நன்றி நண்பர்களே..!
'அ ரசமரத்தை சுத்திவந்து அடிவயித்தை தடவிப்பார்த்தாமாதிரி' என்றொரு பழமொழி உண்டு. 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-7.00 மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகே சந்திப்பு என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் யாரையும் காணாத நிலையில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வந்தது. ஆனாலும் பெருவாரியாக கலந்துகொண்டு நண்பர்கள் என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டனர். முதல் ஆளாய் வந்தவர் மரக்காணம் பாலா. அதன்பிறகு பைத்தியக்காரன் வர, மெல்லிய தூரலை தன்னுடனேயே அழைத்து வந்தார் லிவிங் ஸ்மைல் வித்யா. ''எப்படியும் இங்கனதான் எங்கயாச்சும் கும்மியடிப்பீங்கன்னு தெரியும். அதான் போன் பண்ணாம நாமளே கண்டுபிடிச்சுடலாம்னு வந்துட்டேன்.." என்று ஹெல்மெட் கலட்டியபடியே வந்தமர்ந்தார் நந்தா. சற்று நேரத்தில் சிவாஜி மொட்டை பாஸ் போல கறுப்பு டி-சர்ட்டில் ஹீரோ கணக்காக வந்த அந்த நபர், வந்தவர்களின் பெயரையெல்லாம் விசாரித்துவிட்டு, தன் பெயர் சொல்ல சின்னதாய் சஸ்பென்ஸ் வைத்து 'நான்தான் இளவஞ்சி' என்றார். புதியவர்களின் திடீர் சந்திப்பின்போது கவிழும் மௌனத்தை தன் நகைச்சுவையால் அவ்வப்போது உடைத்தார். அப்புறம் வரிசையாக லக்கிலுக், பாலப...