இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடவுளின் புனைப்பெயர்!

SC NO 8 EXT / DAY / BUS STOP ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா... நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம்.. சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப் பாட்டுக்கும் ஏறிட்டீங்க..” என தயங்குவது. “போன்னு சொல்றேன்ல” என அவள் குரலை உயர்த்தியதும் சைக்கிள் கிளம்புவது. சுப்பையா பின்புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவளையேப் பார்த்துக்கொண்டு அந்த இளைஞன் நிற்பது. ------Cut------- சம்பந்தம் கடுப்பாக டி.வி.யை நிறுத்திவிட்டு நரைத்துப்போன நெஞ்சு முடியை கையால் தடவிக்கொண்டார். இளம் பச்சை நிற தேங்காய்ப்பூ துண்டு அவர் தேகத்தை மறைத்துக் கிடந்தது. கையில் புகைந்த சுருட்டுப் புகை முகத்துக்கு நேராக சுற்றி சுற்றி வந்தது. கடும் கோபத்தில் இருந்த அவரது உதடுகள் ‘சுப்பையா’ என்ற பெயரை உச்சக்கட்ட கோபத்துடன் முணுமுணுத்தன. சனியன் பிடித்த டி.வி. எதைத் திறந்தாலும் அதையே போட்ட...

வூடு

படம்
ஜஸ்டினின் பள்ளிக்கூடம் ஜஸ்டின், டீச்சரின் முன்பு கை கட்டி நின்றிருந்தான். அவனது நோட்டு டீச்சரிடம் இருந்தது. 'டி.ஜஸ்டின் பெர்லின் ராஜ், 3-ம் வகுப்பு, பி- செக்ஷன்' என நோட்டின் மீது எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது ஒட்டப்பட்ட லேபிளில் இருந்த பொம்மைக்கு மீசை, தாடி வரைந்து இருந்ததைக் கவனித்தான். டீச்சரின் கையில் இருந்த குச்சி ஜஸ்டினைப் பயமுறுத்தியது. ஆனால், அவன் பயந்த மாதிரி டீச்சர் கடைசி வரைக்கும் லேபிளைப் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றிக் கேட்கவும் இல்லை. நோட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். இவனுக்கு உள்ளுக்குள் லேசான பயம். இந்த டீச்சருக்கு 'கண்ணுருட்டி' எனப் பெயர் வைத்தவன் ஜஸ்டின்தான். கையில் குச்சியை வைத்துக்கொண்டு புறங்கையைத் திருப்பச் சொல்லி அடிக்கும்போது, கண்கள் இரண்டையும் உருட்டி உருட்டி மிரட்டுவார். உதடுகள் சத்தமே இல்லாமல் எதையோ முணுமுணுக்கும். அடி மட்டும் இடியாக விழும். இப்போது கண்ணுருட்டி டீச்சரின் கண்களைப் பார்த்தான். ஒன்றும் உருட்டிய மாதிரி தெரியவில்லை. ஆனால், ரொம்பவும் யோசனையாக நோட்டைப் பார்த்தாள். மற்ற பையன்கள் 'சிக்கிட்டல்ல' என்பதுபோல் பழிப்புக் ...

தீராக் கனவு!

படம்
நே ற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பின் மதிய நேரம் அதற்கு உகந்ததாக இருந்தது. நிதானமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது கிடந்த தாளை எடுத்து அதற்குரிய இடத்தில் பொருத்தினான். தொலைபேசிகளை ஒழுங்குசெய்துவிட்டு, கால்களில் புண் இருந்த பகுதி நாற்காலியில் படாதவாறு மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு சாவகாசமாக இரண்டாவது கனவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டான். நீண்டு விரிந்த நதி. உதிர்ந்த மஞ்சள் இலைகள் ஆற்றில் விழுந்து, நதிப்போக்கில் ஓடின. ஆற்றின் ஒரு முனையில் பால்ராஜ் குதித்திருந்தான். சற்றுத் தள்ளி மிதந்த கரும்பச்சை நிற இலை, அவனை வசீகரித்தது. அதை நோக்கி நீந்த முயன்றபோது பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்டதைப்போல உடம்பு சவட்டியது. மீன்கள் வந்து அவனை முத்தமிட்டன. கரும்பச்சை இலை, இவனை நோக்கி மிதந்து வந்தது. புன்னகைத்தபடி இலையை வருடினான். மீன்கள் அவனைத் தீண்டின. இந்தக் கனவைப்பற்றி பால்ராஜ் நிறைய முறை யோசித்துப்பார்த்தான். இதே போன்றதொரு கனவு ஏற்க...

