இடுகைகள்

அன்பால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்பால், பெண்பால், அன்பால் - பாரதி தம்பி

படம்
ஒ ருவர் தீண்டத்தகுந்த சாதியில் பிறப்பது அவருடைய தேர்வல்ல . ஆனால் இந்து சாதி அமைப்பு தீண்டத்தகுந்த சாதியில் பிறப்பதினாலேயே அவருக்கு சில மரபுரிமைகளை வழங்குகிறது . அவர் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் அந்த மரபுரிமையின் பலன்களை அனுபவிக்கிறார் . இதைப்போலவே ஆண் என்பதாலேயே பல்வேறு மரபுரிமைகளை ஆண்கள் பெறுகின்றனர் . தங்கைக்கு   சோறும் , தம்பிக்கு மட்டும் ஒரு முட்டையும் சேர்த்து வைப்பதில் இருந்தே பெற்றோர்கள் இதை தொடங்கி வைக்கின்றனர் . உணவில் தொடங்கி உடை வரைக்கும் இந்த மரபுரிமையை துய்த்து வளரும் ஓர் ஆணின் மனம் , மேலாதிக்கப் பண்புகளுடன் இருப்பதை இயல்பு என கருதுகிறது .  இப்படி சொல்வதன் பொருள் , ‘ ஆணாதிக்கத்தை ஆண்கள் விரும்பி ; மனமொப்பி செய்யவில்லை . தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தன்னை அறியாமல் அனுபவிக்கின்றனர் ’ என்பதல்ல . அடிப்படை மனித பண்புகள் கொண்ட எந்த ஓர் ஆணாலும் இந்த சிறப்பு சலுகையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும் . இதற்கு கொள்கையும் ; கோட்பாடும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆனா