இடுகைகள்

விலைவாசி உயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டை விற்றுத் திண்ணும் எடப்பாடி அரசு

படம்
செ ம்மஞ்சேரியில் இருந்து கீழ்பாக்கத்துக்கு வீட்டுவேலை செய்யவரும் வசந்தா, தினமும் இரண்டு பேருந்துகள் மாறி வர வேண்டும். போகும்போது இரண்டு பேருந்து. போக வர மொத்தம் 40 ரூபாய். இது கடந்த வாரம் வரை. இப்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணத்தின்படி அவர் 80 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு பஸ் கட்டணத்துக்கு இதுவரை 1,000 ரூபாய் செலவழித்திருந்தால், இப்போது 2,000 ரூபாய்.  கொடைரோடு அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள தன்னுடைய சாமந்திப்பூ அறுவடையை தினசரி அதிகாலையில் பேருந்து பிடித்து திண்டுக்கல் பூ சந்தைக்கு கொண்டு வருகிறார் வேலாயுதம். பேருந்துக்கும், பூ கூடைக்கும் அவர் மாதம் ஒன்றுக்கு செலவழித்த 1,500 ரூபாய் இப்போது இரு மடங்காகிவிட்டது. திருச்செந்தூர் சூரசம்காரத்துக்கும், குலசேகரபட்டிணம் தசராவுக்கும் குடும்பத்துடன் சென்றுவரும் ஒருவர் இனி சுளையாக 2,000 ரூபாயை தனியே எடுத்து வைக்க வேண்டும். பேருந்தில் தினசரி சரக்கு எடுத்து வந்து மளிகை கடை நடத்தும் ஒரு கிராமத்து சிறுகடை உரிமையாளர், அந்த கூடுதல் செலவை பொருட்களின் மீது வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பேருந்து கட்டண உயர்வு என்பது ...