இடுகைகள்

ஆழிவாய்க்கால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் கிராமத்தில் குளம் இருந்தது..!

படம்
வழி தவறிய இரண்டு மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதைகள் இருந்தன கடல் இல்லை -இலக்குவண் ‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமானவை. எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் மக்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும். சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள் சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீ...

சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!

"நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது" -எங்கோ ப‌டித்த‌திலிருந்து.. 'இன்னைக்கு காலையிலதான் மாமா வந்தேன்..', 'நேத்தே வந்துட்டன்டா..', 'இன்னைக்கு ராத்திரி கௌம்பணும்..' என்பதாக முடிந்துபோகிறது ஊருக்குப் போய்வருதல். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் சொந்த ஊரில் இருந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இனிமேலும் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீள வழியற்ற புதிர்வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டது போன்றிருக்கிறது. எதைப் பெறுவதற்கு இப்படி ஓடுகிறோம் என நினைத்தால் வெறுமையாக இருக்கிறது. யாரோ இடும் கட்டளைக்கு பணிந்து, விசுவாசம் மிக்க அடிமையாக கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வாடிவாசல் திறக்கப்பட்டு சீறும் காளைகளைப்போல, பெருநகரச் சாலைகளில் வாகனங்களை முறுக்கிக்கொண்டு பறக்கிறோம். பசித்துக் குரைக்கும் நாய்க்கு சில ரொட்டித்துண்டுகள்.. மனிதனுக்கு ஏ.டி.எம். இயந்திரம் துப்பும் காகிதத்துண்டுகள். ஆனாலும் எதையும் துறந்துவிட முடிகிறதா.? இந்நகர வீதிகளின் இயங்குத்தன்மைக்கு ஏற்ப கால்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டன என்றாலும், கண்ணுக்குத் தெரியாத சரடு ஒன்று,...