இடுகைகள்

அக்டோபர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயே பீ அள்ளு..

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி.. நினைவுக்கு வரட்டும் அவன் பிறப்பு.. -பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது. செண்ட் பூசிய பணக்கார பிணம்.. துர்நாற்றமடிக்கிறது எரிக்கையில்.. உறக்கம் பிடிக்கவில்லை.. கனவிலும் பீ துடைப்பம்.. நாத்தம் குடல புரட்டுது.. சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்.. மறுபடியும் அவிய்ங்க பேல.

மணற்கேணி..

தோ ண்ட தோண்ட சரிந்து கொண்டேயிருந்தது மணல்.புதைமணல்.கால் வைத்தால், பொலபொலவென்று உள்ளே சரிந்து கொட்டியது.முப்பதடி ஆழக்கிணறு,ஒரு நிமிடத்தில் இருபதடியாகக் குறைந்திருந்தது.கிணற்றின் மேற்குக் கரையிலிருந்து உள்ளுக்குள் சரிவாக இறங்கிக் கிடந்தது மணல்.கிணற்றைச் சுற்றி ஒரேக் கூட்டம்.நசநசவெனச் சத்தம். "உசுரு இருக்குடா வேம்பையா...எப்படியாச்சும் காவந்து பண்ணிடனும்டா..கோயிந்தன் கையை ஆட்டுறான் பாரு.சடுதியா ஏதாவது பண்ணனும்மப்பா.."-பதற்றம் தெறிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான் காளி. "காலை வச்சாலே பொத மணலு உள்ள இழுக்குது மாமா..ஊத்துத்தண்ணி வேற நிக்க மாட்டேங்குது.." சொல்லிக்கொண்டே கோயிந்தனை நெருங்க ஏதாவது தோது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன். விடிகாலையில் நீராகரத்தைக் குடித்துவிட்டு, வீட்டுக்காரி பெருமாயியை காலைக்கஞ்சி கொண்டுவரச் சொல்லிவிட்டு, வாத்தியார் வீட்டுக் கொள்ளையில் கிணறு தூர் வாரக் கிளம்பியக் கோயிந்தன்,இப்படி மண் சரிந்து சிக்கிக்கொண்டது யாரும் எதிர்பாராதது. ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருதார்கள்.ஏதேதோ யோசனைகள்.கிணற்றுக் கரையில் ஓங்குதாங்