நினைவின் நிழல்..!
மீ னாட்சி மெஸ்ஸுக்கு எப்போது போனாலும் வலது கை தூக்கி சல்யூட் அடிக்கும், ஒல்லியான தேகம் கொண்ட அவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சிவப்புகலர் வலை பனியந்தான் அணிவார். பனியனின் மேல்புறம் இரண்டு ஓட்டைகள் நிரந்தரமாக இருக்கும். ''இது ஒரு பனியன்தான் இருக்கா..?'' என்று ஒருமுறை கேட்டதற்கு கை விரல்களை மடக்கிக்காட்டி 'நான்கு' என்றார். நான்கிலுமே ஓட்டை இருப்பது ஆச்சர்யமானதுதான். ஒருவேளை பனியன் வாங்கிய உடனேயே இவரே ஓட்டை போட்டுவிடுவாரோ என்று கூட தோன்றும். சாப்பிட்ட இலைகளை ஒரு டிரேயில் எடுப்பதும், மேசையை துடைப்பதும் அவர் வேலை. வாழை இலையின் அடியில் இருக்கும் நார்போன்ற தண்டுப்பகுதியை கைக்கு அடக்கமாக நான்கைந்து வெட்டி வைத்திருப்பார். மேசையில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தண்டுப்பகுதியைக்கொண்டு நேர்த்தியாக துடைப்பார். அவர் கவனம் முழுவதும் அமர்ந்திருப்பவர்களின் உடலில் ஒரு துளி கூட சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும். இடையிடையே சாப்பிட அமர்ந்திருக்கும் நம்மிடம், ''சிவசக்தி தியேட்டர்ல.. மாயாக்கா.. " என்று சொல்லிவிட்டு, 'சூப்பர்' என்பதா