கங்காணி..!

படம்
அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பான். எப்படியோ அப்படி ஒரு பேராகிப்போச்சு. இன்ன வேலைன்னு கிடையாது.. கல்யாண வீட்டுல பந்தல் போடுவான். தென்னமட்டைவொளை வாங்கியாந்து ஊறவச்சு, நறுவுசா கீத்து பின்னுவான். இங்கேருந்து கருக்காக்கோட்டை வரைக்கும் கூரை மேய போவான். மீன்வாங்கப்போனபய, குளத்துல இறங்கி வலை போட்டுகிட்டு நிப்பான். சித்தன்பாடு, சிவன்பாடுதான் அவம் பொழப்பு. ஆனா அவனுக்குன்னு ஒரு காலம் உண்டு. அந்த நேரத்துல அவன்தான் ராசா. ஆத்துல தண்ணி வந்துட்டா ஊருக்குள்ள பெரிய வாத்தியைவிடவும் அவனுக்குதான் மதிப்பு அதிகம். எந்த விவசாய வேலையா இருந்தாலும் கூலியாளுக்கு அவன்கிட்டதான் வந்தாகனும். சேறடிக்க, வரப்புவெட்ட, நாத்தறிக்க, ஏர் ஓட்ட, பரம்பு செட்டு வைக்க, நடவு நட, களைபறிக்க, அறுப்பு அறுக்கன்னு எல்லாத்துக்கும் அவன்தான் கங்கானி. இன்ன கிழமைக்கு இன்ன வேலைக்கு இத்தனை பேரு வேணும்னு ரெண்டு நாளைக்கு முந்தி சொல்லிட்டாப் போதும்... டான்னு ஆளோட வந்துடுவான். அதுக்கு முன்னாடி கூலியாளுக்க...

காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!

படம்
"தோ ழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பை விட அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 'என்னடா இது.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எலி ஜட்டி போட்டுகிட்டுப் போகுதே..'ன்னு எனக்கு ஆச்சர்யம். "ம்... குவாட்டர் அடிச்சுட்டு குப்புறடிச்சு தூங்கனும்.." என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை. "தோழர்.. உங்களை வெவரமானவர்னு நினைச்சுதானே இதை கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.." "எல.. நான் சொன்னனா நான் வெவரம்னு. நீங்களா நெனச்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய..?" "சும்மா சொல்லுங்க தோழர்.. காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க..?" "இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு.. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொ கூட சுத்துறமாறி என்கிட்ட கேக்க. கழுத.. நம்மளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக் கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழிகேட்ட மாதிரி நல்லா கேட்டப்போ. அது சரி.. என்ன திடீர்னு காதலைப்பத்தியெல்லாம் கேக்க..?" காலக்கொடுமை, அந்தக் கேள்விய...

குப்பமுத்து குதிரை..!

படம்
"என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும் எத்தனை தடவைக் கேக்குறேன். ஒரு நாளாவது என்னையும் சந்தைக்கு அழைச்சுகிட்டுப் போங்கன்னு.." "வயசான பொம்பளை சனங்களைக் கண்டா என் தங்கராசுக்கு ஆகாதுத்தா. ஒரு வாரம் டயம் தர்றேன். கெடுவுக்குள்ள நீ கொமரிப்புள்ளயா மாறி வா.. காட்டுக்குறிச்சி சந்தையில சீனிச்சேவு வாங்கித்தர்றேன்.." -வாசல் தெளிப்பதற்காக பசுமாட்டுச் சாணியை குண்டானில் கரைத்துக்கொண்டிருந்த ஓந்தாயிக்கும், காலையிலேயே தன் குதிரை வண்டியில் காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிவிட்ட குப்பமுத்துவுக்கும் நடந்த உரையாடல் இது. "இந்த மாமாவுக்கு வயசு ஏறுனாலும் இன்னும் கொழுப்பு கொறையலை.." சிரிப்போடு சொல்லிவிட்டு சாணியை கரைக்க ஆரம்பித்த ஓந்தாயிக்கு, இப்படிப்பட்ட ஒரு பதில்தான் குப்பமுத்துவிடமிருந்து வருமென நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் கேட்கிறாள். இவள் மட்டுமில்லை. ஊர் பெண்களுக்கெல்லாம் குப்பமுத்து என்றால் ஒரு இதுதான். எதையாவது நோண்டி, நோண்டி கேட்பார்கள். அவரும் வயது, உடம்பு இன்னபிற தகுதிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் எளந்தாரியாய் வார்த்தைகளை விசிறியடி...

