இடுகைகள்

ஜூலை, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலித் முரசை ஆதரிப்போம்!

படம்
இறுகி கெட்டித்தட்டிப்போய் கிடக்கும் இந்திய, தமிழக சாதி அடுக்குகளை நோக்கி கல் எறிய வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் சமூகத்தை நேசிக்கிற நம் அனைவருக்குமே இருக்கிறது. பேச்சு, எழுத்து, உடை, உணவு அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியை அதிலிருந்து விலக்கம் செய்து அனைவருக்குமான மானுடத்தை அன்பால் கட்டியமைப்பதுதான் சுதந்திரமான, சுயேச்சையான ஜனநாயகத்துக்கான வழி. இந்தப் பொறுப்பை முன்னின்று செய்ய எல்லோராலும் இயலுவதில்லை. கடந்த 13 ஆண்டு காலமாக தமிழ் சூழலில் தலித் முரசு இதழ் இந்தப் பணியை முன்னின்று செய்து வருகிறது. தமிழ் பண்பாடு என்பதே சாதிப்பண்பாடாகவும், தமிழ் கலாசாரம் என்பதே சாதிக் கலாசாரமாகவும் இருக்கிற சூழலில் விளிம்புகளின் குரலை, வாழ்வை உரத்துப் பேசும் தலித் முரசின் பணி ஒப்பிட இயலாத ஒன்று. ஆனால் முற்போக்கு சக்திகளுக்கு வாய்வழி ஆதரவை மட்டும் வழங்கி, அவர்களின் நாளாந்த வேலைத் திட்டங்களுக்குக் கை கொடுக்காமல் ஒதுங்கி இருக்கும் நமது தொன்றுதொட்டப் பழக்கம் தலித் முரசுவுக்கும் தொடர்கிறது. மிகுந்த பொருளாதார தள்ளாத்துடன் 13 ஆண்டுகளை கடத்தி இருக்கும் தலித் முரசு இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் ச