ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம்..

உன் வயசு என்ன..?
14
உன் பேரு..?
கவிதா
அம்மா, அப்பா இருக்காங்களா..?
இல்லை.
இல்லை.
இறந்துட்டாங்களா..?
இல்ல. அப்பா ஒரு அம்மாக்கூடப் போயிட்டாரு. அம்மா வேறொரு ஆளு கூட போயிருச்சு.
இல்ல. அப்பா ஒரு அம்மாக்கூடப் போயிட்டாரு. அம்மா வேறொரு ஆளு கூட போயிருச்சு.
எப்ப..?
நான் சின்னதா இருக்குறப்ப.
நான் சின்னதா இருக்குறப்ப.
நீ யாரிடம் வளர்ந்தாய்..?
பாட்டிகிட்ட. பாட்டியும் செத்துருச்சு. அப்புறம் ஒரு பக்கத்து வீட்டம்மாதான் என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க.
பாட்டிகிட்ட. பாட்டியும் செத்துருச்சு. அப்புறம் ஒரு பக்கத்து வீட்டம்மாதான் என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க.
நீ என்ன வேலை செய்ற..?
சின்னதா இருக்கும்போது கரகம் ஆடுவேன். கோயில் திருவிழாவுல
உனக்கு எவ்வளவு காசு கிடைக்கும்..?
காசு கீழ போடுவாங்க. பொறுக்கி எங்க சின்னம்மாகிட்டக் கொடுப்பேன். அப்புறம் என் சட்டையில குத்துவாங்க. சுமாரா ஒரு நாளைக்கு 20 ரூபாயிலேர்ந்து 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். நா 20 கிடைச்சா அப்படியே கொடுத்துடுவேன். 30 கிடைச்சா ஐஞ்சு, பத்து எத்துக்குவேன். வாங்கித் தின்னுவேன்.

நிறைய பணம் என்னிக்காவது கிடைக்குமா..?
கூட்டம் நிறைய இருந்தா என் சட்டையில பணம் அதிகமா குத்துவாங்க.
தினமும் வேலை உண்டா..?
இல்ல. சீசன் டைம்லதான் வேலையே. வருசத்துக்கு ஆறு மாசம் சீசன். அப்பத்தான் கரகம் ஆடுவேன். கரகத்துல கண்ணுல கர்ச்சிப் எடுப்பேன். தாம்பளம் வச்சு ஆடுவேன்.
யார்கிட்ட கத்துகிட்ட..?
தனியா கத்துக்கல. சின்னம்மா கரகாட்டக் கூட்டத்துல இருக்குறதானல் நானும் பார்த்து பழகிகிட்டேன்.
தனியா கத்துக்கல. சின்னம்மா கரகாட்டக் கூட்டத்துல இருக்குறதானல் நானும் பார்த்து பழகிகிட்டேன்.
இந்த தொழிலுக்கு வர யார் காரணம்..?
முன்னால எங்க சின்னம்மா ராத்திரி எங்கேயோ கூட்டிகிட்டுப்போய் வாசல்ல படுக்க வச்சுட்டு உள்ள மாமாக்கூட இருக்கும். அப்ப வரும்போது எனக்கு நிறைய பலகாரம் குடுப்பாங்க. இப்ப எங்க சின்னம்மாவுக்கு உடம்பு சொகமில்லை. அதனால நான் அந்த வேலையை செய்யுறேன்.

எவ்வளவு பணம் கொடுப்பாங்க..?
சில பேர் 500 எல்லாம் குடுப்பாங்க. அத எங்க சின்னம்மாதான் பேசிக்குவாங்க. எனக்கு நா கேக்குறதெல்லாம் வாங்கிக் குடுப்பாங்க. நல்லா சாப்பிடுவேன். நிறையபேர் கேரளால இருந்துதான் வருவாங்க. எல்லாரும் சின்னவங்க. வயசுக்கு வராதவங்ககிட்ட வியாதி வராதுன்னு சொல்றாங்க.

