இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

படம்
"பை சா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை கல்வியை கரன்ஸியால் அளவிடுகிறது. கல்வி கற்பிப்பதே வணிகமாகிவிட்ட சூழலில் முதல் போட்டவர்கள் அதை வட்டியோடு திருப்பி எடுக்க நினைக்கின்றனர். இந்த சூழலில், தமிழின் சில எழுத்துக்களைப் பார்த்தால் உண்மையிலேயே 'இவற்றால் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லையே..' என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சின்ன வயதில் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும், சில நாட்களில் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமுமே என் முன்னால் அமர்ந்திருக்க, நான் 'கா..ஞா..சா..' என்று கால்சட்டையோடு நின்று கத்துவேன். எதிரில் உள்ள மாணவர்கள் உரத்த குரலில் அதை கோரஸாக எதிரொலிப்பார்கள். அப்படிப் படிக்கும்போதுதான் கீழ்கண்ட எழுத்துக்களையும் படித்திருப்பேன் போல.. ஆனால், இப்போது அனைத்துமே 'வெள்ளெழுத்துகளா'கத்தான் தெரிகின்றன. 'ஞ' வரிசையில் ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞொ, ஞோ, ஞௌ... போன்ற எழுத்துக்களைப் பார்த்தால் இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள்தானா என்று சந்தேகமே வருகிறது. 'ட' வரிசையில் 'டௌ' என்ற எழுத்து வருகிறது. சில ஆங்கில வா...

கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28

படம்
மொ ட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி ஊத்துனமாறி இருக்கு. ''அரிசி வாங்கப் போவனும். கூப்பன்காரன் மூடிபுட்டுப் போயிடுவான். வாடா சீக்கிரம்.."னு மேலண்ட பக்கம் ஒதியமர நிழல்ல ஒதுங்கி நின்னு எங்க அம்மா கூப்பிடுது. காதுல வாங்கனுமே...ம் ஹூம். நாலஞ்சு தடவைக் கூப்பிட்ட பிறகு, ''பொறும்மா.. இந்த ஓவர் முடியட்டும்"ங்குறேன். எங்க அம்மாவுக்கா எரிச்சலுன்னா எரிச்சல். வந்து முதுகுலயே படார், படார்னு அடிச்சு, ''ஓவராவுது...கீவராவுது. இங்க என்ன வேப்பமர நெழலா விரிஞ்சுக் கெடக்கு..?" என்று திட்டியபடியே இழுத்துப் போனாள். அது ஒரு அழகிய வெயில் காலம். வெயில், மழை ஒரு மண்ணும் தெரியாது. எப்போதும், பேட்டும் பந்துமாகத்தான் திரிவோம். எவனாவது ரெண்டு பேர் சந்தித்தால், 'கிரவுண்ட்ல யார் இருக்கா..?' என்பதுதான் கேள்வியாக இருக்கும். ஊர் உலகம் போலவே என் பால்யமும் கிரிக்கெட்டால் சூழப்பட்டிருந்தது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான கிராமங்களில் 'த்ரிரோசஸ் கிரிக்கெட் க்ளப், வின்ஸ்டார் கிரிக்கெட் க்ளப், ப்ளாக் ஸ்டார் கிரிக்கெட் க்ளப்' என்ற...

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்

படம்
''சுதந்திரம் என்பது கேட்டுப்பெறும் பிச்சைப்பொருள் அல்ல. வீரமிக்கப் போராட்டங்களால், விழுமிய தியாகங்களால் பற்றிப்பெற வேண்டியதாகும். 1947-ல்் பெற்ற சுதந்திரம் உண்மையானது அல்ல. அது போலி சுதந்திரமே ஆகும். வெள்ளைப் பரங்கியர்களின் கரங்களிலிருந்து, இந்திய தரகர்களின் கரங்களுக்கு அரசியல் அதிகாரம் மாறிய நாள்தான் ஆகஸ்ட் 15, 1947" - இப்படி புத்தகம் முழுக்க, ் சிவப்பு சிந்தனைகள் சிதறிக்கிடக்கின்றன. வாசிக்க, வாசிக்க பிரமிப்பும், வியப்பும் மேலிடுகின்றன. அது, 'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' என்ற தோழர் கலியபெருமாளின் தன் வரலாற்று புத்தகம். புலவர் கு.் கலியபெருமாள் என்று சொன்னால் உங்களில் சிலருக்கு தெரியக்கூடும். புலவர் கலியபெருமாள் தமிழ் மண்ணின் தனித்துவமிக்க புரட்சியாளர். 'வசதி படைச்சவன் தரமாட்டான். வயிறு பசிச்சவன் விடமாட்டான்' என்ற வார்த்தைகளை செயலுக்குக் கொண்டு வந்தவர். நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டியமைத்த புரட்சிக்கர போராளி. தன் வாழ்நாளெங்கும் உயிருக்கு அஞ்சாமல் அவர் நடத்திய போராட்டங்களையும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புரட்சிக்கர சிந்தனையை ஊட்டிய அவரது செ...

