கான சாத்தியம் உள்ள ஒரே வழியும் அதுதான்

நன்றிவிகடன் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு