இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் கடும்புனல்.!

படம்
"வேண்டாம் பாஸு.. வெளியிலேர்ந்து பார்க்கத்தான் இது கலர்ஃபுல்லா தெரியும். ஆனா பயங்கர பெயின்ஃபுல்லான விஷயம். நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..? இதுல சிக்கனும்னு ஆசைப்படாதீங்க" -தபூசங்கரின் கவிதையை தன் கவிதையென்று சொல்லி காதலியிடம் கொடுப்பதற்காக அகால இரவொன்றில் பிரதி எடுத்துக்கொண்டிருக்கும் அறை நண்பன் சொல்கிறான், காதல் குறித்த தன் வரைவிலக்கணத்தை. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே பெண்ணை நான்கு மாதங்களாக காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை அவனுக்கு.! இன்று வரை எனக்கு கைகூடாத ஒரு கலையாகவே இருக்கிறது காதல். அது எப்படி எவ்விதம் சாத்தியப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. காதலிக்க அலையும் மனசும், யதார்த்தம் அதற்கு எதிர்மாறாகவும் இருக்கும்போது, காதலிப்பவர்கள் அனைவரும் சாகசக்காரர்களாகவே படுகிறார்கள். என் சாமர்த்தியங்களாக சுற்றம் சொல்லும் யாவும், காதலிப்பவன் முன்னால் கால்தூசு என்றால் நீங்கள் சிரிக்கக்கூடும். அடைய முடியாததன் ஏக்கத்துயர், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவை. உலகம் காதலால் நிறைந்திருக்கிறது; காதலிக்கும் நிமிடங்கள் அனைத்தும் தேவகணங