இடுகைகள்

ஜனவரி, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.

படம்
"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு. ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை. என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை. ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய

நாடார்..வெள்ளாளர்..கிறிஸ்டின்..-பேரா.ஆ.சிவசுப்ரமணியனுடன் ஒரு சந்திப்பு..

'எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட,எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல்.கடந்த காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பாத எந்த சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்..' -ஆனந்த விகடனில் வெளிவந்த 'தமிழ்மண்ணே வணக்கம்..' தொடரில் பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன் சொன்ன வார்த்தைகள் இவை. கே.ஆர்.விஜயாவையும்,டி.வி.சுந்தரம் அய்யங்காரையும் இன்ஷியலோடு தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் சொந்த தாத்தாவின் தந்தையார்/தாயார் பெயர் தெரிவதில்லை.இரண்டு தலைமுறைக்கு முன்பு, நகரங்களுக்கு குடிபெயர்ந்த குடும்பங்களின் இளைஞர்/யுவதிகளிடம், 'உங்களின் பூர்வீக ஊர் என்ன..?' என்று கேட்டால், 'தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்..' என்பதுதான் பதிலாக இருக்கும்.பூர்வீக கிராமத்தில் சொத்துகள் இருந்தால் மட்டும்,கிராமத்தைப்பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.இது யார் தவறு..?தன் சந்ததிக்கு குடும்ப வரலாற்றை உணர்த்தாத பெற்றோரின் தவறா..?அல்லது தன் பெற்றோரின் குடும்ப வழி வரலாற்றை தெரிந்து கொள்ளாதது பிள்ளைகளின் தவறா..?தன் முன்னோர்களின் வரலாறுபற்றி அக்கரை இல்லாத ஒருவர் தன் சந்ததியை சரியாக வழிநடத்துவார் என்று ந