இடுகைகள்

அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி

எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில் 5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு. ’இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க’ என மத்திய வர்க்க மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆக்‌ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன? ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். ’தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது. இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது’. அதாவது எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான் பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணை...

கடவுளின் புனைப்பெயர்!

SC NO 8 EXT / DAY / BUS STOP ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா... நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம்.. சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப் பாட்டுக்கும் ஏறிட்டீங்க..” என தயங்குவது. “போன்னு சொல்றேன்ல” என அவள் குரலை உயர்த்தியதும் சைக்கிள் கிளம்புவது. சுப்பையா பின்புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவளையேப் பார்த்துக்கொண்டு அந்த இளைஞன் நிற்பது. ------Cut------- சம்பந்தம் கடுப்பாக டி.வி.யை நிறுத்திவிட்டு நரைத்துப்போன நெஞ்சு முடியை கையால் தடவிக்கொண்டார். இளம் பச்சை நிற தேங்காய்ப்பூ துண்டு அவர் தேகத்தை மறைத்துக் கிடந்தது. கையில் புகைந்த சுருட்டுப் புகை முகத்துக்கு நேராக சுற்றி சுற்றி வந்தது. கடும் கோபத்தில் இருந்த அவரது உதடுகள் ‘சுப்பையா’ என்ற பெயரை உச்சக்கட்ட கோபத்துடன் முணுமுணுத்தன. சனியன் பிடித்த டி.வி. எதைத் திறந்தாலும் அதையே போட்ட...

Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

படம்
காதல் கவிதை’ என்று அகத்தியன் ஒரு படம் இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகன் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கு கவிதை ஒன்றை விளம்பரமாகக் கொடுக்கச் செல்வார். அங்கு விளம்பரப் பிரிவில் இருப்பவர் தலையை நிமிர்ந்துக் கூட பார்க்காமல், ‘என்ன சைஸ்.. எட்டுக்கு எட்டா, ஆறுக்கு ஆறா?’ என்பார். ‘இது கவிதை சார்’ என்று கதாநாயகன் சொல்ல, ‘இருக்கட்டும். என்ன சைஸ்.. அதைச் சொல்லுங்க’ என்பார் அந்த நபர். ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் ரசனையும், சிந்தனையும் இப்படித்தான் கவிதைக்கும், விளம்பரத்துக்கும் எந்த வித்தியாசங்களுமற்று இறுகிப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் வெறும் ’நியூஸ் மெட்டீரியலாக’ மட்டுமே பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் நியூஸைத் தேடுவது என்றாகிவிட்டன இன்றைய ஊடகங்கள். அறம், நேர்மை, மக்களின்பால் கரிசனம் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஊடகங்களுக்குத் தேவை எல்லாம் இன்றைய பசிக்கான தீனி மட்டுமே. அது நீங்களோ, நானாகவோகூட இருக்கலாம். கருணையற்ற இன்றைய ஊடக உலகின் முகத்தை அப்படியே துவைத்து தொங்கப் போடுகிறது ‘பீப்ளி லைவ்’ என்ற பெயரில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஓர் இந்தி திரைப்படம். அமீர்கான் தயாரிப்பில் அனுஷ்கா ...

பாபர் மசூதி இடிப்பு... சில உண்மைகள்!

‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள். பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’ இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னால் உளவு அதிகாரி ராமனின் வார்த்தைகள் இவை. ‘அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்’ என்ற ‘பழிக்குப் பழி’ பாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்’ என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. வெறியூட்டப்பட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவு 475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அத்வானியும், ம...

வூடு

படம்
ஜஸ்டினின் பள்ளிக்கூடம் ஜஸ்டின், டீச்சரின் முன்பு கை கட்டி நின்றிருந்தான். அவனது நோட்டு டீச்சரிடம் இருந்தது. 'டி.ஜஸ்டின் பெர்லின் ராஜ், 3-ம் வகுப்பு, பி- செக்ஷன்' என நோட்டின் மீது எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது ஒட்டப்பட்ட லேபிளில் இருந்த பொம்மைக்கு மீசை, தாடி வரைந்து இருந்ததைக் கவனித்தான். டீச்சரின் கையில் இருந்த குச்சி ஜஸ்டினைப் பயமுறுத்தியது. ஆனால், அவன் பயந்த மாதிரி டீச்சர் கடைசி வரைக்கும் லேபிளைப் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றிக் கேட்கவும் இல்லை. நோட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். இவனுக்கு உள்ளுக்குள் லேசான பயம். இந்த டீச்சருக்கு 'கண்ணுருட்டி' எனப் பெயர் வைத்தவன் ஜஸ்டின்தான். கையில் குச்சியை வைத்துக்கொண்டு புறங்கையைத் திருப்பச் சொல்லி அடிக்கும்போது, கண்கள் இரண்டையும் உருட்டி உருட்டி மிரட்டுவார். உதடுகள் சத்தமே இல்லாமல் எதையோ முணுமுணுக்கும். அடி மட்டும் இடியாக விழும். இப்போது கண்ணுருட்டி டீச்சரின் கண்களைப் பார்த்தான். ஒன்றும் உருட்டிய மாதிரி தெரியவில்லை. ஆனால், ரொம்பவும் யோசனையாக நோட்டைப் பார்த்தாள். மற்ற பையன்கள் 'சிக்கிட்டல்ல' என்பதுபோல் பழிப்புக் ...

போராடினால் என்ன தப்பு?

படம்
‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாடுதான் இப்போது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் தத்துவம். எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராடும் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் அறிவுஜீவிகள் இந்த கோட்பாட்டின் பெயரால்தான் மிரட்டப்படுகின்றனர். ஆனால் இது திடீரென்று இப்போது அமுல்படுத்தப்படும் ஒன்றல்ல. மக்கள் பிரச்னைகள் தலைதூக்கும்போது எல்லாம் இந்த அரசு இத்தகைய கோட்பாட்டையே கையில் எடுக்கிறது. முதலில் இவர்களுக்கு போராட்டம் என்பதே பிடிப்பது இல்லை. ‘போராடுவதே சட்டவிரோதமானது’ என்று நினைக்கின்றனர். போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளாக செயல்படுபவர்களும், அரச மனநிலையை சுவீகரித்துக் கொண்டவர்களாக இருக்கும் மிடிள்கிளாஸ் மக்களும் போராட்டங்களை வெறுக்கின்றனர். போராட்டம் என்பது போக்குவரத்துக்கு இடையூரானதாகவும், போராடுபவர்கள் வேலையற்ற முட்டாள்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது. பொதுப்புத்தியும், அரசப் புத்தியும் ‘அமைதியான சூழலை’ வேண்டி நிற்க, போராட்டக்காரர்கள் மட்டுமே இந்த அமைதிப் பூங்காவில் சத்தம் போடுபவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் போராட்டம் என்பதே எப்படி தவறான ஒன்றாக இர...

ஊனா கட்டுரைகளும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களும்!

படம்
வெற்றிகளைத் தேடி ஓடுகிறது உலகம். வெற்றி பெறுவது மட்டுமே இந்தப் பூமியில் உயிர் தரித்திருப்பதற்கான தகுதி என்றாக்கப்பட்டுவிட்டது. வெற்றியாளர்கள் சலிக்கச் சலிக்கக் கொண்டாடப்படுகின்றனர். முன் உதாரணங்கள், முதல் பரிசுகள், கோப்பைகள், பொன் மொழிகள் என ஊடகங்களில் தினம், தினம் வெற்றிச் செய்திகள் ஊற்றைப் போல பெருகி வழிகின்றன. வெற்றிபெற்றவன் மட்டும்தான் வாழத் தகுதியானவனா? தோல்வி வாழ்வின் பகுதி இல்லையா? ‘வலியது வெல்லும்’ என்றால் யார் வலியவர், அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து வந்தது, மற்றவருக்கு அந்த வலிமை வராமல் போனதன் சமூகக் காரணிகள் என்ன? அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குமான திறமையின் விகிதம் மாறக்கூடியதே. இதன் அடிப்படையில் வெற்றியின் விகிதமும் மாறக்கூடிய ஒன்றுதான். ஆனால் சமமின்மையுடன் இயங்கும் இச்சமூகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதை நாம் அணுக வேண்டும். வாய்ப்புகள் சமமாக கிடைக்காத போது எப்படி வெற்றிகள் சமமாக இருக்கும்? அதனால் ஒரு நபரின் வெற்றி அல்லது தோல்வியை அந்த தனிநபரின் திறமை/திறமையின்மையுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் சமூகக் கா...