அறிமுகம் - ஆழியூரானாகிய நான்..!
பு ரசைவாக்கம் நெடுஞ்சாலை, நேரே சென்று முட்டுமிடத்தில் கெல்லீஸ் சிக்னல் இருக்கிறதில்லையா.. அதனருகிலிருக்கும் உயர்ந்த கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரியவர் மெஸ் போல ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். கீழே ஊர்ந்து நகரும் வாகனங்களையும், அதில் அமர்ந்தபடி ஏதோவொரு காண்டம் விளம்பரத்தில் வருவதுபோல, காதலனின் காதுமடல் கடிக்கும் காதலியின் சில்மிஷங்களையும் ரசித்தபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த விநாடியொன்றில்தான் பாலபாரதி, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை சொன்னார். இணையம், பிளாக், தமிழ்மணம்... என்றெல்லாம் அவர் சொல்லியவை, ஏதோ வேற்றுகிரக மொழிபோலவே தோன்றியது. அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே திடீர், திடீரென்று செல்போனை காதில் வைத்தபடி டோண்டு, போலிடோண்டு, சூடுபறக்குது, அனல் அடிக்குது.. என்றெல்லாம் யாருடனாவது மணிக்கணக்கில் பேசப்போய்விடுவார். கேட்கும் நமக்குதான் ஒரு எழவும் புரியாது. திடீரென்று ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பின் வழியே சில தகவல்களைக் கேட்டுக்கொண்டு, சில நிமிடங்களில், 'இதுதான் உன் பிளாக்கின் முகவரி..' என்று அவர் சொன்னபோது, தனக்கான முதல் பா.க.ச...