இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

படம்
இ ந்து சமய அறநிலையத் துறை தொடர்பான சர்ச்சை இப்போது மீண்டும் செய்திகளில் முன்னிலை பிடித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ‘தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என பா.ஜ.க.வின் சில தலைவர்கள், அனுதாபிகள் கோரி வருகின்றனர். உண்மையில் இது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கோரிக்கை. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, இந்தக் கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உருவான வரலாறு என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியமானது. அது கருணாநிதி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டமோ, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கொண்டுவரப்பட்ட சட்டமோ அல்ல. தமிழக கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்ட வரலாறு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தொடங்குகிறது.    தமிழ்நாடு சட்டம் 22/1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை மட்டுமல்ல... சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நிலையங்களை

லிங்காயத்... இந்தியாவின் புதிய மதம்!

படம்
'' நா ம் எல்லோரும் இந்துக்கள்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள நிலையில், ’’நாங்கள் இந்துக்கள் அல்ல” என்ற முழக்கத்தோடு பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக எழுந்து நிற்கிறார்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகள்.  தங்களை தனி மதமாக அங்கீகரிக்கக்கோரி லிங்காயத்துகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும்   மேலாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்தான், இப்போது கர்நாடகாவை ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டிய இடத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது. ‘லிங்காயத்துகள் தனி மதம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு ஏற்கப் போகிறதா, நிராகரிக்கப்போகிறதா என்பது இப்போதே கர்நாடகாவின் பரபரப்பான பேசுபொருளாகிவிட்டது. மிக விரைவில் கர்நாடக மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சித்தராமையாவின் இந்த மதிநுட்பமான அறிவிப்பு தேர்ந்த அரசியல் காய் நகர்த்தலாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவை பொருத்தவரை லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிக்கர் பிரிவினரே பெரும்பான்ம

’’உங்களுக்கு நான் சொல்றது விளங்குதுன்னு நினைக்கிறேன்’’- சீமான் பேட்டி

படம்
‘‘450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்னு அறிவியல் சொல்லுது . அதைத்தான் என் பாட்டன் ‘ அகர முதல எழுத்தெல்லாம் ’ னு சொன்னான் . ஹைட்ரஜன் ஒரு விழுக்காடும் ஆக்ஸிஜன் ரெண்டு விழுக்காடும் இருந்தா நீர் உருவாகுது . இதைத்தான் என் முப்பாட்டன் ‘ நீரின்றி அமையாது உலகு ’ னு சொன்னான் . அந்த தண்ணியை ; இயற்கையை வழிபட்டவங்கதான் நம்ம அப்பத்தாவும் , முப்பாட்டனும் . அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான் , ஓசோன் மண்டலத்துல ஒட்டை . எல்லாத்தையும் மீட்கணும் . மொழியை , பண்பாட்டை , இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம் . நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன் . ஆனா காட்டுல வாழ்ற மானும் , மயிலும் , சிங்கமும் , புலியும் எங்கிட்டு போய் தண்ணி வாங்கிக் குடிக்கும் ? உங்களுக்கு நான் சொல்றது விளங்குதுன்னு நினைக்கிறேன் ’’ - இப்படித்தான் ஆரம்பித்தார் சீமான் . ‘ நாம் தமிழர் கட்சி ’ தலைவர் என்பது சீமான் பற்றி இதுவரை நாம் அறிந்து