இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாட‌கை

படம்
சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுதான் வீடு பார்க்கும் படலமே ஆரம்பமானது. நாங்கள் இப்போது தங்கியிருக்கும் மேன்ஷன் அறைக்கு ஆளுக்கு 1,000 ரூபாய் வீதம் 3,000 ரூபாய் வாடகைத் தருகிறோம். இதனுடன் மேற்கொண்டும் ஆயிரம் ரூபாய் சேர்த்து 4,000 ரூபாய் வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என முடிவுக்கு வந்தபோது, 'இவ்வளவு பெரிய தொகையை(?) வாடகையாகக் கொடுக்கப்போகிறோம். அதனால் நமக்கு சௌகர்யமான ஏரியாவில், ஓரளவுக்கு வசதியான வீடாகப் பார்க்கலாம்' என்பது எங்களின் முன்முடிவாக இருந்தது. அது எத்தனை முட்டாள்தனமானது என்பது முதல் வீட்டிலேயே புரிந்துவிட்டது. சூளைமேட்டின் வளைந்து நெளிந்து செல்லும் சந்துகளில் ப

அடையாள‌ மீட்பின் அர‌சியல்- தொடரும் உரையாடல்.!

'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு. முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும் அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாதே.. என்ற பதட்டம் தொனிக்கிறது என்பது அவர் சொன்னதன் மைய சாராம்சம். நிச்சயம் அவ்விதம் இல்லை. இருக்கும் சமூக அமைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான/சம அளவு சமூக மதிப்புள்ள‌ பண்பாட்டு, கலாசார அடையாளங்களை வழங்கியிருக்கவில்லை. ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்கும், ஒரு தலித்துக்கும் இடையே கலையப்பட வேண்டிய பண்பாட்டுப் பாகுபாடுகள் நிறைய இருக்கின்றன. இவற்றை சமன்படுத்த யாவற்றையும் அழித்தொழித்து, எல்லோருக்கும் பொதுவான கலாசார, பண்பாட்டுக் கூறுகளை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தின் வெளிப்பாடே அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. அது சரிதான். இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என்பதில் எவ்வித கருத்துபேதமும் இல்லை. உலகெங்க

சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!

"நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது" -எங்கோ ப‌டித்த‌திலிருந்து.. 'இன்னைக்கு காலையிலதான் மாமா வந்தேன்..', 'நேத்தே வந்துட்டன்டா..', 'இன்னைக்கு ராத்திரி கௌம்பணும்..' என்பதாக முடிந்துபோகிறது ஊருக்குப் போய்வருதல். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் சொந்த ஊரில் இருந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இனிமேலும் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீள வழியற்ற புதிர்வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டது போன்றிருக்கிறது. எதைப் பெறுவதற்கு இப்படி ஓடுகிறோம் என நினைத்தால் வெறுமையாக இருக்கிறது. யாரோ இடும் கட்டளைக்கு பணிந்து, விசுவாசம் மிக்க அடிமையாக கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வாடிவாசல் திறக்கப்பட்டு சீறும் காளைகளைப்போல, பெருநகரச் சாலைகளில் வாகனங்களை முறுக்கிக்கொண்டு பறக்கிறோம். பசித்துக் குரைக்கும் நாய்க்கு சில ரொட்டித்துண்டுகள்.. மனிதனுக்கு ஏ.டி.எம். இயந்திரம் துப்பும் காகிதத்துண்டுகள். ஆனாலும் எதையும் துறந்துவிட முடிகிறதா.? இந்நகர வீதிகளின் இயங்குத்தன்மைக்கு ஏற்ப கால்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டன என்றாலும், கண்ணுக்குத் தெரியாத சரடு ஒன்று,

காதல் கடும்புனல்.!

படம்
"வேண்டாம் பாஸு.. வெளியிலேர்ந்து பார்க்கத்தான் இது கலர்ஃபுல்லா தெரியும். ஆனா பயங்கர பெயின்ஃபுல்லான விஷயம். நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..? இதுல சிக்கனும்னு ஆசைப்படாதீங்க" -தபூசங்கரின் கவிதையை தன் கவிதையென்று சொல்லி காதலியிடம் கொடுப்பதற்காக அகால இரவொன்றில் பிரதி எடுத்துக்கொண்டிருக்கும் அறை நண்பன் சொல்கிறான், காதல் குறித்த தன் வரைவிலக்கணத்தை. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே பெண்ணை நான்கு மாதங்களாக காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை அவனுக்கு.! இன்று வரை எனக்கு கைகூடாத ஒரு கலையாகவே இருக்கிறது காதல். அது எப்படி எவ்விதம் சாத்தியப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. காதலிக்க அலையும் மனசும், யதார்த்தம் அதற்கு எதிர்மாறாகவும் இருக்கும்போது, காதலிப்பவர்கள் அனைவரும் சாகசக்காரர்களாகவே படுகிறார்கள். என் சாமர்த்தியங்களாக சுற்றம் சொல்லும் யாவும், காதலிப்பவன் முன்னால் கால்தூசு என்றால் நீங்கள் சிரிக்கக்கூடும். அடைய முடியாததன் ஏக்கத்துயர், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகள் அவை. உலகம் காதலால் நிறைந்திருக்கிறது; காதலிக்கும் நிமிடங்கள் அனைத்தும் தேவகணங

