இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

படம்
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கு...

விவசாயக் கூலிகள் குறைந்தது ஏன்?

‘எக்காளக்ஸு மருந்திருக்கு, என்னக் கவலை?’ ‘எடுத்துக் குடிச்சிடலாம் மனக் கவலை’ - முன் வரியை ஒருவர் மட்டும் பாட, பின் வரியை எல்லோரும் சேர்ந்திசைக்க வண்டல் மண்ணின் வாசனையுடன் ஒலித்த அந்த நடவுப்பாட்டு இப்போதும் எனக்குள் ஒலிக்கிறது. ‘செவ்வரளித் தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ பாடலை எப்போதுக் கேட்க நேர்ந்தாலும் மனம் ஒரு மண்புழுவைப்போல சேற்றுக்குள் தன்னை அமிழ்த்திக்கொள்கிறது. சேர் அப்பிக்கிடக்கும் உடம்போடு கைகளில் நாற்று முடிச்சுகளை சுமந்து நடவு வயலில் கால் புதைய நடந்த நாட்கள் ஒரு பசுங்கனவென விரிகிறது. நாங்கள் விவசாயக் குடிகள். திண்ணைகளில் தானிய மூட்டைகளும், கொல்லைப்புறத்தில் வைக்கோல் போருமான வாழ்வொன்று எங்களிடம் இருந்தது. நடவும், அறுப்புமே எமது ஆயுள். நடவு வயலில் நடமாடும் ஆண்களைச் சுற்றிவளைத்து நட்டுவிட்டு சில்லறை காசு கேட்கும் பெண்களின் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்கும், திடீர் மழை வந்தால் நாத்து விட்டிருக்கும் பக்கத்து வயலுக்கும் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் உழைக்கும் மக்களின் இயல்பான அக்கறையும், கதிர் அடித்ததும் அந்த வீட்டு சின்னப் பிள்ளைகளுக்கு ‘வாங்கித் திண்பதற்காய்’ தரும் ஓரிரு மரக்கால் நெல்லு...

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

படம்
இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந...

அடையாள‌ மீட்பின் அர‌சியல்- தொடரும் உரையாடல்.!

'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு. முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும் அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாதே.. என்ற பதட்டம் தொனிக்கிறது என்பது அவர் சொன்னதன் மைய சாராம்சம். நிச்சயம் அவ்விதம் இல்லை. இருக்கும் சமூக அமைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான/சம அளவு சமூக மதிப்புள்ள‌ பண்பாட்டு, கலாசார அடையாளங்களை வழங்கியிருக்கவில்லை. ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்கும், ஒரு தலித்துக்கும் இடையே கலையப்பட வேண்டிய பண்பாட்டுப் பாகுபாடுகள் நிறைய இருக்கின்றன. இவற்றை சமன்படுத்த யாவற்றையும் அழித்தொழித்து, எல்லோருக்கும் பொதுவான கலாசார, பண்பாட்டுக் கூறுகளை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தின் வெளிப்பாடே அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. அது சரிதான். இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என்பதில் எவ்வித கருத்துபேதமும் இல்லை. உலகெங்க...

நான் வித்யா..

"அ ரசு, சமூகம், குடும்பம் உள்ளிட்ட அனைத்து வகை அதிகாரங்களும் தங்களின் கூர்முனை காட்டி அச்சுறுத்தி, பயத்தின் விளிம்பிலேயே நம்மை வைத்திருக்க விளைகின்றன. கொண்டாட்டங்கள் ஒன்றே அதற்கான எதிர் அரசியலாக இருக்க முடியும். வாழ்வை கொண்டாடு நண்பா.." போதை இரவொன்றில் தோழன் ஒருவன் சொன்னான். அந்த இரவும் விடிந்தது என்பதன்றி, உரையாடிய வார்த்தைகளால் வேறெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதிகாரங்களுக்கான எதிர் அரசியல் கொண்டாட்டம்தானா..? வாழ்வை கொண்டாடி எவ்விதம் வலிகளைப் போக்க முடியும்..? மறக்கலாம்.. தவிர்க்கலாம்.. தீர்க்க..? திருநங்கைகளின் வாழ்வெங்கும் இரைந்துகிடக்கும் வலிகளை எந்தக் கொண்டாட்டம் கொண்டு கடப்பது..? அது என் பால்ய வயது. உப்புக்குளத்து கரையில் தனித்திருந்த அந்த கூரை வீட்டில் டீ கடை ஒன்று இருந்தது. அந்த வீட்டின் ஒரே ஆண்பிள்ளைக்கு உமாசங்கரென்று பெயர் வைத்திருந்தார்கள். அவனது பதின்ம வயதில் 'நீ உமா சங்கர் அல்ல.. வெறும் உமாதான்' என்ற வார்த்தைகள், நக்கல் தொணியில் அவன் நோக்கி வீசப்பட்டன. ஈரமற்ற சொற்களால் மெல்ல மெல்ல அவனும், அவனது குடும்பமும் நகரம் நோக்கி புலம் பெயர்ந்தது. இடிந்து நிற்கும் கு...

சாதி சூழ் உலகு- Part II

இ ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை. த ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன. பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டு...

சாதி சூழ் உலகு..!

தி ருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன. ஏன்..? சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து...

அனுபவிக்கத் தயாரா...?

