இடுகைகள்

ஆகஸ்ட், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த சுதந்திரம் யாருக்கானது...?

படம்
"உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாங்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்காரக்கூடாது. மரப்பலகைகளில் உட்காராமல் தனியாகக் கோணி சாக்குகளை விரித்து அமர வேண்டும். உயர் வகுப்பு மாணவர்கள் எங்களுடன் பேசக்கூடாது. பேசினால் பாவமாம். உயர்சாதி ஆசிரியர்களும் அவ்வாறே நடந்துகொண்டார்கள். எங்கள் புத்தகங்களைக் கூட தொட மாட்டார்கள். தொட்டால் தீட்டு. தண்ணீர் தாகம் எடுத்தால் நாங்களே எடுத்துக் குடித்துவிட முடியாது. உயர்சாதி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். ஒதுங்கி நின்று அவர்கள் ஊற்றும் நீரை மேலே அண்ணாந்து வாயைத் திறந்து குடிக்க வேண்டும்........ ஒரு முறை எங்கள் தந்தையாரை புகைவண்டி நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டு, நானும் என் சகோதரனும் அங்கு சென்றோம். ஆனால், அவருக்கு நாங்கள் வருவது குறித்து அனுப்பிய தகவல் சென்று சேரவில்லை. இதனால் ஒரு மாட்டுவண்டி ஒன்றில் தந்தையாரின் இருப்பிடத்துக்குச் சென்றோம். சென்றுகொண்டிருக்கும்போதே உயர்சாதியைச் சேர்ந்த அந்த வண்டியோட்டி நாங்கள் யார் என்பதை தெரிந்து தன் வண்டியே தீட்டாகிவிட்டதக எண்ணி கீழே குதித்து மாட்டை அவிழ்த்துவிட்டு வண்டியை குடைசாய்த்துவிட்ட

ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம்..

படம்
உன் வயசு என்ன..? 14 உன் பேரு..? கவிதா அம்மா, அப்பா இருக்காங்களா..? இல்லை. இறந்துட்டாங்களா..? இல்ல. அப்பா ஒரு அம்மாக்கூடப் போயிட்டாரு. அம்மா வேறொரு ஆளு கூட போயிருச்சு. எப்ப..? நான் சின்னதா இருக்குறப்ப. நீ யாரிடம் வளர்ந்தாய்..? பாட்டிகிட்ட. பாட்டியும் செத்துருச்சு. அப்புறம் ஒரு பக்கத்து வீட்டம்மாதான் என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க. நீ என்ன வேலை செய்ற..? சின்னதா இருக்கும்போது கரகம் ஆடுவேன். கோயில் திருவிழாவுல உனக்கு எவ்வளவு காசு கிடைக்கும்..? காசு கீழ போடுவாங்க. பொறுக்கி எங்க சின்னம்மாகிட்டக் கொடுப்பேன். அப்புறம் என் சட்டையில குத்துவாங்க. சுமாரா ஒரு நாளைக்கு 20 ரூபாயிலேர்ந்து 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். நா 20 கிடைச்சா அப்படியே கொடுத்துடுவேன். 30 கிடைச்சா ஐஞ்சு, பத்து எத்துக்குவேன். வாங்கித் தின்னுவேன். நிறைய பணம் என்னிக்காவது கிடைக்குமா..? கூட்டம் நிறைய இருந்தா என் சட்டையில பணம் அதிகமா குத்துவாங்க. தினமும் வேலை உண்டா..? இல்ல. சீசன் டைம்லதான் வேலையே. வருசத்துக்கு ஆறு மாசம் சீசன். அப்பத்தான் கரகம் ஆடுவேன். கரகத்துல கண்ணுல கர்ச்சிப் எடுப்பேன். தாம்பளம் வச்சு ஆடுவேன். யார்கிட்ட கத்துகிட்ட.