இடுகைகள்

மொக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரு, ஆனந்தகண்ணன், குழந்தைப்போராளி, கொரியன் போன்

புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய வாரம் சென்னையின் எல்லா அரங்கங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களால் நிறைந்திருந்தன. பிலிம் சேம்பரில் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா. காம்பியரிங் செய்ய ஆனந்த கண்ணனும், நிஷாவும் வந்திருந்தனர். அவர்களுக்கு புத்தகத்தின் பெயரும் தெரியவில்லை. ரவி சுப்ரமணியம் என்பது ஒரே பெயர் என்பதும் தெரியவில்லை. எதன்பொருட்டு இந்த காம்பியரிங் கூத்து? ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்குபவர்களோ, உயிர்மை வெளியீட்டு விழாவுக்கு வருபவர்களோ காம்பியரிங் கண்டு மயங்குபவர்கள் இல்லை. அப்படி மயங்குவதற்கு நிஷாவும் பிரமாதமான பிஹர் இல்லை. (அதற்கு தமிழச்சியே தேவலாம்). அந்த பொண்ணுக்குு பல தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கவேத் தெரியவில்லை. அழைப்பிதழில் 'தேணுகா, கும்பகோணம்' என்பது மாதிரிதான் போடுவார்கள். அதைப்படித்துவிட்டு, 'தேணுகா கும்பகோணம் அவர்கள் இப்போது பேசுவார்' என்று கூத்தடித்தார்கள். கடைசியில் 'இந்த புத்தகத்தை இன்னாருக்கு டெடிகேட் செய்கிறேன்' என்று சொல்லாததுதான் பாக்கி என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ஒருவர். ------00000----------00000------00000000000...

காதல் கடும்புனல்.!

படம்
"வேண்டாம் பாஸு.. வெளியிலேர்ந்து பார்க்கத்தான் இது கலர்ஃபுல்லா தெரியும். ஆனா பயங்கர பெயின்ஃபுல்லான விஷயம். நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..? இதுல சிக்கனும்னு ஆசைப்படாதீங்க" -தபூசங்கரின் கவிதையை தன் கவிதையென்று சொல்லி காதலியிடம் கொடுப்பதற்காக அகால இரவொன்றில் பிரதி எடுத்துக்கொண்டிருக்கும் அறை நண்பன் சொல்கிறான், காதல் குறித்த தன் வரைவிலக்கணத்தை. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே பெண்ணை நான்கு மாதங்களாக காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை அவனுக்கு.! இன்று வரை எனக்கு கைகூடாத ஒரு கலையாகவே இருக்கிறது காதல். அது எப்படி எவ்விதம் சாத்தியப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. காதலிக்க அலையும் மனசும், யதார்த்தம் அதற்கு எதிர்மாறாகவும் இருக்கும்போது, காதலிப்பவர்கள் அனைவரும் சாகசக்காரர்களாகவே படுகிறார்கள். என் சாமர்த்தியங்களாக சுற்றம் சொல்லும் யாவும், காதலிப்பவன் முன்னால் கால்தூசு என்றால் நீங்கள் சிரிக்கக்கூடும். அடைய முடியாததன் ஏக்கத்துயர், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவை. உலகம் காதலால் நிறைந்திருக்கிறது; காதலிக்கும் நிமிடங்கள் அனைத்தும் தேவகணங...

காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!

படம்
"தோ ழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பை விட அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 'என்னடா இது.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எலி ஜட்டி போட்டுகிட்டுப் போகுதே..'ன்னு எனக்கு ஆச்சர்யம். "ம்... குவாட்டர் அடிச்சுட்டு குப்புறடிச்சு தூங்கனும்.." என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை. "தோழர்.. உங்களை வெவரமானவர்னு நினைச்சுதானே இதை கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.." "எல.. நான் சொன்னனா நான் வெவரம்னு. நீங்களா நெனச்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய..?" "சும்மா சொல்லுங்க தோழர்.. காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க..?" "இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு.. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொ கூட சுத்துறமாறி என்கிட்ட கேக்க. கழுத.. நம்மளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக் கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழிகேட்ட மாதிரி நல்லா கேட்டப்போ. அது சரி.. என்ன திடீர்னு காதலைப்பத்தியெல்லாம் கேக்க..?" காலக்கொடுமை, அந்தக் கேள்விய...

நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?

படம்
வி யர்வை பிசுபிசுக்கும் பேச்சுலர் அறையின் நெடியிலிருந்து தப்பித்து தனி அறையில் அடைக்கலம் புகலாம் என முடிவு செய்து, மேன்ஷன் அல்லாத புதிய அறையென்றை நான் தேட ஆரம்பித்திருந்த செவ்வாய்கிழமையன்று அவளை சந்தித்தேன். அன்றுதான் டாக்டர் ராமதாஸ், 'இந்த அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதற்காக பா.ம.க. வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காது..' என்று வெளியிட்ட அறிக்கை தினத்தந்தியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. 'டாக்டர் பின்றாரே..' என்று யோசித்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் கையில் லெதர் பேக்குடன் அவள் என்னைக் கடந்து சென்றாள். காலையில் தலையில் வைத்த மல்லிகை லேசாக கறுத்துப் போயிருந்தது. அவளை எனக்கு அறிமுகமில்லை. ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...? சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு நண்பனை துட்டுக் கொடுக்கச் சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதற்காகப் போனேன். அப்போது அவள் திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் தன் மென் பாதங்களால் நடந்துபோனாள். சாம்பாரின் மணம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது. தயக்கமேதுமி...