இடுகைகள்

தாராவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேரியில் ஓர் இன்பச் சுற்றுலா

படம்
பு திய வகை சுற்றுலா ஒன்று உலகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது . அதற்குப் பெயர் ' சேரி சுற்றுலா ’ (Slum Tourism). மேற்கத்திய நாடுகளின் பணக்காரர்கள் , ஏழை நாடுகளின் வறுமையை காட்சிப் பொருளாகக் கண்டு ரசிக்கின்றனர் . அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் , தென் ஆப்பிரிக்கா , பிரேசில் , இந்தியா போன்ற நாடுகளின் குடிசைப் பகுதிகளுக்கு வந்து குவிகிறார்கள் . கையில் கேமராவுடன் , குப்பங்களில் புகுந்து , மூக்கு ஒழுகும் சிறுவர்களைப் புகைப்படம் எடுக்கும் வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும் இத்தகைய சுற்றுலாவாசிகள்தான் . ஏன் இவர்கள் ஏழைகளின் சேரிக்கு சுற்றுலா வர வேண்டும் ? ஏனென்றால் , பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகின் வழக்கமான சுற்றுலாப் பிரதேசங்கள் அலுப்புத்தட்டிவிட்டன . நீலக்கடல் , பசுமையான மலை , குளிர் பிரதேசங்கள் , செயற்கைப் பூங்காக்கள் போன்றவை அவர்களின் ரசனைக்குப் போதுமானதாக இல்லை . அவர்களுக்கு ' வெரைட்டி ’ வேண்டும் . த்ரில்லான , சாகசம் நிறைந்த , மனதின் ஈகோவை திருப்திப்படுத்தகூடிய ஒரு ...