இடுகைகள்

இந்த சுதந்திரம் யாருக்கானது...?

படம்
"உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாங்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்காரக்கூடாது. மரப்பலகைகளில் உட்காராமல் தனியாகக் கோணி சாக்குகளை விரித்து அமர வேண்டும். உயர் வகுப்பு மாணவர்கள் எங்களுடன் பேசக்கூடாது. பேசினால் பாவமாம். உயர்சாதி ஆசிரியர்களும் அவ்வாறே நடந்துகொண்டார்கள். எங்கள் புத்தகங்களைக் கூட தொட மாட்டார்கள். தொட்டால் தீட்டு. தண்ணீர் தாகம் எடுத்தால் நாங்களே எடுத்துக் குடித்துவிட முடியாது. உயர்சாதி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். ஒதுங்கி நின்று அவர்கள் ஊற்றும் நீரை மேலே அண்ணாந்து வாயைத் திறந்து குடிக்க வேண்டும்........ ஒரு முறை எங்கள் தந்தையாரை புகைவண்டி நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டு, நானும் என் சகோதரனும் அங்கு சென்றோம். ஆனால், அவருக்கு நாங்கள் வருவது குறித்து அனுப்பிய தகவல் சென்று சேரவில்லை. இதனால் ஒரு மாட்டுவண்டி ஒன்றில் தந்தையாரின் இருப்பிடத்துக்குச் சென்றோம். சென்றுகொண்டிருக்கும்போதே உயர்சாதியைச் சேர்ந்த அந்த வண்டியோட்டி நாங்கள் யார் என்பதை தெரிந்து தன் வண்டியே தீட்டாகிவிட்டதக எண்ணி கீழே குதித்து மாட்டை அவிழ்த்துவிட்டு வண்டியை குடைசாய்த்துவிட்ட...

ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம்..

படம்
உன் வயசு என்ன..? 14 உன் பேரு..? கவிதா அம்மா, அப்பா இருக்காங்களா..? இல்லை. இறந்துட்டாங்களா..? இல்ல. அப்பா ஒரு அம்மாக்கூடப் போயிட்டாரு. அம்மா வேறொரு ஆளு கூட போயிருச்சு. எப்ப..? நான் சின்னதா இருக்குறப்ப. நீ யாரிடம் வளர்ந்தாய்..? பாட்டிகிட்ட. பாட்டியும் செத்துருச்சு. அப்புறம் ஒரு பக்கத்து வீட்டம்மாதான் என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க. நீ என்ன வேலை செய்ற..? சின்னதா இருக்கும்போது கரகம் ஆடுவேன். கோயில் திருவிழாவுல உனக்கு எவ்வளவு காசு கிடைக்கும்..? காசு கீழ போடுவாங்க. பொறுக்கி எங்க சின்னம்மாகிட்டக் கொடுப்பேன். அப்புறம் என் சட்டையில குத்துவாங்க. சுமாரா ஒரு நாளைக்கு 20 ரூபாயிலேர்ந்து 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். நா 20 கிடைச்சா அப்படியே கொடுத்துடுவேன். 30 கிடைச்சா ஐஞ்சு, பத்து எத்துக்குவேன். வாங்கித் தின்னுவேன். நிறைய பணம் என்னிக்காவது கிடைக்குமா..? கூட்டம் நிறைய இருந்தா என் சட்டையில பணம் அதிகமா குத்துவாங்க. தினமும் வேலை உண்டா..? இல்ல. சீசன் டைம்லதான் வேலையே. வருசத்துக்கு ஆறு மாசம் சீசன். அப்பத்தான் கரகம் ஆடுவேன். கரகத்துல கண்ணுல கர்ச்சிப் எடுப்பேன். தாம்பளம் வச்சு ஆடுவேன். யார்கிட்ட கத்துகிட்ட....

பாண தீர்த்தம் அருவியும், கொக்கரை கருவியும்..!

படம்
பெ ய்து பொழிந்தாலும், வீழ்ந்து நிமிர்ந்தாலும், குவிந்து கிடந்தாலும், சீறி வந்தாலும் நீரின் வடிவங்கள் எப்போதும் பிரமிப்பூட்டுபவை. அருவியாக, மழையாக, சாரலாக, ஏரியாக, நதியாக, அணைக்கட்டாக, கடலாக, இலையில் தேங்கி நிற்கும் ஒரு துளியாக, மழையில் நனைந்த பறவை காற்றில் சிலுப்பிவிடும் திவலைகளாக.. தனக்கு சாத்தியமான எல்லா வடிவங்களிலும் வசீகரிக்கிறது நீர். அப்படி திசைகளெங்கும் நீரொழுகும் ஒரு நீர் நாளில் நீர் தரிசனத்துக்குப் போனேன். உண்மையாகவே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் பிறப்பிடம் அமைந்திருக்கும் பொதிகை மலை. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் வழியாக டூ வீலரில் ஏறும்போதே குற்றாலச்சாரல் முகத்தில் அறைய ஆரம்பிக்கிறது. கூடவே, 'ஒரு girl friend பின்னால் அமர்ந்து வந்தால் எப்படியிருக்கும்..?' என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை (நீதி: சாத்தியமாயின் இணையோடு செல்லுங்கள்). பெரிய மலையேற்றமெல்லாம் இல்லை. மிக லேசான ஏற்றம்தான். இரண்டு, மூன்று வளைவுகள் தாண்டிய உடனேயே தூரத்தில் மலையை பிளந்துக்கொண்டு ஊற்றுகிறது அகத்தியர் அருவி. அருகிலேயே பாபநாசம் நீர் மின்சார...

கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!

படம்
ம க்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு காணத்தெரியாமல்தான் சிரமப்படுகிறார்கள் என்பது போலவும் வந்த நாள் முதலாய் ஒட்டுமொத்த நாட்டையும் கனவுக் காணச்சொல்லி சாமியாடிக்கொண்டிருந்தார் அரசவை கோமாளி ( நன்றி: புதிய கலாசாரம்) அப்துல் கலாம். கிராமங்களில் பத்து நாள் திருவிழாவின் நாடகங்களில் ஒரே பப்பூன் தினமும் வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமென தினமொரு நபர் பப்பூனாக வருவது போல, ஐந்து வருடங்களுக்கொரு முறை அரசவை கோமாளி மாற்றியமைக்கப்படும் வைபவத்தில் இப்போது அப்துல் கலாமுக்கு 'நன்றி, வணக்கம்' சொல்லிவிட்டனர். அடுத்த கோமாளி தயாராகிக்கொண்டிருக்கிறார். எல்லோரையும் கனவு காணச்சொன்ன அப்துல் கலாம், இன்னொரு முறை அதே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கனவு கண்டார். ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..? 1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்...

கற்றதனால் ஆன பயனென்ன..?

படம்
"பை சா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன. 'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது. 'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வா...

கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28

படம்
மொ ட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி ஊத்துனமாறி இருக்கு. ''அரிசி வாங்கப் போவனும். கூப்பன்காரன் மூடிபுட்டுப் போயிடுவான். வாடா சீக்கிரம்.."னு மேலண்ட பக்கம் ஒதியமர நிழல்ல ஒதுங்கி நின்னு எங்க அம்மா கூப்பிடுது. காதுல வாங்கனுமே...ம் ஹூம். நாலஞ்சு தடவைக் கூப்பிட்ட பிறகு, ''பொறும்மா.. இந்த ஓவர் முடியட்டும்"ங்குறேன். எங்க அம்மாவுக்கா எரிச்சலுன்னா எரிச்சல். வந்து முதுகுலயே படார், படார்னு அடிச்சு, ''ஓவராவுது...கீவராவுது. இங்க என்ன வேப்பமர நெழலா விரிஞ்சுக் கெடக்கு..?" என்று திட்டியபடியே இழுத்துப் போனாள். அது ஒரு அழகிய வெயில் காலம். வெயில், மழை ஒரு மண்ணும் தெரியாது. எப்போதும், பேட்டும் பந்துமாகத்தான் திரிவோம். எவனாவது ரெண்டு பேர் சந்தித்தால், 'கிரவுண்ட்ல யார் இருக்கா..?' என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஊர் உலகம் போலவே என் பால்யமும் கிரிக்கெட்டால் சூழப்பட்டிருந்தது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான கிராமங்களில் 'த்ரிரோசஸ் கிரிக்கெட் க்ளப், வின்ஸ்டார் கிரிக்கெட் க்ளப், ப்ளாக் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்' என்ற...

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்

படம்
''சுதந்திரம் என்பது கேட்டுப்பெறும் பிச்சைப்பொருள் அல்ல. வீரமிக்கப் போராட்டங்களால், விழுமிய தியாகங்களால் பற்றிப்பெற வேண்டியதாகும். 1947-ல்் பெற்ற சுதந்திரம் உண்மையானது அல்ல. அது போலி சுதந்திரமே ஆகும். வெள்ளைப் பரங்கியர்களின் கரங்களிலிருந்து, இந்திய தரகர்களின் கரங்களுக்கு அரசியல் அதிகாரம் மாறிய நாள்தான் ஆகஸ்ட் 15, 1947" - இப்படி புத்தகம் முழுக்க, ் சிவப்பு சிந்தனைகள் சிதறிக்கிடக்கின்றன. வாசிக்க, வாசிக்க பிரமிப்பும், வியப்பும் மேலிடுகின்றன. அது, 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற தோழர் கலியபெருமாளின் தன் வரலாற்று புத்தகம். புலவர் கு.் கலியபெருமாள் என்று சொன்னால் உங்களில் சிலருக்கு தெரியக்கூடும். புலவர் கலியபெருமாள் தமிழ் மண்ணின் தனித்துவமிக்க புரட்சியாளர். 'வசதி படைச்சவன் தரமாட்டான். வயிறு பசிச்சவன் விடமாட்டான்' என்ற வார்த்தைகளை செயலுக்குக் கொண்டு வந்தவர். நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியமைத்த புரட்சிக்கர போராளி. தன் வாழ்நாளெங்கும் உயிருக்கு அஞ்சாமல் அவர் நடத்திய போராட்டங்களையும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புரட்சிக்கர சிந்தனையை ஊட்டிய அவரது செ...