அனுபவிக்கத் தயாரா...?

இ ந்த வயதில் அனுபவிக்காமல் வேறு எந்த வயதில் அனுபவிப்பது, என்று வாதாடும் இளைஞனே..! எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்.. கல்லூரிக்குப் போக வழியில்லை கரும்பு வெட்டி கன்னல் சுனையில் கைத்தோல் உரியும். சோறு உள்ளங்கையில் பட்டு எரியும். கட்டுகள் மின்னல் வேகத்தில் டிராக்டரில் ஏறும். கை நரம்பின் சாறனைத்தும் கரும்புக்கு மாறும். உயிரைப் பிழியும் அந்த உழைப்பை அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்... உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை.. ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று, நெஞ்செலும்பின் வியர்வையில் உறைந்து ஆவியாகும். அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை பழம் நோகாமல் முதுகுத் தண்டில் தூக்கிப்போகும், கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..? இந்த வயதில்... வண்டியில் வலம் வந்து, கடலைப்போட்டு, கலாய்க்காமல் எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில் காய்த்ததுபோல் அடுக்கிவைத்து எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில் தென்னை மரத்தின் வேர்கள் மிதிக்கும் கால்களில் தெரியும்..! உடல் வழுக்கும் வியர்வை வெட்கப்பட்டு ஓடி இளநீரின் கண்களில் ஒளியும்..! இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..! இளநீர் சூடு.....