இடுகைகள்

மே, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28

படம்
மொ ட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி ஊத்துனமாறி இருக்கு. ''அரிசி வாங்கப் போவனும். கூப்பன்காரன் மூடிபுட்டுப் போயிடுவான். வாடா சீக்கிரம்.."னு மேலண்ட பக்கம் ஒதியமர நிழல்ல ஒதுங்கி நின்னு எங்க அம்மா கூப்பிடுது. காதுல வாங்கனுமே...ம் ஹூம். நாலஞ்சு தடவைக் கூப்பிட்ட பிறகு, ''பொறும்மா.. இந்த ஓவர் முடியட்டும்"ங்குறேன். எங்க அம்மாவுக்கா எரிச்சலுன்னா எரிச்சல். வந்து முதுகுலயே படார், படார்னு அடிச்சு, ''ஓவராவுது...கீவராவுது. இங்க என்ன வேப்பமர நெழலா விரிஞ்சுக் கெடக்கு..?" என்று திட்டியபடியே இழுத்துப் போனாள். அது ஒரு அழகிய வெயில் காலம். வெயில், மழை ஒரு மண்ணும் தெரியாது. எப்போதும், பேட்டும் பந்துமாகத்தான் திரிவோம். எவனாவது ரெண்டு பேர் சந்தித்தால், 'கிரவுண்ட்ல யார் இருக்கா..?' என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஊர் உலகம் போலவே என் பால்யமும் கிரிக்கெட்டால் சூழப்பட்டிருந்தது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான கிராமங்களில் 'த்ரிரோசஸ் கிரிக்கெட் க்ளப், வின்ஸ்டார் கிரிக்கெட் க்ளப், ப்ளாக் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்' என்ற

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்

படம்
''சுதந்திரம் என்பது கேட்டுப்பெறும் பிச்சைப்பொருள் அல்ல. வீரமிக்கப் போராட்டங்களால், விழுமிய தியாகங்களால் பற்றிப்பெற வேண்டியதாகும். 1947-ல்் பெற்ற சுதந்திரம் உண்மையானது அல்ல. அது போலி சுதந்திரமே ஆகும். வெள்ளைப் பரங்கியர்களின் கரங்களிலிருந்து, இந்திய தரகர்களின் கரங்களுக்கு அரசியல் அதிகாரம் மாறிய நாள்தான் ஆகஸ்ட் 15, 1947" - இப்படி புத்தகம் முழுக்க, ் சிவப்பு சிந்தனைகள் சிதறிக்கிடக்கின்றன. வாசிக்க, வாசிக்க பிரமிப்பும், வியப்பும் மேலிடுகின்றன. அது, 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற தோழர் கலியபெருமாளின் தன் வரலாற்று புத்தகம். புலவர் கு.் கலியபெருமாள் என்று சொன்னால் உங்களில் சிலருக்கு தெரியக்கூடும். புலவர் கலியபெருமாள் தமிழ் மண்ணின் தனித்துவமிக்க புரட்சியாளர். 'வசதி படைச்சவன் தரமாட்டான். வயிறு பசிச்சவன் விடமாட்டான்' என்ற வார்த்தைகளை செயலுக்குக் கொண்டு வந்தவர். நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியமைத்த புரட்சிக்கர போராளி. தன் வாழ்நாளெங்கும் உயிருக்கு அஞ்சாமல் அவர் நடத்திய போராட்டங்களையும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புரட்சிக்கர சிந்தனையை ஊட்டிய அவரது செ

ஓடிப்போலாமா...?

படம்
அ ர்த்தங்களும், அபத்தங்களும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தடுமாற்றங்களுடன் கழிகின்றன நாட்கள். அதில் பல அபத்தங்கள் விதிக்கப்பட்டவை. சில, விதித்துக்கொண்டவை. காதல் என்ற இயல்புணர்ச்சி, மன்னிக்க முடியாத உயரிய துரோகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் சமூக அபத்தமும் அப்படி விதித்துக்கொண்டனவற்றில் ஒன்றுதான். ஆனால், இதில் அபத்தம் மட்டுமே இல்லை. இந்த சாக்கடை சமூகத்தின் எல்லா அனர்த்தங்களும், அசிங்கங்களும் மூழ்கியிருக்கின்றன. கடந்த மூன்று பதிவுகளாக 'அவன் நம்ம ஆளு' , 'செல்வியக்கா' , 'ரவுடி பிரேமா' ஆகிய மூன்று கதைகளை எழுதினேன். காதல் மறுக்கப்பட்ட சமூகத்தில், வாழ்வதற்காக ஓடிப்போக வேண்டிய அவல நிலை இருப்பதையும், ஓடிப்போன பின்னால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலையையும் அந்தக் கதைகள் விவரித்தன. இவை ஏதோ திட்டமிட்டு, கற்பனையில் எழுதப்பட்ட கதைகளல்ல. மிகை விழுக்காடு உண்மைகளே அந்த கதைகளை ஆட்கொண்டிருக்கின்றன. அனைத்தும் நானறிய நிகழ்ந்தவை. அவற்றை கட்டுரையாக எழுத நினைத்து, கதைக்குரிய தன்மை இருப்பதாக உணர்ந்ததால், கதையாக எழுதப்பட்டன. எது, எதுவோ மாறிவிட்டது. மக