நீ இன்னும் வயசுக்கு வரலயா..?
ஆமா
ஆமா
எப்படி இருந்தாலும் வியாதி வரும். தெரியுமா..?
ம்.. தெரியும். அதனால அவுங்க உறை வச்சுக்குவாங்க.
ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க..?
5 பேர்.. 6 பேர்.. நான் குவாட்டர் குடிச்சுக்குவேன்.
5 பேர்.. 6 பேர்.. நான் குவாட்டர் குடிச்சுக்குவேன்.
லாட்ஜுக்குப் போவியா..?
அங்கயும் போவேன். பெரும்பாலும் இங்க சத்திரங்கள் நிறைய இருக்கு. அங்க போவோம்.
அங்கயும் போவேன். பெரும்பாலும் இங்க சத்திரங்கள் நிறைய இருக்கு. அங்க போவோம்.
வரும் பணம் மொத்தமும் உங்க சின்னம்மாவுக்கா..? இல்ல உனக்கும் கிடைக்குமா..?
ம்ஹூம்.. எனக்கு சாப்பாடு.. நல்ல துணி, எல்லாம் கிடைக்கும். பணம் எங்கம்மாக்குதான். நான் சினிமாக்குப் போக பணம் வாங்கிக்குவேன்.
ம்ஹூம்.. எனக்கு சாப்பாடு.. நல்ல துணி, எல்லாம் கிடைக்கும். பணம் எங்கம்மாக்குதான். நான் சினிமாக்குப் போக பணம் வாங்கிக்குவேன்.
இது தப்புன்னு தெரியலையா..?
எனக்குத் தெரியலை.
எனக்குத் தெரியலை.
எத்தனை வகுப்பு வரை படிச்ச..?
3 வது வரைக்கும். பள்ளிக்கூடத்துல சத்துணவு போட்டதுனால போனேன். அதுக்கப்புறம் ஆட்டத்துக்கு வந்துட்டேன்.
3 வது வரைக்கும். பள்ளிக்கூடத்துல சத்துணவு போட்டதுனால போனேன். அதுக்கப்புறம் ஆட்டத்துக்கு வந்துட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லாம போனதுண்டா..?
நெறைய தடவை காய்ச்சல், தலைவலி எல்லாம் வரும். அப்பல்லாம் நான் வீட்டுலயே படுத்துக்குவேன்.
நெறைய தடவை காய்ச்சல், தலைவலி எல்லாம் வரும். அப்பல்லாம் நான் வீட்டுலயே படுத்துக்குவேன்.
உனக்கு எல்லாமே புரியுதா..? தெரிஞ்சுதான் போறியா..?
எல்லாம் புரியுது.
எல்லாம் புரியுது.
படிப்பு ஆர்வம் உண்டா..?
ம்ஹூம். இந்த வயசுல எத்தனாவது படிக்க..? எங்க டீச்சர் ஒரு தடவை குச்சிய வச்சு அடிச்சுட்டாங்க. இங்க பாருங்க.. குச்சியில இருந்து ஆணி கிழிச்சுவிட்ட தழும்பு கூட இருக்கு. அன்னிக்கு எனக்குக் காய்ச்சல் வந்துருச்சு. அன்னிலேர்ந்து பள்ளிக்கூடத்துகு போகல. இனியும் போகமாட்டேன். அப்பவே எனக்கு இங்க்லீஸ் தெரியலை. இப்ப எப்படி படிக்கிறது..?

பள்ளிக்கூடத்துகுப் போக வேண்டாம். வீட்டுலேர்ந்தே படிக்கலாம். அதுக்கு வசதி இருக்கு..
(வெட்கப்பட்டு) போங்க.. எங்க நேரம் இருக்கு..? காலையில குடிச்சா போதை தெளிய மதியம் ஆகிடும். பசிக்கும். அப்புறம் சாயுங்காலம் வேற குடிப்பேன்ல..
(வெட்கப்பட்டு) போங்க.. எங்க நேரம் இருக்கு..? காலையில குடிச்சா போதை தெளிய மதியம் ஆகிடும். பசிக்கும். அப்புறம் சாயுங்காலம் வேற குடிப்பேன்ல..
உனக்கு ரொம்ப சின்ன வயசு. நீ இப்படியே இருந்தால் உன்னுடைய உடல், மனம் எல்லாம் பாழாகிவிடும். இதைப்பத்தி யோசிச்சியா..?
அது எங்கம்மா, அப்பா யோசிச்சிருக்கனும். எங்க பாட்டி செத்துப்போன பின்னாடி எனக்கு யார் சோறு போட்டாங்க..? எங்க சின்னம்மாதான் கவனிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கும், என்னைய விட்டா வேற ஆளில்ல. அதனால நாந்தான் அவங்களுக்கு எல்லாம்.

