இடுகைகள்

ஏப்ரல், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..'

படம்
'நா டக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது. பி ரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'. தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்

"இது ஒரு கிறுக்கு பயபுள்ள.."

படம்
'பு த்திசாலியெல்லாம் தன்னை கிறுக்குன்னு சொல்லி பெருமைப்பட்டுக்குறாக.. உண்மையான கோட்டிக்காரன் இங்கன ஒருத்தன் இருக்கேன்..யாரும் கண்டுக்கிடவே மாட்டங்காங்களே..?' என்று புறக்கணிப்பின் தேதனையோடு புழுங்கித் திரிந்த நேரத்தில், 'வாங்க தம்பி' என வாஞ்சையோடு அழைத்திருக்கிறார் திரு. 'எல்லார்க்குள்ளயும் ஒரு பயந்தபய இருக்காம்ண்ணே.. ஆனால் யாரும் இதை ஒத்துக்கிற மாட்டாக. நான் அதை சினிமாவுல பண்றனா..அதைப் பார்த்து அம்புட்டு பேத்துக்கும் சந்தோஷம். இதுதாம்ணே நான் ஜெயிக்கிறதுக்குக் காரணம்' என்று நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நானும் அப்படிப்பட்ட பயந்தபயதான். வீட்டின் ஒற்றை ஆண்பிள்ளை என்று பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததன் விளைவாக இருக்கலாம்('உனக்கு உடம்புல தெம்பில்லை..அதை ஒத்துக்க. அதை விட்டுட்டு உன் அப்பன் ஆத்தாளை ஏன் குத்தம் சொல்லுற..?'). ஆனால், இந்த பயத்தை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை. 'போட்ருவோம்..பொழந்துருவோம்' என்று பேச்சிலேயே வீச்சரிவாள் வீசுவது பழகிப்போய்விட்டது. ஆனால், இந்த வீர வெங்காயமெல்லாம் நோஞ்சான்களுக்கு மத்தியில்தான். கொஞ்சம் உடம்பு