ஓடிப்போலாமா...?

படம்
அ ர்த்தங்களும், அபத்தங்களும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் தடுமாற்றங்களுடன் கழிகின்றன நாட்கள். அதில் பல அபத்தங்கள் விதிக்கப்பட்டவை. சில, விதித்துக்கொண்டவை. காதல் என்ற இயல்புணர்ச்சி, மன்னிக்க முடியாத உயரிய துரோகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் சமூக அபத்தமும் அப்படி விதித்துக்கொண்டனவற்றில் ஒன்றுதான். ஆனால், இதில் அபத்தம் மட்டுமே இல்லை. இந்த சாக்கடை சமூகத்தின் எல்லா அனர்த்தங்களும், அசிங்கங்களும் மூழ்கியிருக்கின்றன. கடந்த மூன்று பதிவுகளாக 'அவன் நம்ம ஆளு' , 'செல்வியக்கா' , 'ரவுடி பிரேமா' ஆகிய மூன்று கதைகளை எழுதினேன். காதல் மறுக்கப்பட்ட சமூகத்தில், வாழ்வதற்காக ஓடிப்போக வேண்டிய அவல நிலை இருப்பதையும், ஓடிப்போன பின்னால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலையையும் அந்தக் கதைகள் விவரித்தன. இவை ஏதோ திட்டமிட்டு, கற்பனையில் எழுதப்பட்ட கதைகளல்ல. மிகை விழுக்காடு உண்மைகளே அந்த கதைகளை ஆட்கொண்டிருக்கின்றன. அனைத்தும் நானறிய நிகழ்ந்தவை. அவற்றை கட்டுரையாக எழுத நினைத்து, கதைக்குரிய தன்மை இருப்பதாக உணர்ந்ததால், கதையாக எழுதப்பட்டன. எது, எதுவோ மாறிவிட்டது. மக...

'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..'

படம்
'நா டக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது. பி ரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'. தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்...

"இது ஒரு கிறுக்கு பயபுள்ள.."

படம்
'பு த்திசாலியெல்லாம் தன்னை கிறுக்குன்னு சொல்லி பெருமைப்பட்டுக்குறாக.. உண்மையான கோட்டிக்காரன் இங்கன ஒருத்தன் இருக்கேன்..யாரும் கண்டுக்கிடவே மாட்டங்காங்களே..?' என்று புறக்கணிப்பின் தேதனையோடு புழுங்கித் திரிந்த நேரத்தில், 'வாங்க தம்பி' என வாஞ்சையோடு அழைத்திருக்கிறார் திரு. 'எல்லார்க்குள்ளயும் ஒரு பயந்தபய இருக்காம்ண்ணே.. ஆனால் யாரும் இதை ஒத்துக்கிற மாட்டாக. நான் அதை சினிமாவுல பண்றனா..அதைப் பார்த்து அம்புட்டு பேத்துக்கும் சந்தோஷம். இதுதாம்ணே நான் ஜெயிக்கிறதுக்குக் காரணம்' என்று நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நானும் அப்படிப்பட்ட பயந்தபயதான். வீட்டின் ஒற்றை ஆண்பிள்ளை என்று பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததன் விளைவாக இருக்கலாம்('உனக்கு உடம்புல தெம்பில்லை..அதை ஒத்துக்க. அதை விட்டுட்டு உன் அப்பன் ஆத்தாளை ஏன் குத்தம் சொல்லுற..?'). ஆனால், இந்த பயத்தை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை. 'போட்ருவோம்..பொழந்துருவோம்' என்று பேச்சிலேயே வீச்சரிவாள் வீசுவது பழகிப்போய்விட்டது. ஆனால், இந்த வீர வெங்காயமெல்லாம் நோஞ்சான்களுக்கு மத்தியில்தான். கொஞ்சம் உடம்பு ...

வாத்திமார் வரலாறு....

படம்
ப ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு. தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான். மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரா ன்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்க...