'ஏழரை' முருகன்..!

படம்
எ ப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு வேலையாப் போச்சு. இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தால் அரசியோ, கோலங்களோ எதையாச்சும் பார்த்துக்கிட்டிருந்திருக்கலாம். முருகன்பயலால் முருகேசன் கடையிலேயே உட்கார வேண்டியதாகிடுச்சு. "நீங்கதான் மாமா கேட்டுச் சொல்லனும். இந்த நாயி இப்படி பண்றது இது மொத தடவை இல்லை. என்கிட்டதான்னு இல்ல.. எல்லார்கிட்டயும் எகனக்கி, மொகனையா எதையாச்சும் செஞ்சுகிட்டே இருக்கான்.." முனகலான குரலில் சொல்லிவிட்டு அருகிலிருந்த பூவரச மரத்திலிருந்து இலையை இனுக்கி, இனுக்கி பிய்த்துப்போட்டுக்கொண்டிருந்தான் வீரையன். அவன் துன்பம் அவனுக்கு. அவன் நிலையில் இருந்தால் நீங்களும் இப்படித்தான் புலம்பியிருப்பீர்கள். முருகன்பயல் லேசுப்பட்ட ஆளில்லை. மூக்குக்குத் தெரியாம மூக்குத்தியை திருடுற வித்தைக்காரன் அவன். அவன்கிட்ட சொந்தமா உழவுமாடும், ஏறும் இருக்கு. ஆனா, அதை அவன் மச்சினன்கிட்ட கொடுத்து மாமியார் ஊர்ல வாடகைக்கு விட்டுட்டான். இங்க எவனாவது ஏர் உழுவக் கூப்பிட்டான்னா, 'என்கிட்ட ஏர் கலப்பை இல்ல.. உழுது தர மட்டும்னா வர்றேன்'னு பட்டுன்னு சொல்லிட மாட்டான். 'பத...

மணற்கேணி..

தோ ண்ட தோண்ட சரிந்து கொண்டேயிருந்தது மணல்.புதைமணல்.கால் வைத்தால், பொலபொலவென்று உள்ளே சரிந்து கொட்டியது.முப்பதடி ஆழக்கிணறு,ஒரு நிமிடத்தில் இருபதடியாகக் குறைந்திருந்தது.கிணற்றின் மேற்குக் கரையிலிருந்து உள்ளுக்குள் சரிவாக இறங்கிக் கிடந்தது மணல்.கிணற்றைச் சுற்றி ஒரேக் கூட்டம்.நசநசவெனச் சத்தம். "உசுரு இருக்குடா வேம்பையா...எப்படியாச்சும் காவந்து பண்ணிடனும்டா..கோயிந்தன் கையை ஆட்டுறான் பாரு.சடுதியா ஏதாவது பண்ணனும்மப்பா.."-பதற்றம் தெறிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான் காளி. "காலை வச்சாலே பொத மணலு உள்ள இழுக்குது மாமா..ஊத்துத்தண்ணி வேற நிக்க மாட்டேங்குது.." சொல்லிக்கொண்டே கோயிந்தனை நெருங்க ஏதாவது தோது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன். விடிகாலையில் நீராகரத்தைக் குடித்துவிட்டு, வீட்டுக்காரி பெருமாயியை காலைக்கஞ்சி கொண்டுவரச் சொல்லிவிட்டு, வாத்தியார் வீட்டுக் கொள்ளையில் கிணறு தூர் வாரக் கிளம்பியக் கோயிந்தன்,இப்படி மண் சரிந்து சிக்கிக்கொண்டது யாரும் எதிர்பாராதது. ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருதார்கள்.ஏதேதோ யோசனைகள்.கிணற்றுக் கரையில் ஓங்குதாங்...