பால் பீய்ச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்துக் கோழியை விட்டு...(Disclaimer about title: ஒண்ணுமில்ல..ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா.. கண்டுக்காதீங்க..).

"வாழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்" என்று ஓஷோவை முன்வைத்து நேற்றெனக்கு சொல்லித்தந்த அய்யனார் முதல், "உண்மையில் மனிதன் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதுமில்லை..நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வதே இயல்பானது" என்று உளவியலை முன்வைத்துத் துணுக்குறச் செய்த பைத்தியக்காரன் வரை.. இந்த ஏழு நாட்களில் வலையுலகம் நிறையவே வசீகரப்படுத்திவிட்டது என்னை.

வ்வப்போது வாசிப்பு, எப்போதாவது பதிவு மற்றும் பின்னூட்டங்கள் என்றிருந்த எனக்கு, இப்படி தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்ற நிபந்தணையே கொஞ்சம் அவஸ்தையானதுதான். பிளாக் தொடங்கி ஒண்ணரை வருடங்களாகிவிட்ட நிலையில், இதையும் சேர்த்து நான் இதுவரை எழுதியிருக்கும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே 65 தான். ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் ஓடிவந்து தட்டிக்கொடுப்பார்கள். மதி கந்தசாமி, என்னுடைய சில கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் மொழிபெயர்த்து எழுதியிருந்ததைப் படித்தபோது, 'பார்றா.. இந்தப்பயலுக்கு அடிச்ச யோகத்த..' என்று என்னாலேயே நம்பமுடியவில்லை.

ங்கு எழுதவரும் முன்பு, எனக்கென்று தனித்தக் கொள்கைகளோ, உறுதியான அரசியலோ இல்லை. என்னை ஈர்ப்பதை எழுதினேன்.. மனதைப் பாதிப்பதை பதிவு செய்தேன். அது முற்போக்கு எண்ணம் கொண்டவர்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இனிமேல்தான் உண்மையாக, முழுமையாக வாசிக்கத் தொடங்க வேண்டும். இதுவரை பிழைகளோடு என்னை பொறுத்துக்கொண்ட நண்பர்களுக்கு சொல்லவும் நன்றிகள் மிச்சருக்கின்றன.

பெண்ணுரிமைப்பற்றியக் கட்டுரையையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களின் சிரமம் பற்றிய கட்டுரையையும் நல்ல விவாதமாக மாற்றிய நண்பர்களின் கருத்துக்கள் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத்தந்தன. அவர்களுக்கும், என்னை ஒரு வார காலம் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் அன்பான நன்றிகள்..!

கருத்துகள்

Sri Rangan இவ்வாறு கூறியுள்ளார்…
//விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதுவே நம் கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம்..!//


"..................."ஐயோ ஆழீயூரான்!இங்ஙனம் எழுதிவைத்து உணர்விலொரு அழுத்தத்தைக் கொடுக்கிறது நியாயமா?...அன்பான வார்த்தை?எங்கேங்க இது கிடைக்கும்?ஏதோ சொல்லிக்கிறோம்"அன்பு"என்று,ஆனால் அர்தமாகிவில்லை இன்னும்!சரி-சரி,உங்களுக்கு என் வாழ்த்து!-நட்ஷத்திரமானதற்கல்ல,தொடர்ந்து நட்ஷத்திரமாக மின்னுவதற்கு!...உம் அப்பாடா இது போதுமே?வர்றேன்-எப்போதாச்சும்.
அருண்மொழி இவ்வாறு கூறியுள்ளார்…
சுவையான பதிவுகளை தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்ரீரங்கன், அருண்மொழி.. என் பக்கத்தில், உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இல்லையெனினும் அவ்வப்போது படிக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. நன்றிகள் உங்களுக்கு..!
ranjith இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் திரு ஆழியூரான். சிறப்பாக இருந்தது உங்கள் அனைத்துப் பதிவுகளும்.
பச்சோந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் உங்கள் எழுத்து நடை ரொம்பவே இயல்பான நகைச்சுவை, யதார்த்தம் இவைகளை ஒட்டியே இருந்தது. இவை எல்லாருக்கும் வாய்க்காது.

ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் உங்கள் தொழில் கலை சம்பந்தமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. திரைப்பட இயக்குனர் போல.

ஆனால் வேறு விதமான தொழிலிலோ வேலையிலோ இருந்தால் தயவு செய்து உங்கள் எழுத்துக்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் படைப்புக்களின் நடை வெகு சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் நான் இதை சொல்ல மாட்டேன்.

ஒரு நல்ல படைபாளியின் நடை உங்களிடம் தெரிகிறது. என்னைவிட வெவரமான பார்ட்டிங்க இத உங்ககிட்ட இன்னேரம் சொல்லி இருப்பாங்க.

இலக்கியம், எழுத்து என்பதெல்லாம் 30 வயதுக்கு முன்பு கெட்ட வார்த்தை.

பிழைப்பது முன்னேருவது இதெல்லாம் இப்பொதுதான் செய்ய முடியும். இந்த வயதில்.

இதை அனைத்தையும் கெடுக்கும் வல்லமை இலக்கியத்துக்கு உன்டு.

என்னை போலவே கிராமத்திலிருந்துவந்த உங்களை எனக்கு நிரம்ப பிடித்ததால் சொல்கிரேன்.

ஒருவேளை இது பைத்தியகாரத்தனமாக உஙளுக்கு தோண்றலாம். தோன்றும்.

என்றாவது ஒரு நாள் நான் சொன்னதை நினைப்பீர்கள்.

நான் எழுதுவதை நிறுத்த சொல்லவில்லை. வெகுவாக குறைத்துக்கொள்ளுங்கள்.

( கொஞ்ஞம் கேனத்தனம்மா இருக்கோ?எனக்கு கூட அப்டிதான் தெரிது. ஆனால் ராத்திரி 2.50 க்கு தூக்கம் வராதப்போ யாருக்காசும் அட்வைஸ் பண்ணித்தாண் ஆகனும் நீங்கதான் மாட்னீங்க. நன்றி)

ஆனால் நான் சொன்னதெல்லம் என் இதயத்தில் இருந்து வந்த உண்மை.

"பொழச்சுக்கோ தம்பி"

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'