இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உழைப்பே உயர்வு: யாருக்கு?

படம்
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறீர்கள்? உங்களை சுற்றியிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் உழைக்கிறார்கள்? பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது உங்கள் ‘உழைக்கும் நேரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது? நிச்சயம் பதில்களின் நிறம் ஒரே மாதிரிதான் இருக்கும். மனிதர்கள் முன்னெப்போதைவிட மிக அதிகமாக உழைக்கும் காலம் இது! இடைவிடாமல் இயந்திரத்தைப் போல எல்லோரும் உழைக்கிறோம். நவீன அறிவியல் நாள்தோறும் விதவிதமான கருவிகளைக் கண்டுபிடிக்கிறது. நியாயமாகப் பார்த்தால், அவை நம் உழைப்பைக் குறைத்து ஓய்வை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், முதலாளிகளின் உற்பத்தியை அதிகரிக்கவே பயன்படுகின்றன. காலை 9 மணிக்கு கிளம்பினால் வீடு வந்து சேர இரவு 8 மணி, 10 மணி ஆகிறது. உழைக்கும் நேரம் மட்டுமல்ல, உழைப்பின் அடர்த்தியும் அதிகரித்துள்ளது. அலுவலகம் செல்பவர்கள் முதல் கூலிவேலை செய்பவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். பசித்த மிருகம் இரை தேடி அலைவதைப் போல... பணம் ஈட்டும் புதிய வாய்ப்புகளை எல்லோரும் தேடுகிறோம். ஓய்வு நேரங்களை பணமாக ம