இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

படம்
இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந

தேசபக்தி... அயோக்கியர்களின் கடைசி முகமூடி

படம்
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது. அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?’ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்னை பண்பலை வானொலிகள் பலவற்றில் அன்று இதைப்பற்றிதான் மூச்சுவிடாமல் பேசினார்கள். ரேடியோ மிர்ச்சியில் அஞ்சனா என்ற ரேடியோ ஜாக்கி இதைப்பற்றி நேயர்களிடம் தொலைபேசி வழியே உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை செய்துகொண்டிருந்தார். அவர், ‘எனக்கு இதை சொல்றதுக்கு நாக்கு கூசுறது. இருந்தாலும் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நாமல்லாம் பிரே பண்ணுவோம். என்னப் பண்றது... நம்ம நிலைமை இப்படில்லாம் சொல்ல வேண்டியிருக்குது’

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது . தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள் . தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள் . தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது . அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள் . இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல . இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது . அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை . இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும் , ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன் . இந்திய பார்ப்பன மனநிலையும் , பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘ சமூக அ

தலித் முரசை ஆதரிப்போம்!

படம்
இறுகி கெட்டித்தட்டிப்போய் கிடக்கும் இந்திய, தமிழக சாதி அடுக்குகளை நோக்கி கல் எறிய வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் சமூகத்தை நேசிக்கிற நம் அனைவருக்குமே இருக்கிறது. பேச்சு, எழுத்து, உடை, உணவு அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியை அதிலிருந்து விலக்கம் செய்து அனைவருக்குமான மானுடத்தை அன்பால் கட்டியமைப்பதுதான் சுதந்திரமான, சுயேச்சையான ஜனநாயகத்துக்கான வழி. இந்தப் பொறுப்பை முன்னின்று செய்ய எல்லோராலும் இயலுவதில்லை. கடந்த 13 ஆண்டு காலமாக தமிழ் சூழலில் தலித் முரசு இதழ் இந்தப் பணியை முன்னின்று செய்து வருகிறது. தமிழ் பண்பாடு என்பதே சாதிப்பண்பாடாகவும், தமிழ் கலாசாரம் என்பதே சாதிக் கலாசாரமாகவும் இருக்கிற சூழலில் விளிம்புகளின் குரலை, வாழ்வை உரத்துப் பேசும் தலித் முரசின் பணி ஒப்பிட இயலாத ஒன்று. ஆனால் முற்போக்கு சக்திகளுக்கு வாய்வழி ஆதரவை மட்டும் வழங்கி, அவர்களின் நாளாந்த வேலைத் திட்டங்களுக்குக் கை கொடுக்காமல் ஒதுங்கி இருக்கும் நமது தொன்றுதொட்டப் பழக்கம் தலித் முரசுவுக்கும் தொடர்கிறது. மிகுந்த பொருளாதார தள்ளாத்துடன் 13 ஆண்டுகளை கடத்தி இருக்கும் தலித் முரசு இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் ச

எங்கள் கிராமத்தில் குளம் இருந்தது..!

படம்
வழி தவறிய இரண்டு மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதைகள் இருந்தன கடல் இல்லை -இலக்குவண் ‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமானவை. எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் மக்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும். சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள் சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீ

கங்காணி..!

படம்
அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பான். எப்படியோ அப்படி ஒரு பேராகிப்போச்சு. இன்ன வேலைன்னு கிடையாது.. கல்யாண வீட்டுல பந்தல் போடுவான். தென்னமட்டைவொளை வாங்கியாந்து ஊறவச்சு, நறுவுசா கீத்து பின்னுவான். இங்கேருந்து கருக்காக்கோட்டை வரைக்கும் கூரை மேய போவான். மீன்வாங்கப்போனபய, குளத்துல இறங்கி வலை போட்டுகிட்டு நிப்பான். சித்தன்பாடு, சிவன்பாடுதான் அவம் பொழப்பு. ஆனா அவனுக்குன்னு ஒரு காலம் உண்டு. அந்த நேரத்துல அவன்தான் ராசா. ஆத்துல தண்ணி வந்துட்டா ஊருக்குள்ள பெரிய வாத்தியைவிடவும் அவனுக்குதான் மதிப்பு அதிகம். எந்த விவசாய வேலையா இருந்தாலும் கூலியாளுக்கு அவன்கிட்டதான் வந்தாகனும். சேறடிக்க, வரப்புவெட்ட, நாத்தறிக்க, ஏர் ஓட்ட, பரம்பு செட்டு வைக்க, நடவு நட, களைபறிக்க, அறுப்பு அறுக்கன்னு எல்லாத்துக்கும் அவன்தான் கங்கானி. இன்ன கிழமைக்கு இன்ன வேலைக்கு இத்தனை பேரு வேணும்னு ரெண்டு நாளைக்கு முந்தி சொல்லிட்டாப் போதும்... டான்னு ஆளோட வந்துடுவான். அதுக்கு முன்னாடி கூலியாளுக்க

சாரு, ஆனந்தகண்ணன், குழந்தைப்போராளி, கொரியன் போன்

புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய வாரம் சென்னையின் எல்லா அரங்கங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களால் நிறைந்திருந்தன. பிலிம் சேம்பரில் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா. காம்பியரிங் செய்ய ஆனந்த கண்ணனும், நிஷாவும் வந்திருந்தனர். அவர்களுக்கு புத்தகத்தின் பெயரும் தெரியவில்லை. ரவி சுப்ரமணியம் என்பது ஒரே பெயர் என்பதும் தெரியவில்லை. எதன்பொருட்டு இந்த காம்பியரிங் கூத்து? ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்குபவர்களோ, உயிர்மை வெளியீட்டு விழாவுக்கு வருபவர்களோ காம்பியரிங் கண்டு மயங்குபவர்கள் இல்லை. அப்படி மயங்குவதற்கு நிஷாவும் பிரமாதமான பிஹர் இல்லை. (அதற்கு தமிழச்சியே தேவலாம்). அந்த பொண்ணுக்குு பல தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கவேத் தெரியவில்லை. அழைப்பிதழில் 'தேணுகா, கும்பகோணம்' என்பது மாதிரிதான் போடுவார்கள். அதைப்படித்துவிட்டு, 'தேணுகா கும்பகோணம் அவர்கள் இப்போது பேசுவார்' என்று கூத்தடித்தார்கள். கடைசியில் 'இந்த புத்தகத்தை இன்னாருக்கு டெடிகேட் செய்கிறேன்' என்று சொல்லாததுதான் பாக்கி என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ஒருவர். ------00000----------00000------00000000000