செஞ்சது வரைக்கும் சரி.. இனிமேல் வேண்டாம். இதுலேர்ந்து நீ வெளியில வரணும். உன்னை மாதிரியானவங்களுக்கு உதவ இங்க நிறைய அமைப்புகள் இருக்கு..
எனக்கும் இது புடிக்கலதான். என்ன செய்யனும்னு தெரியலை. வேற வேலை கிடைக்காது. இப்படியே சம்பாதிச்சு பழகிடுச்சு. கஷ்டப்பட்டு வேலை செய்ய இனி முடியாது.
எனக்கும் இது புடிக்கலதான். என்ன செய்யனும்னு தெரியலை. வேற வேலை கிடைக்காது. இப்படியே சம்பாதிச்சு பழகிடுச்சு. கஷ்டப்பட்டு வேலை செய்ய இனி முடியாது.
போலீஸ் பயம் இருக்கா..? இதுக்கு முன்னாடி மாட்டியிருக்கியா..?
உண்டு. ஆனா காசு குடுத்துருவோம். எவ்வளவுன்னு எங்கம்மாதான் பேசுவாங்க.
உண்டு. ஆனா காசு குடுத்துருவோம். எவ்வளவுன்னு எங்கம்மாதான் பேசுவாங்க.
பொதுவா என்னவிதமான துன்பங்கள் உனக்கு உண்டு..?
நிறைய மயக்கமா இருக்கும்போது பணத்த திருடிடுவாங்க. சில சமயம் குடுக்காமலும் ஓடிடுவாங்க. நான் டிரெஸ் போட்டுட்டுப்போயி கண்டுபிடிக்க நேரம் ஆகும். அதனால எங்க சின்னம்மா காச முதல்லயே வாங்கிக்கும். அப்புறம் அதிகமா குடிக்கிறதால குவார்ட்டர் அடிச்சாலும் இப்பல்லாம் போதை வர்றதில்லை. இதுக்கே காசு கூட வேணும். அப்புறம் ஒரு தடவை என்கிட்ட ஒரு ஆளு வந்தாரு. ரொம்ப இருமல். எனக்கு அருவெருப்பா இருந்துச்சு. நான் மாட்டேன்னு சொன்னேன். அம்மா காசு வாங்கிடுச்சு. அப்புறம் நான் அம்மாகிட்ட சத்தம்போட்டு பணத்தை வாங்கிக்கொடுத்துட்டேன். இப்பல்லாம் அப்படி செய்யுறதில்லை.

முதன்முதல்ல இந்த தொழிலுக்கு வந்தப்ப என்ன நினைச்ச..?
நான் கரகம் ஆடிட்டிருந்தப்ப என் சட்டையில பணம் குத்துவாங்கன்னு சொன்னேன்ல.. அப்பவே ஆம்பளைங்க நிறைய தப்பு பண்ணுவாங்க. எனக்கு முதல்ல பயமா இருந்துச்சு. அப்புறம் ஒண்ணும் தெரியல. அதுமாதிரி இந்த தொழிலுக்கு முதல்ல வரும்போது அம்மா எல்லாம் சொல்லி குடுத்துச்சு. ஆனாலும் பயமா இருந்துச்சு. அப்புறம் குடிச்சதால ஒண்ணும் தெரியலை.

இந்த தொழில் சரியில்லைன்னு உனக்கு தோணலையா..? எங்களைப்போல படிச்சு நல்ல வேலை பார்க்கனும்னு உனக்கு ஆசையில்லையா..?
உங்க அம்மா, அப்பா நல்லவங்க. அதனால நல்லாயிருக்கீங்க(அழுதுகொண்டே..). நான் ஏன் பிறந்தேன்னு எனக்குத் தெரியலை. பிறந்தப்பவே கொன்னுருந்திருக்கலாம். என்னையமாதிரி பொண்ணுக இருக்கவேக் கூடாது. எங்க கூட, எங்க தெருவுல இருக்குற யாரும் பேசறதில்ல தெரியுமா..?
உன் ஆசை என்ன..?
நிறைய விளையாடனும்னு நினைப்பேன். எங்க வீட்டுப் பக்கத்துல என்னையமாதிரி பிள்ளைக விளையாடுவாங்க. எப்பயாவது உடம்பு சரியில்லாம வீட்டுல இருக்கும்போது பார்ப்பேன். ஆசையா இருக்கும். வேடிக்கை பார்த்துட்டு உள்ளப் போயிடுவேன்.