படம்
இ ந்த வயதில் அனுபவிக்காமல் வேறு எந்த வயதில் அனுபவிப்பது, என்று வாதாடும் இளைஞனே..! எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்.. கல்லூரிக்குப் போக வழியில்லை கரும்பு வெட்டி கன்னல் சுனையில் கைத்தோல் உரியும். சோறு உள்ளங்கையில் பட்டு எரியும். கட்டுகள் மின்னல் வேகத்தில் டிராக்டரில் ஏறும். கை நரம்பின் சாறனைத்தும் கரும்புக்கு மாறும். உயிரைப் பிழியும் அந்த உழைப்பை அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்... உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை.. ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று, நெஞ்செலும்பின் வியர்வையில் உறைந்து ஆவியாகும். அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை பழம் நோகாமல் முதுகுத் தண்டில் தூக்கிப்போகும், கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..? இந்த வயதில்... வண்டியில் வலம் வந்து, கடலைப்போட்டு, கலாய்க்காமல் எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில் காய்த்ததுபோல் அடுக்கிவைத்து எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில் தென்னை மரத்தின் வேர்கள் மிதிக்கும் கால்களில் தெரியும்..! உடல் வழுக்கும் வியர்வை வெட்கப்பட்டு ஓடி இளநீரின் கண்களில் ஒளியும்..! இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..! இளநீர் சூடு.....

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!

படம்
தி ரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..? கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தன...

"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.

படம்
சு டலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு, எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரிட்சயமானதாகவே இருக்கும். குறுகலான தெருவின் கடைசிக்கு முன்பாகவுள்ள, இடது வாசல் வீட்டுக்குள் நுழைந்தால் மெல்லிய தேகத்தோடு வரவேற்பார் தி.க.சிவசங்கரன்.. சுருக்கமாக தி.க.சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பங்காற்றிய இவருக்கு இப்போது 85 வயது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டபிறகு, புத்தகங்களும் இவரும் மட்டுமே வசிக்கின்றனர் அவ்வீட்டில். எப்போது போனாலும் வாசல் வரைக்கும் எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்கும் பண்புடையவர். நாற்காலியை கொடுத்து அமரச் சொல்லிவிட்டு பல்செட் எடுத்து அணிந்துகொண்டுதான் அடுத்த வார்த்தைப் பேசுவார். அவரைப்பற்றி நாம் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அவர் சொல்வதே அதிகமாக இருக்கும். பேசவும், எழுதவும் இப்போதும் அலுக்காத மனிதர். எங்கிருந்தோ அஞ்சலில் வரும் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு, இரண்டு வரியாகவது தட்டிக்கொடுத்து கடிதம் எழுதிவிடுகிறார். தீவிர இலக்கிய இதழ்கள் முதல், தினமணி வரைக்கும் இவரது விமர்சனங்களைத் தாங்கிய கடிதங்கள் இப்போதும் சென்றுகொண்டிருக்க...

வாழ்க்கை என்னும் பிசாசு..!

படம்
ப டிக்கட்டுக்களை உயர்வின் அடையாளமாக உருவகப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ படிக்கட்டுகள்தான் பயமுறுத்தும் பிசாசுகள். "இந்த உலகில் எங்கு திரும்பினாலும் படிக்கட்டுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு படிக்கட்டைப் பார்க்கும்போதும் நடுக்கமாக இருக்கிறது.." வலுவிழந்த குரலில் பேசும் இவர்கள் ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவர்கள். சராசரி உடல் ஊனமுற்றவர்களின் வேதனையை விட இவர்களின் தினசரி வாழ்க்கை ரணம் மிகுந்தது. இந்த பூமிக்கு வாழ வந்த நாள்முதலாய் சிறு, சிறு செய்கைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது இவர்களுக்கு. காலை எழுந்ததும் சிறுநீர் கழிப்பதில் தொடங்கும் சங்கடம் இரவு படுக்கைக்குப் போகும் வரையிலும் விடுவதில்லை. இதற்கெல்லாம் மெல்ல, மெல்ல மனதளவிலும், உடலளவிலும் பழகிவிடுகிறார்கள் என்றாலும், ஒவ்வொருமுறை ஊனத்தின் அசௌகர்யத்தை அனுபவிக்கும்போதும் அடையும் வேதனையை அவர்களால் மட்டுமே முழு வீச்சுடன் உணர முடியும். அப்படியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற நண்பர்கள், மனம் விட்டு பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கு அப்படியே தருகிறேன். 1.இறைவன் எங்களை இப்படி படைத்துவிட்டாலும், எங்களுக்கும் தெய்வ பக்தி உண்டு....

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

படம்
பெ ண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார்..? ஏவாளை முதலில் படைத்து, பின் அவளின் விலா எழும்பிலிருந்து ஆதாமை படைத்திருக்கக்கூடாதா..?' என்பதான கருத்துக்கள் கூட புதிதில்லைதான். 'ஆண்தான் முதலில்' என்ற கருத்தாக்கம் மனதெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்கும். அதில் வியப்பேதும் இல்லை. அந்த வரலாற்றின் வீதிகளிலிருந்து, நடைமுறை வாழ்வு வரைக்கும் பெண் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருப்பது குடும்பம் என்னும் அமைப்புதான். அதிகாலை தூக்கத்தின் சுகம்(?) குறித்து சிலாகிக்கும் கவிதைகள், கதைகள் நிறைய படிக்கிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆனால், 95 % பெண்கள் அதிகாலை தூக்கம் துறந்து பல தலைமுறைகளாகிவிட்டது. கிராமமென்றால் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, வீட்டு முற்றம் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரம் விளக்கி, மாட்டுக் கொட்டகை கூட்டி, சாணம் அள்ளி எருக்குப்பையில் போட்டு, குடிக்க நல்ல தண்ணீரும், புழங்க உப்புத்தண்ணீரும் எடுத்து வைத்து, பிள்ளை மற்றும் கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து... அவ...