இடுகைகள்

டாக்டர் ராமதாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமதாஸ்... தமிழ்நாட்டின் நரேந்திர மோடி! - திருமாவளவன் பேட்டி

படம்
த ஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், புதிய அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. ஒருபுறம், முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னொருபுறம், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிலமும் பணமும் தந்த ம.நடராசன், 'இந்த விழாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்று முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இந்த நிலையில், 'ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக’க் குற்றம் சாட்டப்பட்டு, இந்த முற்றம் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்ன சொல்கிறார்? ''முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு நீங்கள் அழைக்கப்படவில்லை. உங்களுக்குள் என்ன உரசல்?'' ''அவர்கள் அழைக்காதது குறித்து எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை. அழைக்கப்பட்டவர்கள் யார், யார் என்பதையும், எத்தகைய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். மொத்தத்தில் அந்த 'முற்றம் திறப்பு விழா’ என்ற நிகழ்ச்சியே, அம்மாவின் கோபத்து...