உன் வீடு வசதியானதா..?
எங்க வீடு அடிவாரத்துல இருக்கு. ஓட்டு வீடுதான். சாப்பாட்டுக்கு பிரச்னையில்லை. எங்கம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை. அதனால நிறைய காசு அதுக்கே போயிடும்.
உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்குறவங்க என்ன வேலை செய்யுறாங்க..?
இருநூறு வீடுங்க இருக்கும். எனக்கு தெரிஞ்சே சில பேரு இந்த வேலை செய்யுறாங்க.
இருநூறு வீடுங்க இருக்கும். எனக்கு தெரிஞ்சே சில பேரு இந்த வேலை செய்யுறாங்க.
அப்புறம், பக்கத்து வீட்டுல உள்ளவங்கக் கூட உங்கக்கூட பேசுறதில்லன்னு சொன்னியே...?
அவுங்க நல்ல வேலை செய்வாங்களோ என்னவோ..?
அவுங்க நல்ல வேலை செய்வாங்களோ என்னவோ..?
என்னவா ஆகனும்னு ஆசை..?
எனக்கு டீச்சரா ஆகனும்னுதான் ஆசை.
எனக்கு டீச்சரா ஆகனும்னுதான் ஆசை.
கண்டிப்பா ஆகலாம். நிறைய வாய்ப்புகள் இருக்கு. கஸ்டப்பட்டு படிக்கனும்.. கண்டிப்பா ஜெயிக்கலாம்..
நாந்தான் முன்னாலயே சொன்னேனே.. படிச்சாலும் அப்பவும் என்கிட்ட யாரும் சேரமாட்டாங்க. யாரும் வேலை தர மாட்டாங்க. நான் போயி பள்ளிக்கூடத்துல டீச்சர் வேலைக்குப் போக முடியுமா..?
டீச்சர் தொழில் மட்டுமே தொழில் இல்லை..
எந்த வேலைக்குப் போனாலும் என்னைய சேத்துக்க மாட்டாங்க. நான் என்னைய மாதிரி வேல செய்யுற சில பேருகிட்டக் கேட்டப்ப, சேல்ஸ் பண்றங்க படிச்சவங்க எல்லாம்தான் இந்த தொழில்ல இருக்காங்க. அவுங்க மட்டும் ஏன் இந்த தொழிலுக்கு வரணும்..?என்கிட்ட வர்றதுலயும் நிறைய பேர் படிச்சவங்கதான்.

நான் உங்க சின்னம்மாவைப் பார்த்து பேசுறேன். நீ எதுவும் சொல்ல நினைக்கிறீயா..?
ம்ஹூம்.. அம்மா, அப்பா இப்படி செய்யக்கூடாது. அப்படிப்போனா குழந்தைப் பெத்துக்கக் கூடாது.. அவ்வளவுதான்..
ம்ஹூம்.. அம்மா, அப்பா இப்படி செய்யக்கூடாது. அப்படிப்போனா குழந்தைப் பெத்துக்கக் கூடாது.. அவ்வளவுதான்..
-'பாலியல் தொழில்.. யார் குற்றவாளி..?'
என்ற தலைப்பில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாக்கியம் என்பவர் தொகுத்திருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய நூலிலிருந்து பழநியைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வாக்குமூலம்...
என்ற தலைப்பில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாக்கியம் என்பவர் தொகுத்திருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய நூலிலிருந்து பழநியைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வாக்குமூலம்...
கருத்துகள்
___
ஜெய் ஹிந்த்!!
:-(((((((((((((
விராலிமலை அருகே 'பொட்டுக்கட்டுதல்' என்ற பெயரில் இன்றும் தொடர்கிறது இந்துமதத்திலிருந்து ஒழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தேவதாசி முறை. அந்த பகுதியில் பாலியல் தொழிலாளர்களோடு உரையாடிய போது இந்த வலியை உணர்ந்தேன். மனைவியை யாரோ ஒருவனுடன் வீட்டிற்குள் 'அனுப்பி'விட்டு வாசலில் காத்திருந்த கணவன், மகளை 'அனுப்பிவிட்டு' காத்திருந்த தாய்...எயிட்ஸ் வராமல் உறை உறை உபயோகியுங்கள் என்ற 'புள்ளிராஜா' விளம்பரம் பட்டுமே செய்யும் அரசு. இதன் பின்னால் இருக்கும் சமூக, பொருளாதார காரணங்களையும், காவல்த்துறை, தரகர்கள், அரசியல்வியாதிகள் என்னும் சமூகவிரோத கூட்டணியும் இருக்கிறது.
முருகனின் கோவிலின் அருகே மக்களை இந்த நிலைக்கு தள்ளிய கயவர்கள் பக்திமிக்க நல்லவர்களாக வலம் வருகிறார்கள்.
எனது உரையாடலின் போது பாலியல் தொழிலாளர் ஒருவர் சொன்னது 'நள்ளிரவில் ஒரு நாள் சூரியன் உதிக்கவேண்டும், சில நல்லவர்களின் வேடம் அந்த நேரம் தெரியும்'. இது சத்தியமான வார்த்தைகள்.
மயிலாடுதுறை சிவா
புள்ளிராஜா
kobappaduvathaa - yaar mela
varuthappaduvathaa-
vetkappaduvathaa -
oru maathiri ellam kalantha oru verumai soozhvathai thavirkka mudiyavillai - ranjith
__
வாழ்க தமிழ்!!
பழனியிலா? தமிழகத்திலா இக் கொடுமை நடக்கிறது.
/* எங்க டீச்சர் ஒரு தடவை குச்சிய வச்சு அடிச்சுட்டாங்க. இங்க பாருங்க.. குச்சியில இருந்து ஆணி கிழிச்சுவிட்ட தழும்பு கூட இருக்கு. அன்னிக்கு எனக்குக் காய்ச்சல் வந்துருச்சு. அன்னிலேர்ந்து பள்ளிக்கூடத்துகு போகல. இனியும் போகமாட்டேன். அப்பவே எனக்கு இங்க்லீஸ் தெரியலை. இப்ப எப்படி படிக்கிறது..? */
(-:
ஆழியூரான், இப்படிப் பாதிக்கப்பட்ட சிறுவர்களை இதிலிருந்து விடுவிக்க யாரும் முயற்சிக்கவில்லையா? இப்படி அல்லலுறும் தமிழ்ச் சிறர்களை விடுவிக்க ஏதேனும் முயற்சி எடுக்க வேணும். சும்மா பதிவைப் படித்துவிட்டுப் போய்விடக்கூடாது. என்ன செய்யலாம்? தமிழகத்தில் இருக்கும் அன்பர்கள்தான் சொல்ல வேணும். நான் என்னாலான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.
என்ன கொடுமை இது!!! தமிழினத்துப் பிஞ்சுகள் தமிழ்மண்ணில் இப்படி அல்லல்படுகிறர்கள் எனும் போது மனது கனக்கிறதே.
ஆனால் இது ஒரு கவிதாவோடு நின்றுபோகிற விஷயமில்லை. எனக்குத் தெரிந்த அளவில்/ என் சக்திக்குட்பட்டு நான் உதவுகிறேன். அதே போல் நீங்களும் இருப்பீர்கள். ஆனால், உங்கள்/என் பார்வை எல்லைகளுக்கப்பால் ஆயிரமாயிரம் கவிதாக்களை காலத்தின் கொடுங்கரங்கள் இறுக்கி நெறிக்கின்றன. அதை தனி நபர்கள் தடுத்து நிறுத்த முடியாது. அரசும் கூட ஒரு எல்லைக்குப்பிறகு இந்த விஷயத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை எனக்கு. இது சமூகத்தின் பிரச்னை. நிரந்தர தீர்வுகளை நோக்கி நகரலாமே ஒழிய, நிரந்தர தீர்வென்று ஒன்று வருமா என்பது சந்தேகமே..!
குறிப்பு: என் கவனத்துக்கு இம்மாதிரியான பாதிக்கப்பட்டவர்கள்பற்றிய விவரங்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்-பணியின் காரணமாக. அம்மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு உதவும் நபர்களை தேடி அலைவதில் சிரமம் வருவதும் உண்டு. அப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்களை தொடர்புகொள்கிறேன். வாய்ப்பிருப்பின் தனி மடலில் என்னை தொடர்புகொள்ளுங்கள்.
nadaivandi@gmail.com

