இடுகைகள்

பா.ஜ.க. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாமரையின் ஊழல் முகம்

படம்
ம க்களின் அவநம்பிக்கையைப் பெறுவதற்கு காங்கிரஸுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுத்ததற்கும், அந்த வெறுப்பின் அறுவடையை பா.ஜ.க. பெற்றதற்கும் ஒரே காரணம்தான்... ஊழல். ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், ராணுவ ஹெலிகாப்டர் கொள்முதல் என, காங்கிரஸ் ஆட்சியில் எங்கெங்கும் ஊழல்; எண்ணிடலங்கா ஊழல். அந்த நிலையை மாற்றுவோம் என்ற நம்பிக்கையை விதைத்துதான் மக்களின் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை என்ற பிரமாண்ட வெற்றியைப் பெற்றது; மோடி சர்க்கார் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது நடப்பது என்ன? ஒவ்வொரு நாளும் ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும், சர்ச்சைகளும் சந்தி சிரிக்கின்றன. லலித் மோடி என்ற ஊழலின் நாயகனுக்கு உதவியது முதல், ஊழலோடு சேர்த்து உயிர்களையும் பலிவாங்கும் மத்தியபிரதேச மாநிலத்தின் ‘வியாபம்’ ஊழல் வரைக்கும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சை. எதற்கும் பிரதமர் மோடி வாய் திறப்பது இல்லை. ‘யோகா செய்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கு...

மானியங்களை வெட்டு

படம்
`ம ன்மோகன் சிங் ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?’ ‘என்ன?’ `அது பயங்கரக் கொடூரமா இருக்கும். இது கொடூரமா, பயங்கரமா இருக்கும்.’  -  வாட்ஸ்அப் ஃபார்வேர்டுபோலத் தோன்றினாலும் இந்த ஒப்பீட்டில் ஆழ்ந்த அரசியல் பொருள் உள்ளது. இவர்கள் ஒரே மரத்தின் கனிகள். தாராளமயம் என்ற அந்த மரத்தில் ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, மாண்டேக் சிங் அலுவாலியா என ஏகப்பட்ட கனிகள். எல்லா கனிகளின் உள்ளே இருப்பதும் ஆலகால விஷம் என்பதுதான் இதில் உள்ள அபாயம். இப்போது ரேஷன் மானியம் ரத்து, கேஸ் மானியம் ரத்து... என வரிசையாக அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் அனைத்திலும் இவர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. மானியங்களைப் போட்டுத் தள்ளுவதில் இவர்களுக்கு அப்படி என்ன அலாதியான ஆர்வம்? ரேஷன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து உயிர்வாழும் ஒரு வயதான கிழவியின் வயிற்றில் அடிக்க இவர்கள் போட்டிப் போடுவது எதனால்? ஏனெனில், ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது அருண் ஜெட்லியின் சொந்த முடிவு அல்ல. ‘மானிய வெட்டு’ என்பது உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனை. உலக வங்கியின் கொள்கை. இவர்கள்தான் கடந்த 25 ஆண்டுகளு...

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும்!

படம்
அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது. நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ...