இடுகைகள்

நெடுவாசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடுக்குப்பமாக மாற்றப்படுமா நெடுவாசல்?

ஜ ல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றதைப் போல நெடுவாசல் போராட்டத்தில் வெல்ல முடியுமா? கூட்டம் கூடுவதை வைத்து; ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மட்டும் இதை எடைபோடக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது அதிக ஆபத்து இல்லாத ஒரு பண்பாட்டு கோரிக்கை. எனவே ஒரு வாரத்தில் புதிய சட்டம் இயற்ற வைப்பது அதில் சாத்தியமானது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் எதிர்ப்பக்கம் நிற்பது கார்ப்பரேட்டுகள். கௌதம் அதானியின் நிறுவனமும், பா.ஜ.க எம்பி சித்தேஸ்வராவின் நிறுவனமும் ஹைட்ரோகார்பன் அகழ்வுப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன. எனவே மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து அரசு பின்வாங்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. அல்லது ’ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழ்நாடு வீரியத்துடன் போராடியது. எனவே நெடுவாசல் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முயன்றால் அதேபோல வீரியமான போராட்டத்தைத் தொடங்கிவிடுவார்கள்’ என அஞ்சி அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப்பெறப்போவதும் இல்லை. மேற்கு வங்கத்தில் கார்ப்பரேட் நலன்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த சி.பி.எம் போன்ற ஓர் இடதுசாரி கட்சி...

அப்போ வாடிவாசல்... இப்போ நெடுவாசல்

படம்
` வா டிவாசல் திறக்க வேண்டும் ’ எனக் கூடிய கூட்டம் , இப்போது ` நெடுவாசலை மூட வேண்டும் ’ எனக் கிளர்ந்து எழுந்துள்ளது . புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பூமிக்கும் கீழே உள்ள ` ஹைட்ரோ கார்பன் ' என்ற எரிவாயுவை எடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் , அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . நெடுவாசல் என்பது , மாவட்ட வரையறையில் புதுக்கோட்டையைச் சேர்ந்தது என்றாலும் , இங்கு தஞ்சைப் பசுமையின் தொடர்ச்சியைக் காண முடியும் . காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஒன்றான , இந்தப் பசுமையைத்தான் பலி கேட்கிறது ஹைட்ரோ கார்பன் திட்டம் . கடந்த சில ஆண்டுகளாக , இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மெள்ள மெள்ள செய்து முடிக்கப்பட்ட நிலையில் , வளர்ந்த புற்றுநோயைக் கடைசிக் கட்டத்தில் கண்டுபிடித்ததைப்போல மக்கள் இப்போது ஒன்றுசேர்ந்துள்ளனர் . ` முற்றிய நிலையில்தான் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் , முற்றுப்புள்ளி வைக்காமல் விட மாட்டோம் ' என்ற உறுதியுடன் பெரும் கூட்டம் திரண்டு நி...