தேவடியாள்களுக்கு பிறந்த நாய்கள்தான் இதுமாதிரி சிறுமிகளை எல்லாம் தேவடியாள் ஆக்கும் வேலையில் இறங்கி இருக்கின்றன.
வீட்டில், வெளியில், சமுதாயத்தில் நல்லவர்களைபோல் நடித்துவிட்டு பொழுது சாய்ந்ததும் பொறுக்கித்தன அடாவடிகளில் இறங்கிவிடுகின்றனர்.
இப்பேய்கள் என்ன பாவம் செய்தாலும் இருக்கவே இருக்கிறதே கழிசடை பிடித்த அவர்களது கடவுள்கள், மன்னிப்பதற்கு.
பொறுப்பற்ற பெற்றோர்கள் தங்கள் சுய நலத்திற்காக தான் பெற்ற பிள்ளைகளையே சதை வெறிபிடித்த முதலைகளுக்கு காவு கொடுத்திருக்கிறார்கள்.
விழிப்புணர்வு உண்டாக்கும் இந்த பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க ஆழியூரான். திண்டுக்கல் பாக்கியம் அவர்களின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
இந்த பதிவினை எனது பிரஞ்சு பதிவு ஒன்றில் மொழி பெயர்த்து பதிவிட உங்கள் அனுமதி கோறுகிறேன்.
::நீங்கள் மொழிபெயர்த்து வெளியிடுவதில் எனக்கு ஏதும் ஆட்சேபணையில்லை::
ம்ஹூம். இந்த வயசுல எத்தனாவது படிக்க..? எங்க டீச்சர் ஒரு தடவை குச்சிய வச்சு அடிச்சுட்டாங்க. இங்க பாருங்க.. குச்சியில இருந்து ஆணி கிழிச்சுவிட்ட தழும்பு கூட இருக்கு. அன்னிக்கு எனக்குக் காய்ச்சல் வந்துருச்சு. அன்னிலேர்ந்து பள்ளிக்கூடத்துகு போகல. இனியும் போகமாட்டேன். அப்பவே எனக்கு இங்க்லீஸ் தெரியலை. இப்ப எப்படி படிக்கிறது..?///
தடியில ஆணி வைச்சு எல்லாம் ரீச்சர் அடிப்பாங்களா தமிழ் நாட்டில?
அடக் கடவுளே
இப்படி பண்ணினா பிள்ளை பள்ளிக்கூடம் போறதுக்கு விருப்பப்படாது தானே
இப்படிப் பட்ட ரீச்சரும் இந்தப் பெண்ணின் நிலைக்கு ஒரு காரணம்
_______
CAPitalZ
ஒரு பார்வை
இந்த 'நல்ல பெற்றோர்களின்' இலக்கணம் இத்துடன் நிறைவுறுகிறதா? பெற்றவர்களின் கடமை - குழந்தைகளை இத்தகைய படுகுழிகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லை. இத்தகைய படுகுழிகளில் வீழ்ந்து அவதியுறும் பிறரை மீட்டெடுப்பதிலும் இருக்க வேண்டும். 'தொழில்' செய்யாமலிருப்பது மட்டுமல்ல - அந்த தொழிலுக்கு உயிரூட்டும் வாடிக்கையாளராக இருப்பதும் கூடாது என்ற வகையிலும் 'நல்ல பெற்றோர்கள்' தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
பெற்றவர்களின் பணி மகத்தானது. முன்னுதாரணமாக திகழ்ந்தாலே போதும். ஆடம்பரமாக அறிவுரையெல்லாம் கூறிவிட்டு, பின்னர் மறைவாக தங்களது ஈனங்களையும் சுயநல மோகங்களையும் தேடி அலைந்து கொண்டிருந்தால், எந்தக் குழந்தைகளும் நல் வழியில் நடக்காது.
பாலியியல் தொழிலாளியின் வாக்குமூலம் வருந்த வைக்கிறது. அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருப்பாள் என்பது எந்த விதத்திலும் ஆறுதல் இல்லை.
அவளைப் போல் இன்னும் எத்தனை பேரோ?
நண்பன்
இது தான் உச்சக் கட்டக் கொடுமை.
யார்? யார்? யார்?
????????????????