இடுகைகள்

ஃபேஸ்புக்: தீதும், நன்றும்!

படம்
ஃபே ஸ்புக்கில் யாரோ போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டுவிட்டு ஒரு டீ குடிக்க வந்திருக்கிறீர்களா ? எச்சரிக்கை … திரும்பிச் செல்லும்போது உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் . ‘ ஒரு லைக் போடுறது குத்தமாய்யா ?’ என்று நீங்கள் அலறினாலும் இதுவே யதார்த்தம் . கேரளா - சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி . ஜே . குரியனுக்கு ஆதரவாக பேசிய மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய ; அதை ஷேர் செய்த 111 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல்துறை . சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை . நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களும் , பொதுச் சொத்தை சூறையாடியவர்களும் எந்த வம்பு , வழக்கும் இல்லாமல் சொகுசாக இருக்க … ஃபேஸ்புக்கில் தனது கருத்து சொன்ன ஒரே காரணத்துக்காக வழக்கு போட்டிருப்பது இணைய உலகை அதிர வைத்திருக்கிறது . ‘‘ கருத்து சுதந்திரத்துக்கு இதைவிட ந...