இடுகைகள்

தாய்ப்பூனை; தகப்பன் பூனை!

படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். பைகளை எடுத்துக்கொண்டு அறைக் கதவை சாத்தும்போது உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம். கட்டிலுக்குக் கீழே ஒரு பூனை குட்டிப் போட்டிருந்தது. கண் திறக்காத நான்கு பூனைக் குட்டிகள். ஒன்று வெள்ளை; மற்ற மூன்றும் அழகிய கறுப்பு. அடைகாத்து படுத்திருந்த தாய்ப்பூனை எட்டிப் பார்த்த என்னை கடும் கோபத்தோடு முறைத்தது. சில நாட்களாகவே இந்த பூனை எங்கள் வீட்டுக்குள் அடிக்கடி வருவதும், போவதுமாக இருந்ததன் காரணம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாகவே இந்த பூனை வளர்ப்பது, நாய் வளர்ப்பது இதில் எல்லாம் எனக்கு அனுபவமோ, ஆர்வமா இருந்தது இல்லை. மனைவிக்கும் அப்படியே. அதனால் இந்தப் பூனைக் குட்டிகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலுக்கு வேறு தாமதமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி தாய்ப்பூனை வந்து செல்வதற்கு வசதியாக வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றோம். (ஊருக்குப் போகும்போது ஜன்னல் கதவுகளை இறுக்க தாழிடுவதுதான் வழக்கம். அப்படி செய்திருந்தால் அந்த குட்டிகளின் நிலை என்னவாகியிருக்கும்? அய்யோ.. ). ஊரில் பூனைக் குட்டிகளை நினைத்துப் பா...

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'

படம்
‘காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை? அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை.  முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன. எதுதான் உண்மை? ஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன...

உழைப்பே உயர்வு: யாருக்கு?

படம்
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறீர்கள்? உங்களை சுற்றியிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் உழைக்கிறார்கள்? பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது உங்கள் ‘உழைக்கும் நேரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது? நிச்சயம் பதில்களின் நிறம் ஒரே மாதிரிதான் இருக்கும். மனிதர்கள் முன்னெப்போதைவிட மிக அதிகமாக உழைக்கும் காலம் இது! இடைவிடாமல் இயந்திரத்தைப் போல எல்லோரும் உழைக்கிறோம். நவீன அறிவியல் நாள்தோறும் விதவிதமான கருவிகளைக் கண்டுபிடிக்கிறது. நியாயமாகப் பார்த்தால், அவை நம் உழைப்பைக் குறைத்து ஓய்வை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், முதலாளிகளின் உற்பத்தியை அதிகரிக்கவே பயன்படுகின்றன. காலை 9 மணிக்கு கிளம்பினால் வீடு வந்து சேர இரவு 8 மணி, 10 மணி ஆகிறது. உழைக்கும் நேரம் மட்டுமல்ல, உழைப்பின் அடர்த்தியும் அதிகரித்துள்ளது. அலுவலகம் செல்பவர்கள் முதல் கூலிவேலை செய்பவர்கள், சிறுதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். பசித்த மிருகம் இரை தேடி அலைவதைப் போல... பணம் ஈட்டும் புதிய வாய்ப்புகளை எல்லோரும் தேடுகிறோம். ஓய்வு நேரங்களை பணமாக ம...

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?

சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள். இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக...

ரஜினி… ஒரு நடிகனின் கதை!

ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. ‘இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’ கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து’ என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம். ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது? ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. சினிமா மட்டுமே மிகப்பெரிய ப...

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்! மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத...

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை! பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட. ’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறா...