நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?


வியர்வை பிசுபிசுக்கும் பேச்சுலர் அறையின் நெடியிலிருந்து தப்பித்து தனி அறையில் அடைக்கலம் புகலாம் என முடிவு செய்து, மேன்ஷன் அல்லாத புதிய அறையென்றை நான் தேட ஆரம்பித்திருந்த செவ்வாய்கிழமையன்று அவளை சந்தித்தேன்.

அன்றுதான் டாக்டர் ராமதாஸ், 'இந்த அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதற்காக பா.ம.க. வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காது..' என்று வெளியிட்ட அறிக்கை தினத்தந்தியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. 'டாக்டர் பின்றாரே..' என்று யோசித்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் கையில் லெதர் பேக்குடன் அவள் என்னைக் கடந்து சென்றாள்.

காலையில் தலையில் வைத்த மல்லிகை லேசாக கறுத்துப் போயிருந்தது. அவளை எனக்கு அறிமுகமில்லை. ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...?

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு நண்பனை துட்டுக் கொடுக்கச் சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதற்காகப் போனேன். அப்போது அவள் திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் தன் மென் பாதங்களால் நடந்துபோனாள். சாம்பாரின் மணம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது. தயக்கமேதுமின்றி அவளை 'எஸ்சூஸ்மீ..' என்று அழைத்ததும், 'என்ன வேண்டும்..?' என்பதுபோல் ஒரு லுக் விட்டாள்.

"உங்களை எனக்கு இதுக்கு முன்ன, பின்ன தெரியாது. ஆனா, இப்ப தெரிஞ்சுக்க ப்ரியப்படுறேன்"

"நீங்க ஏன் என்னை தெரிஞ்சுக்கனும்..?"

நாய் உதாரணம் இவளுக்குப் பிடிக்குமோ என்னவோ..?

"இல்லீங்க. நான் இப்போ மேன்ஷன்ல தங்கியிருக்கேன். சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணி, அதுக்கான ஆயத்தமா மேன்ஷனை காலி செஞ்சுட்டு தனியா ரூம் எடுத்து தங்கலாம்னு ரும் பார்த்துகிட்டிருக்கேன்.."

"ஸ்டாப்..ஸ்டாப்.. என்ன வேணும் உங்களுக்கு.."

'ரத்னா கபேயில் ஒரு பிளேட் சாம்பார் இட்லி' என்று சொன்னால் வாங்கிக்கொடுத்துவிடவா போகிறாள்..?

"கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னேன்ல.. அது வந்து லவ் மேரேஜாதான் இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, யாருமே என்னை லவ் பண்ண மாட்டேங்குறாங்க. அதாங்க வெட்கத்தை விட்டுட்டு ஒவ்வொரு பொண்ணா கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதையும் கூட இன்னிக்குதான் முடிவு செஞ்சேன். முதல் போணி நீங்கதான்.."

'முதல் போணி' என்ற வார்த்தையைக் கேட்டதும், சட்டென முகம் சுளித்தாள். அப்போது அவள் மொபைல், 'ஜூன் போனால் ஜூலைக்காற்று..' என்று அரிய பொது அறிவுத்தகவலொன்றை சொல்லியது. புதிய மோட்டரோலா மொபைல். வாய் பேசுவது மூக்குக்கே கேட்காதவாறு முணுமுணுத்தவள், "ஐ வில் கால் யூ பேக்.." என்றாள்( 'எப்படியும் நீ மிஸ்டு கால்தான் கொடுக்கப்போறே.. அந்தப்பயதான் கூப்பிடப்போறான். பின்ன ஏன் இந்த பில்-டப்..?')

"நானும் கூட மோட்டரோலாதாங்க வச்சிருக்கேன். பட், சோனில சவுண்ட்ஸ் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.." என்று சொல்லியபோது அவள் நின்றுவிட்டாள். அது கோசா ஹாஸ்பிட்டல் பஸ் ஸ்டாப். வரிசையாக பட்டிணப்பாக்கம் பஸ்களாக வந்தது. எதிர்திசையில் வரும் பஸ்களை அவள் புறக்கணித்தாள்.

"நீங்க எதுவுமே சொல்லலியே.."

"நீங்க என்ன மெண்டலா..?"

எவ்வளவு தாமதமாக கேட்கிறாள்..? ரத்னா கபே பக்கத்தில் கேட்டிருக்க வேண்டிய கேள்வியை அரை கிலோ மீட்டர் தள்ளிவந்து கேட்கும் அளவுக்கு அவள் புத்தி ஏன் இவ்வளவு மெதுவாக வேலை செய்கிறது..?

22C வந்ததும் அதில் ஏறினாள். நானும் ஏறலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் என்னை தமிழ்மணத்தில் ஸ்டார் ஆக்கிவிட்டதாக தகவல் வந்தது. 'எப்படியும் அங்கு நாலு பிஹர்கள் கிடைக்காமலா போய்விடும்..' என்ற நப்பாசையில் நானும் வந்துவிட்டேன். சொல்லுங்கள் நண்பர்களே.. நான் பைத்தியமா..?

கருத்துகள்

காயத்ரி சித்தார்த் இவ்வாறு கூறியுள்ளார்…
:)))))))))))

கலக்கறீங்க ஆழியூரான்!!
maruthamooran இவ்வாறு கூறியுள்ளார்…
யாரய்யா சொன்னது நீர் பைத்தியக்காரனென்று? என்னவோ நல்ல விசயம் எழுதியிருக்கிறீர் என்று வந்து வாசித்தேன் பாரும், நான் தான்…………

என்னத்த சொன்னாலும், நேரக்கழிப்புக்கு வாசிக்க நல்லாத்தான் இருந்தது….

வாழ்த்துக்கள் ஆழியூரான்…..
Ayyanar Viswanath இவ்வாறு கூறியுள்ளார்…
/'எப்படியும் அங்கு நாலு பிஹர்கள் கிடைக்காமலா போய்விடும்..'/

நீர் பெண்ணுரிமைன்னு சத்தமா குரல் கொடுத்தப்பவே தெரியும்யா இதான் மேட்டர்னு :)
ஜெகதீசன் இவ்வாறு கூறியுள்ளார்…
:)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யனார், இந்தக் கட்டுரைக்குப் புனைவுன்னு லேபில் குடுக்கலாம்னுதான் நினைச்சேன். நீங்க திட்டுவீங்கன்னுதான் விட்டுட்டேன்
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
அநியாயம்பா.. வழக்கம் போல நல்லதா ஒரு கதை எழுதிருக்கீங்களோன்னு படிச்சிகிட்டு வந்தா!!!

இந்த இடுகையைத் தவிர்த்திருக்கலாம்.. குறைந்த பட்சம் அனல் பறந்த முந்தைய இடுகைக்கு உடனுக்குடன் இடுவதையாவது...

வலையுலக ஆண் பித்தளைச் சங்கத்தின் புதிய தலைவர் ரத்னீஷ்(அதானேப்பா அவரு பேரூ?) வாய்க்கு அவலாகும் வாய்ப்பிருக்கேன்னு ஒரு வருத்தம் தான்...
gulf-tamilan இவ்வாறு கூறியுள்ளார்…
நான் பைத்தியமா..?
:)))
maruthamooran இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான், தங்களுடைய ‘பெண்ணுரிமை’ தொடர்பான கட்டுரை வாசித்தேன்.. சரியான சாட்டையடி… உங்களின் அனைத்து கருத்துக்களுடனும் ஒத்துபோகின்றேன்…. இவ்வாறான சிறந்த பதிவுகள் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியது. தங்களின் நட்சத்திரப்பதிவில் பெண்ணுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதையிட்டு பெருமைப்படுகின்றேன்…. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான U டர்ன் அடிச்சுட்டீங்க. ஆனா, தமிழ்ப் பெண் பதிவர்கள் ஈயம், பித்தளை, பக்கெட்டுன்னு எல்லாம் பேசுவாங்களே ப்ப்ப்பர்ர்ர்ர்ரவால்லியா?
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
இதை ஆழியூரானின் "மணமகள் தேவை" பதிவுன்னு வெச்சிக்கலாமா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
evvaluvathaan serious matter ye poduvathu...ippadiye eluthikondirunthaal..thannai vayathanavan pattiyalil thooku pottuviduvaarkal enta payam thiru aaliyooraanukkum vanthuvittathu pola athuthaan konjam ippadiyum kalaaaithu mokkai pottu, naanum youth thaan entru figure ikku kaattukirar. ennangaiya thamizmanathula poyee ...figure thedalama... konjam yosithuparunka
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
solla maranthuvittene...athukkuthan photo ellama..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஆழியூரான் செமை மொக்கை இது.
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரன் உங்களை ஏதோ சீரியஸான பதிவர் என்று நினைத்திருந்தேன்!

இந்தப் பதிவைப் படித்தும் நல்ல நகைச்சுவை, குறிப்பாக "இ வில் கால் யூ பேக்" -ன் போது உமது கமெண்டு அருமை,

//நானும் கூட மோட்டரோலாதாங்க வச்சிருக்கேன். பட், சோனில சவுண்ட்ஸ் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.."//

பரிதாமாய் உம்ம மூஞ்சி நினைவுக்கு வருது!

// மாசிலா said...
இதை ஆழியூரானின் "மணமகள் தேவை" பதிவுன்னு வெச்சிக்கலாமா?
//

எனக்கும் அப்படித்தான் தோனுது மாசிலா!

அன்புடன்...
சரவணன்.
முத்துலெட்சுமி/muthuletchumi இவ்வாறு கூறியுள்ளார்…
பெண்ணிய லாஜிக்கெல்லாம் பாக்காமல் இருந்தால் நல்லதொரு காமெடி போஸ்ட்.


ஆனால் போன பதிவுக்கும் இந்த பதிவுக்கு இடைவெளி இல்லாமல் போனதும் நல்லதே ... போன பதிவில் சத்தமாக குரல் குடுத்துவிட்டு அப்படியே தலைகீழாக ஒரு கதை அதுவும் புனைவு இல்லையென்று சொல்லிவிட்டபடியால் சொல்பவர்கள் செயலிலும் அப்படியே இருப்பார்களா என்று கேட்பவர்கள் பக்கத்துக்கு நியாயம் இருப்பதாக யோசிக்க வைத்துவிட்டீர்கள்.பொன்ஸ் சொன்னது போல சிலர் வாய்க்கு அவலாகும் இந்த பதிவு .
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நடைவண்டி!

இப்படி பதிவெல்லாம் போட்டீர்னா, திரும்ப எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள்ள கொண்டு போய் விட்டு நடக்கச் சொல்லீருவோம். :))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் - நல்ல கதை உங்கள் வயதுக்கு ஏற்றதும் கூட.

பொன்ஸ்~~Poorna - பெண்ணியம் பேசுவது சுலபம் செயல்படுத்துவது கஷ்டம் ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கும் தான்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
முத்துலட்சுமியக்கா.. அய்யனாரைக் கலாய்க்கவென்று புனைவு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதற்காக இது உண்மையென்று அர்த்தமில்லை. நான் ரத்னா கபேயையும், திருவல்லிக்கேணியையும் விட்டுவிலகிவந்து ஒண்ணரை வருடங்களாகிவிட்டது. இது சும்மாவேனும், சீரியஸ் முகத்தை மறைப்பதற்காகப் போட்ட பதிவு.
நீங்களும், பொன்ஸக்காவும் சொன்னதுபோல கொஞ்சம் தாமதித்து இதை வெளியிட்டிருக்கலாமோ என்னவோ.. உங்கள் பின்னூட்டத்தின் முதல் இரண்டு வரிகள் எனக்கானவை.

மற்றபடி இதை எந்த தொணியில் எடுத்துக்கொள்வதென்பதும், அதை வைத்து என் மீது குத்தப்படும் முத்திரைகளும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மருதமூரான்.. தங்களின் தொடர்ச்சியான வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

இளா.. இதில் ஈயம், பித்தளைப் பார்க்க ஒன்றுமில்லை.

பொன்ஸ்.. கவலைப்படாதீங்க. கதை ஒண்ணு வச்சிருக்கேன். சீக்கிரமே ரிலீஸ்.

மாசிலா, உங்கள் நண்பன்... உங்களுக்கு ரெட்டை மூளை இருக்கா..? எப்படித்தான் கண்டுபிடிப்பீங்களோ தெரியலையே..

வெயிலான்.. எந்தக்காடானாலும் என் நடைவண்டி பீடுநடைபோடும் என்பதை இறுமாப்புடன் சொல்லிக்கொண்டு, சோடா குடித்துக்கொள்கிறேன்.
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
போன பதிவு அப்படி எழுதி விட்டு இந்தப்பதிவை இப்படி எழுதலாமா என்று யோசிக்காமல் எழுதிய பாசாங்கற்ற நேர்மைக்குப் பாராட்டுக்கள் என்று எழுதி இருப்பேன் நான் நீஈஈஈஈஈண்ட கால குமுதம் வாசகனாக இல்லாது இருந்திருந்தால். நீங்கள் வெற்றிகரமான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். எதிர்கால பெரும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்.
மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
//வெற்றிகரமான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்//

அதே..
Harsha இவ்வாறு கூறியுள்ளார்…
Keep it up

I am new.how i send post in our language?

anybody help me? Please??
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
கணேசன்.. தமிழில் தட்டச்சுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

என்ற முகவரிக்குச் செல்லுங்கள். அங்கு eKalappai 2.0b(tamilnet 99) என்ற எழுதுபொருளும், eKalappai anjal என்ற எழுதுபொருளும் இருக்கும். உங்களுக்கு தமிழ் டைப்பிரைட்டிங் தெரியும் எனில், முந்தையதை டவுண்லோடு செய்து தட்டச்சு செய்யுங்கள். இல்லையெனில் இரண்டாவதை டவுண்லோடு செய்து, அம்மா=AMMAA என்ற தமிங்கிலீஸ் முறைப்படி தட்டச்சுங்கள்.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://tamilblogging.blogspot.com/ என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கலாசறீங்க...:))

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/09/11/apponeenga/
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா... ஹா... நன்றாக இருந்தது. நன்றி.
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
சீரியஸாக படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது நடுவில் பாட்டு வருகையில் சிலர் எழுந்து வெளியில் போவார்கள், சிலர் நெளிவார்கள், சிலர் கண்ணை மூடுவார்கள், சிலர் ரசிப்பார்கள், சிலர் அருகில் இருப்பவரிடம் மொக்கை போடுவார்கள், சிலர் அங்கும் இங்கும் திரும்பி பார்ப்பார்கள், சிலர் சீக்கிரம் இந்த பாட்டு முடியணும்னு வேண்டிக்குவாங்க. அது போல இது ஒரு பதிவுன்னு நெனெச்சுக்க வேண்டியது தான்.
Jazeela இவ்வாறு கூறியுள்ளார்…
இது சாயம் வெளுக்கும் கதையில்லையே? :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
// ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...? //

WOW what a comparison?
Nice one. :)))

Sabes
கோபிநாத் இவ்வாறு கூறியுள்ளார்…
:-)))))

சூப்பர்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//"நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?"//
சத்தியமா.
சுந்தர் / Sundar இவ்வாறு கூறியுள்ளார்…
லூசாப்பா ... நீ ....

பதிவு அருமை !
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு.

காதல் பிச்சை கேட்பது ஒன்றும் கவுரவக் குறைச்சல் அல்ல...

- சக பிச்சைக்காரன்
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
BTW, உங்க போட்டோ நல்லாருக்கு. பாக்குறதுக்கு வெயில் பசுபதி மாதிரியே இருக்கீங்க!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//- சக பிச்சைக்காரன் //

அட எழவே? இதுக்கு பதிலா பைத்தியக்காரன்னு சொல்லிக்கறதே எவ்வளவோ கவுரமா இருக்கு.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கி.. நான் 'வெயில்' பசுபதியா இருக்கத் தயார். பசுபதியோட உருகுதே, மருகுதேவுல பாடுமே அந்தப்புள்ள.. அது எனக்கு ஜோடியா இருக்கத் தயாரா..? கேட்டு சொல்லுங்க.

::அம்புலியில் நனைஞ்சு சந்திக்கிறபோது, அன்புக்கதை பேசி, பேசி விடியுது இரவு..
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான், என் கருத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு..

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பார்க்குறேன்.
காட்சியாவும் நெசமா மாற
கூட்டிப்போகிறேன்..

மையிட்ட கண்ணே.. உன்னை
மறந்தா இறந்து போவேன்..:::

-------ம்ம்ம்ம்ம்ம்ம்---------
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா ஹா ஹா..... சூப்பரு..... :))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த பேருந்து கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம் :P

படிக்க சுவாரசியமாக இருந்தது சரவணன் :)
Gnaniyar @ நிலவு நண்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...?//

நிஜம்தான் ஆனால் நாயைக் கேவலப்படுத்திட்டீங்களே..? :)


//சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு நண்பனை துட்டுக் கொடுக்கச் சொல்லிவிட்டு //

சரி உண்மையைச் சொல்லுங்க.. பேச்சுலர் அறையிலிருந்து நீங்களா தப்பிச்சீங்களா?...இல்லை அவங்களா விரட்டி விட்டாங்களா? :)


//( 'எப்படியும் நீ மிஸ்டு கால்தான் கொடுக்கப்போறே.. அந்தப்பயதான் கூப்பிடப்போறான். பின்ன ஏன் இந்த பில்-டப்..?')//

இப்படி உங்களுக்கு எத்தனை பேர் கொடுத்திருக்காங்க நண்பா.. :)

//நான் பைத்தியமா..? //


:)
மங்களூர் சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு அருமை !

மங்களூர் சிவா
லிவிங் ஸ்மைல் இவ்வாறு கூறியுள்ளார்…
சச்சச்சோ....

ஏங்க..நீங்க வேற, நான் நாய கூப்பிடலங்க..

நெஜமா வருத்தப்படுறேன்.

சீக்கிரமே குட் கேர்ள் ப்ரெண்ட் ப்ராப்பிரஸ்து....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!