பால் பீய்ச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்துக் கோழியை விட்டு...
(Disclaimer about title: ஒண்ணுமில்ல..ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா.. கண்டுக்காதீங்க..). "வா ழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்" என்று ஓஷோவை முன்வைத்து நேற்றெனக்கு சொல்லித்தந்த அய்யனார் முதல், "உண்மையில் மனிதன் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதுமில்லை..நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வதே இயல்பானது" என்று உளவியலை முன்வைத்துத் துணுக்குறச் செய்த பைத்தியக்காரன் வரை.. இந்த ஏழு நாட்களில் வலையுலகம் நிறையவே வசீகரப்படுத்திவிட்டது என்னை. அ வ்வப்போது வாசிப்பு, எப்போதாவது பதிவு மற்றும் பின்னூட்டங்கள் என்றிருந்த எனக்கு, இப்படி தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்ற நிபந்தணையே கொஞ்சம் அவஸ்தையானதுதான். பிளாக் தொடங்கி ஒண்ணரை வருடங்களாகிவிட்ட நிலையில், இதையும் சேர்த்து நான் இதுவரை எழுதியிருக்கும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே 65 தான். ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் ஓடிவந்து தட்டிக்கொடுப்பார்கள். மதி கந்தசாமி, என்னுடைய சில கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் மொழிபெயர்த்து எழுதியிருந்ததைப் படித்தபோது, 'பார்றா.. இந்தப்பயலுக்கு அடிச்ச யோகத்த..' என்று என...