கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

இ ந்து சமய அறநிலையத் துறை தொடர்பான சர்ச்சை இப்போது மீண்டும் செய்திகளில் முன்னிலை பிடித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ‘தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என பா.ஜ.க.வின் சில தலைவர்கள், அனுதாபிகள் கோரி வருகின்றனர். உண்மையில் இது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கோரிக்கை. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, இந்தக் கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உருவான வரலாறு என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியமானது. அது கருணாநிதி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டமோ, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கொண்டுவரப்பட்ட சட்டமோ அல்ல. தமிழக கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்ட வரலாறு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டம் 22/1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை மட்டுமல்ல... சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நி...