எரியும் பனிக்காடு ( Red Tea )

படம்
தெ ருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..? கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத் தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. வளைந்து நெளிந்து செல்லும் அந்த பசுமை மலைச்சரிவுகளுக்கும் கீழ் ஏராளமான மனித உடல்கள் புதையுண்டிருக்கின்றன. வனத்தை அழித்து, ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களை உயிர் பலியிட்டு உருவாக்கப்பட்டவைதான் இப்போது நாம் காணும் தேயிலை தோட்டங்கள். நாம் உறிஞ்சும் ஒவ்வொரு துளி தேநீரிலும் ஒரு சொட்டு ரத்தமும் கலந்திருக்கிறது. வலி மிகுந்த அந்த வரலாற்றை ஒரு கதை வடிவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது 'எரியும் பனிக்காடு' புத்தகம். பி.ஹெச்.டேனியலால் ஆங்கிலத்தில் Red Tea என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இது. இரா. முருகவேளால் மொழிபெயர்க்கப்பட்டு கோவை விடியல் பதிப்பகத

நள்ளிரவின் நாட்குறிப்பிலிருந்து..

படம்
ந ிராகரிக்கப்படும் அன்பின் வலி கொடியது। எவற்றினும் கொடியது.எவ்வித கைமாறும் பாராது, மலர்களின் நறுமனமென நுரைக்கிறது என் அன்பு. அது, நுகர்வின் ருசியை ஒருபோதும் உணர்ந்ததில்லை. தர்க்கத்தின் பிரகாரம் தவறு எனதாகவும்/எனதாகவே இருக்கலாம். ஆனால், இறுக மூடிய கரங்களுக்குள் நாய்க்குட்டியின் அடிமடி வெப்பமென பகிர்வதற்கான நேசங்களே வாழ்கின்றன என்பதை தயவோடு புரிந்துகொள்ளுங்கள். அன்பை பகிரும் கலை அறியும் ஆயத்தங்கள் அனைத்திலும் எனக்குப் பின்னடைவே. என் கரங்கள் நீள்வதற்குள்ளாக உங்கள் வார்த்தைகள் முடிந்திருக்கின்றன அல்லது உங்கள் கவனம் சிதறும் கணம் ஒன்றில் காற்றிடம் கரம் நீட்டி ஏமாறுகிறேன். இரண்டுமல்லாது என் கரம் நீட்டலுக்கான காரணம், அதன் எதிர்தன்மையிலும் உணரப்படுகின்றன சமயங்களில். உணர்ச்சிக்கேற்ற பாவனைகளை வெளிப்படுத்தத் தெரியாத முட்டாளாக இருக்கிறேன். உங்கள் கண்ணீரின் உப்பைப் பகிர நீளும் என் கரங்களில் கொடுவாள் இருப்பதாக உணர்வது உங்கள் தவறு மட்டுமல்ல.. அவ்வாறாக உணர வைக்கும் பாவனைகளையும், சொற்களையும் கொண்டிருக்கும் என்பால், தவறின் விழுக்காடு அதிகமிருக்கிறது. கூட்ட‌த்தில் ஒருவ‌னாக‌ இருக்க‌வே பிரிய‌ம். த‌னிய‌னாக‌த

நான் வித்யா..

"அ ரசு, சமூகம், குடும்பம் உள்ளிட்ட அனைத்து வகை அதிகாரங்களும் தங்களின் கூர்முனை காட்டி அச்சுறுத்தி, பயத்தின் விளிம்பிலேயே நம்மை வைத்திருக்க விளைகின்றன. கொண்டாட்டங்கள் ஒன்றே அதற்கான எதிர் அரசியலாக இருக்க முடியும். வாழ்வை கொண்டாடு நண்பா.." போதை இரவொன்றில் தோழன் ஒருவன் சொன்னான். அந்த இரவும் விடிந்தது என்பதன்றி, உரையாடிய வார்த்தைகளால் வேறெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதிகாரங்களுக்கான எதிர் அரசியல் கொண்டாட்டம்தானா..? வாழ்வை கொண்டாடி எவ்விதம் வலிகளைப் போக்க முடியும்..? மறக்கலாம்.. தவிர்க்கலாம்.. தீர்க்க..? திருநங்கைகளின் வாழ்வெங்கும் இரைந்துகிடக்கும் வலிகளை எந்தக் கொண்டாட்டம் கொண்டு கடப்பது..? அது என் பால்ய வயது. உப்புக்குளத்து கரையில் தனித்திருந்த அந்த கூரை வீட்டில் டீ கடை ஒன்று இருந்தது. அந்த வீட்டின் ஒரே ஆண்பிள்ளைக்கு உமாசங்கரென்று பெயர் வைத்திருந்தார்கள். அவனது பதின்ம வயதில் 'நீ உமா சங்கர் அல்ல.. வெறும் உமாதான்' என்ற வார்த்தைகள், நக்கல் தொணியில் அவன் நோக்கி வீசப்பட்டன. ஈரமற்ற சொற்களால் மெல்ல மெல்ல அவனும், அவனது குடும்பமும் நகரம் நோக்கி புலம் பெயர்ந்தது. இடிந்து நிற்கும் கு