இடுகைகள்

தண்டகாரன்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது - அருந்ததிராய் பேட்டி

படம்
அ ருந்ததி ராய் ... இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம் ! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடு களில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில் , அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க , அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய் . ' ஆபரேஷன் பசுமை வேட்டை ' என்ற பழங் குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய் , அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார் . கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை , பிறகு தனியே சந்தித்தேன் . மென்மையான குரலில் , வன்மையான சொற்களில் எல்லாக் கேள்வி களையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய் . " தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம் . அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா ?" " மத்திய ...