இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுளின் புனைப்பெயர்!

SC NO 8 EXT / DAY / BUS STOP ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா... நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம்.. சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப் பாட்டுக்கும் ஏறிட்டீங்க..” என தயங்குவது. “போன்னு சொல்றேன்ல” என அவள் குரலை உயர்த்தியதும் சைக்கிள் கிளம்புவது. சுப்பையா பின்புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவளையேப் பார்த்துக்கொண்டு அந்த இளைஞன் நிற்பது. ------Cut------- சம்பந்தம் கடுப்பாக டி.வி.யை நிறுத்திவிட்டு நரைத்துப்போன நெஞ்சு முடியை கையால் தடவிக்கொண்டார். இளம் பச்சை நிற தேங்காய்ப்பூ துண்டு அவர் தேகத்தை மறைத்துக் கிடந்தது. கையில் புகைந்த சுருட்டுப் புகை முகத்துக்கு நேராக சுற்றி சுற்றி வந்தது. கடும் கோபத்தில் இருந்த அவரது உதடுகள் ‘சுப்பையா’ என்ற பெயரை உச்சக்கட்ட கோபத்துடன் முணுமுணுத்தன. சனியன் பிடித்த டி.வி. எதைத் திறந்தாலும் அதையே போட்ட