இடுகைகள்

2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனம் கோர்ட்டார் அவர்களே...இது நியாயமா..?

'க ல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை. எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...? நீங்கள் விரும்பினாலும் ,விரும்பாவ

பிணம் திண்ணும் கோக்..

படம்
உ லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வ

காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார்..?

ப னிப்படலம் போல மனதில் படிந்திருக்கும் மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் 'இயற்கை' .அதன் இயக்குனர் ஜனநாதன் எடுத்திருக்கும் 'ஈ' படத்தை கடந்தவாரம் பார்த்தேன். உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு காசு பார்க்கும் இரக்கமற்ற வியாபாரம் பற்றியும்,உலகை ஆட்டிப்படைக்கும் 'பயோவார்' என்ற மறைமுக யுத்தத்தைப் பற்றியும் வெகுஜன ஊடகத்தில் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.ஆனால் படத்தின் இறுதி காட்சியில்தான் கொஞ்சம் முரண்படுகிறார். வினோதமாக அமைக்கப்பட்ட ஒரு டவரின் உயரத்தில் உலக தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி புரட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி கம்யூனிசம் பேசும் பசுபதி, அதற்கு முந்தைய அல்லது பிந்தைய காட்சியில் காந்தியின் சத்தியசோதனைப் படிக்கிறார்.சத்தியசோதனை படித்துக்கொண்டே,'துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்று மாவோயிசம் பேசுகிறார்.'நான் உங்களை மாதிரி படிச்சவன் கிடையாது..'என்று சொல்லும் ஹீரோ ஜுவாவிடம் 'மக்கள்கிட்ட போ..மக்களைப் படி..அதைவிட வேற பெரிய பாடம் எதுவும் த

நீயே பீ அள்ளு..

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி.. நினைவுக்கு வரட்டும் அவன் பிறப்பு.. -பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது 'கொஞ்சூண்டு..' என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் 'கொஞ்சூண்டு' என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது. செண்ட் பூசிய பணக்கார பிணம்.. துர்நாற்றமடிக்கிறது எரிக்கையில்.. உறக்கம் பிடிக்கவில்லை.. கனவிலும் பீ துடைப்பம்.. நாத்தம் குடல புரட்டுது.. சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்.. மறுபடியும் அவிய்ங்க பேல.

மணற்கேணி..

தோ ண்ட தோண்ட சரிந்து கொண்டேயிருந்தது மணல்.புதைமணல்.கால் வைத்தால், பொலபொலவென்று உள்ளே சரிந்து கொட்டியது.முப்பதடி ஆழக்கிணறு,ஒரு நிமிடத்தில் இருபதடியாகக் குறைந்திருந்தது.கிணற்றின் மேற்குக் கரையிலிருந்து உள்ளுக்குள் சரிவாக இறங்கிக் கிடந்தது மணல்.கிணற்றைச் சுற்றி ஒரேக் கூட்டம்.நசநசவெனச் சத்தம். "உசுரு இருக்குடா வேம்பையா...எப்படியாச்சும் காவந்து பண்ணிடனும்டா..கோயிந்தன் கையை ஆட்டுறான் பாரு.சடுதியா ஏதாவது பண்ணனும்மப்பா.."-பதற்றம் தெறிக்கச் சொல்லிக் கொண்டிருந்தான் காளி. "காலை வச்சாலே பொத மணலு உள்ள இழுக்குது மாமா..ஊத்துத்தண்ணி வேற நிக்க மாட்டேங்குது.." சொல்லிக்கொண்டே கோயிந்தனை நெருங்க ஏதாவது தோது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன். விடிகாலையில் நீராகரத்தைக் குடித்துவிட்டு, வீட்டுக்காரி பெருமாயியை காலைக்கஞ்சி கொண்டுவரச் சொல்லிவிட்டு, வாத்தியார் வீட்டுக் கொள்ளையில் கிணறு தூர் வாரக் கிளம்பியக் கோயிந்தன்,இப்படி மண் சரிந்து சிக்கிக்கொண்டது யாரும் எதிர்பாராதது. ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருதார்கள்.ஏதேதோ யோசனைகள்.கிணற்றுக் கரையில் ஓங்குதாங்

இந்து கடவுளுக்கு மட்டு்ம் சலுகை ஏன்..?

இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்கிறோம்.ஆனால் சில எதிர்பாராத தருணங்களில்தான் பல விஷயங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன. சமீபத்தில் வேலை நிமிர்த்தமாய் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றிவர வேண்டிய அவசியம ஏற்பட்டது.சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போனேன்.(சத்தியமா வேலை விஷயமாதாங்க..)அப்போது நான் கவனித்த ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களின் முகப்பில் ஒரு இந்து கோயில் இருக்கிறது.ஒரு காவல் நிலையத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கலாம்.(பார்க்கிறார்கள்).அப்படியிருக்கும்போது ஒரு தனிப்பட்ட மதத்துக்கு மட்டும் வழிபாட்டுத் தளம் அமைத்திருப்பது ஏன்..?இறைபக்தி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..பிள்ளையாரை வழிபடும் நீங்கள் கோயில் கட்டிக்கொண்டால் கர்த்தரை வழிபடுவோரும்,அல்லாவை தொழுவோரும் எங்கே போவார்கள்..? எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..? அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடுப் பார்த்தால்தான் போலீஸ் ஸ்டேஷன்கள் எ

லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?

வலைப்பூக்களில் அண்மை நாட்களாகவே லிவிங்ஸ்மைல் வித்யாவை குறிவைத்து மறைமுகமான தாக்குதல்கள் நடைபெற்றுவந்தன.அது இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது.`லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்` என்ற தலைப்பில்,செந்தழல் ரவி வெளியிட்டிருக்கும் பதிவில் அவரது முகம் மட்டுமே தென்படவில்லை.அவரை ஒத்த பலரின் `நாட்டுப்பற்று` முகமும் அதில் தெரிகிறது. "இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்.சக மனிதனை மனிதன் என்று கூட ஒத்துக்கொள்ளாத சாதி சகதியைப் பற்றி அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் திருநங்கைகளுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.ஒடுக்கப்பட்ட தளத்தில், தலித்துகள் வாழ்வியல் காரணங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது,அதனோடு சேர்த்து தங்களின் பாலியல் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள். பேருந்தில் ஏறினால் நிலைகுத்திய பார்வையோடு உற்றுபார்ப்பது முதல், சாலையில் செல்லும்போது வெறித்து வெறித்துப் பார்த்து சங்கடப்படுத்துவது வரை திணசரி வாழ்க்கையில் அவர

வணக்கம்

படம்
`நடை வண்டி` என்ற தலைப்பைப் பார்த்திருப்பீர்கள்.அதன் கீழேயே`மரபு உடைக்க பழகு` என்ற எழுத்துகளும் இருக்கும்.இரண்டையும் பார்த்து விட்டு,`வந்துட்டாய்ங்கய்யா கோடரி தூக்கிக் கிட்டு.. மரபு உடைக்க`என்றோ,`மரபு உடைக்க பழகச் சொல்லிவிட்டு தமிழ் மரபின் அடையாளமான நடை வண்டியைத் தலைப்பாக்கியிருப்பது ஏன்..?`என்றோ நினைக்கலாம். நிற்க.வெயில் காலத்தில்`எவ்வளவு மழையா இருந்தாலும் சமாளிச்சுடலாம்..வெயில்தான் பெரியக் கொடுமை..`என்றும்,அடைமழை நேரத்தில் இதற்கு எதிர்மாறாகவும் பேசும்,முரண் சிந்தனை நமது சமூகத்தின் அடிநாதமானது.அதில் நானும் ஒருவன்.அப்படியான முரண் சிந்தனைகளை கூடி விவாதிக்கவும்,புதிய தளத்தில் நடந்து பழகவும்தான் இந்த நடைவண்டி. வண்டியோட்டியான நான்,தஞ்சாவூர்காரன்.வண்டல் மண்ணின் வாசனையோடு பெருநகரத்தில் வாழ்பவன் அல்லது பிழைப்பவன்.அப்புறமென்ன..? முடிந்தவரை அடிக்கடி பதிவு போட முயற்சிக்கிறேன்.