இடுகைகள்

நீர்ப்பஞ்சம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தண்ணீர் கண்ணீர்

படம்
ஒரு   குடம் நீருக்கு கையேந்தி அலைகிறார்கள் மக்கள் . கோடையின் வெப்பம் அதிகரிக்க ... அதிகரிக்க ... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது . நகரம் , கிராமம் என எந்த வேறுபாடும் இல்லை . '' டவுன்லதான் தண்ணீர் பிரச்னை . கிராமத்துல பரவாயில்லை '' என்ற நிலை , பழங்கதையாகிவிட்டது . இட பேதமின்றி எங்கும் வியாப்பித்திருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு . குளிக்க , துணி துவைக்க , பாத்திரம் கழுவ மற்றும் இன்னபிற அத்தியாவசியத் தேவைகள் எதற்கும் தண்ணீர் இல்லை . தினசரி குளியல் என்பது குறைந்து , இரு நாள்களுக்கு ஒரு முறை என்று முறைவைத்து குளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர் . தண்ணீர் சிக்கலின் கோரமுகம் இனியும் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது . நகரங்களில் , குடிப்பதற்கு கேன் தண்ணீர்தான் என்பது பல ஆண்டுகளாக மக்களுக்குப் பழகிவிட்டது . இப்போது , வீட்டில் புழங்குவதற்கான நீரைக்கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை . '' நிலத்தடி நீர் ரொம்பக் கீழே போயிட்ட தால எங்க அப்பார்ட்மென்டில் போர்வ...