மானியங்களை வெட்டு
`ம ன்மோகன் சிங் ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?’ ‘என்ன?’ `அது பயங்கரக் கொடூரமா இருக்கும். இது கொடூரமா, பயங்கரமா இருக்கும்.’ - வாட்ஸ்அப் ஃபார்வேர்டுபோலத் தோன்றினாலும் இந்த ஒப்பீட்டில் ஆழ்ந்த அரசியல் பொருள் உள்ளது. இவர்கள் ஒரே மரத்தின் கனிகள். தாராளமயம் என்ற அந்த மரத்தில் ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, மாண்டேக் சிங் அலுவாலியா என ஏகப்பட்ட கனிகள். எல்லா கனிகளின் உள்ளே இருப்பதும் ஆலகால விஷம் என்பதுதான் இதில் உள்ள அபாயம். இப்போது ரேஷன் மானியம் ரத்து, கேஸ் மானியம் ரத்து... என வரிசையாக அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் அனைத்திலும் இவர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. மானியங்களைப் போட்டுத் தள்ளுவதில் இவர்களுக்கு அப்படி என்ன அலாதியான ஆர்வம்? ரேஷன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து உயிர்வாழும் ஒரு வயதான கிழவியின் வயிற்றில் அடிக்க இவர்கள் போட்டிப் போடுவது எதனால்? ஏனெனில், ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது அருண் ஜெட்லியின் சொந்த முடிவு அல்ல. ‘மானிய வெட்டு’ என்பது உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனை. உலக வங்கியின் கொள்கை. இவர்கள்தான் கடந்த 25 ஆண்டுகளு...