இடுகைகள்

பிப்ரவரி, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெய்வங்களைக் காப்பாற்றுவோம்

ந ம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும். நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது. 'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும

காதலிக்க யாருமில்லை..

படம்
'தே வதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லி வைத்த பொய்கள்..' என்று பனிக்கூழ் வார்த்தைகளில் உரு(க்)குகிறார் பழனிபாரதி. 'பெண் இல்லாத ஊரிலே கொடி பூ பூப்பதில்லை..' என மிகை வார்த்தைகளால் மிரட்டுகிறார் வைரமுத்து. கேட்கும்போது சுகமாகத்தான் இருக்கிறது.உணரும்போதுதான் வருத்தமும், கழிவிரக்கமும் வந்துவிடுகிறது.நம்புங்கள் நண்பர்களே....காதலை சொந்த அனுபவத்தில் உணராத சபிக்கப்பட்ட இளைஞர்கள் எனைபோல் பெருங்கூட்டம் இங்குண்டு.உடனே, 'நல்லா யோசிச்சுப் பாரு...காதல்ல சிக்காதவன் எவனுமே இருக்க முடியாது.ஒண்ணு நீ காதலிச்சுருக்கனும்.இல்லை...உன்னை யாராவது காதலிச்சுருக்கனும்.ஆனா கட்டாயம் காதல் உன்னைக் கடந்துப் போயிருக்கும்..' என்று அறிவுரை வார்த்தைகளை கை நிறைய அள்ளி வீச தயாராக வேண்டாம். இந்த வார்த்தைகளை கேட்கும்போதுதான் ரொம்பவே கலக்கமாக இருக்கிறது. 'டீக்கடை முக்குல நின்னு,நாலு நாளு சிரிச்சு,சிரிச்சுப் பார்த்துச்சே...அந்தப் பிள்ளையா இருக்குமோ...? அந்த ராஜாளியார் வீட்டுபிள்ளை எப்பவும் எகனமொகனயா கிண்டல் பண்ணுமே..அதுவா..? 'உனக்கு வெள்ளை சட்டை நல்லாயிருக்கு..'ன்

அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

படம்
உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள்.கலாச்சார,பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம். திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறமாக இருக்கிறது இந்த முகாம்.சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிர்ப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது.தன் மண்ணையும்,மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு, உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.கணவன் இங்கு...மனைவி அங்கு...பிள்ளை இங்கு...தாய் அங்கு..என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது.கேட்டபொழுதில் கதைப்பதற்கும்,பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின