கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!
தி ரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..? கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தன...