இடுகைகள்

தீராக் கனவு!

படம்
நே ற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பின் மதிய நேரம் அதற்கு உகந்ததாக இருந்தது. நிதானமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது கிடந்த தாளை எடுத்து அதற்குரிய இடத்தில் பொருத்தினான். தொலைபேசிகளை ஒழுங்குசெய்துவிட்டு, கால்களில் புண் இருந்த பகுதி நாற்காலியில் படாதவாறு மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு சாவகாசமாக இரண்டாவது கனவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டான். நீண்டு விரிந்த நதி. உதிர்ந்த மஞ்சள் இலைகள் ஆற்றில் விழுந்து, நதிப்போக்கில் ஓடின. ஆற்றின் ஒரு முனையில் பால்ராஜ் குதித்திருந்தான். சற்றுத் தள்ளி மிதந்த கரும்பச்சை நிற இலை, அவனை வசீகரித்தது. அதை நோக்கி நீந்த முயன்றபோது பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்டதைப்போல உடம்பு சவட்டியது. மீன்கள் வந்து அவனை முத்தமிட்டன. கரும்பச்சை இலை, இவனை நோக்கி மிதந்து வந்தது. புன்னகைத்தபடி இலையை வருடினான். மீன்கள் அவனைத் தீண்டின. இந்தக் கனவைப்பற்றி பால்ராஜ் நிறைய முறை யோசித்துப்பார்த்தான். இதே போன்றதொரு கனவு ஏற்க...

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும்!

படம்
அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது. நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ...

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

படம்
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கு...

விவசாயக் கூலிகள் குறைந்தது ஏன்?

‘எக்காளக்ஸு மருந்திருக்கு, என்னக் கவலை?’ ‘எடுத்துக் குடிச்சிடலாம் மனக் கவலை’ - முன் வரியை ஒருவர் மட்டும் பாட, பின் வரியை எல்லோரும் சேர்ந்திசைக்க வண்டல் மண்ணின் வாசனையுடன் ஒலித்த அந்த நடவுப்பாட்டு இப்போதும் எனக்குள் ஒலிக்கிறது. ‘செவ்வரளித் தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ பாடலை எப்போதுக் கேட்க நேர்ந்தாலும் மனம் ஒரு மண்புழுவைப்போல சேற்றுக்குள் தன்னை அமிழ்த்திக்கொள்கிறது. சேர் அப்பிக்கிடக்கும் உடம்போடு கைகளில் நாற்று முடிச்சுகளை சுமந்து நடவு வயலில் கால் புதைய நடந்த நாட்கள் ஒரு பசுங்கனவென விரிகிறது. நாங்கள் விவசாயக் குடிகள். திண்ணைகளில் தானிய மூட்டைகளும், கொல்லைப்புறத்தில் வைக்கோல் போருமான வாழ்வொன்று எங்களிடம் இருந்தது. நடவும், அறுப்புமே எமது ஆயுள். நடவு வயலில் நடமாடும் ஆண்களைச் சுற்றிவளைத்து நட்டுவிட்டு சில்லறை காசு கேட்கும் பெண்களின் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்கும், திடீர் மழை வந்தால் நாத்து விட்டிருக்கும் பக்கத்து வயலுக்கும் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் உழைக்கும் மக்களின் இயல்பான அக்கறையும், கதிர் அடித்ததும் அந்த வீட்டு சின்னப் பிள்ளைகளுக்கு ‘வாங்கித் திண்பதற்காய்’ தரும் ஓரிரு மரக்கால் நெல்லு...

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

படம்
இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந...

தேசபக்தி... அயோக்கியர்களின் கடைசி முகமூடி

படம்
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது. அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?’ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்னை பண்பலை வானொலிகள் பலவற்றில் அன்று இதைப்பற்றிதான் மூச்சுவிடாமல் பேசினார்கள். ரேடியோ மிர்ச்சியில் அஞ்சனா என்ற ரேடியோ ஜாக்கி இதைப்பற்றி நேயர்களிடம் தொலைபேசி வழியே உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை செய்துகொண்டிருந்தார். அவர், ‘எனக்கு இதை சொல்றதுக்கு நாக்கு கூசுறது. இருந்தாலும் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நாமல்லாம் பிரே பண்ணுவோம். என்னப் பண்றது... நம்ம நிலைமை இப்படில்லாம் சொல்ல வேண்டியிருக்குது’...

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது . தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள் . தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள் . தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது . அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள் . இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல . இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது . அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை . இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும் , ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன் . இந்திய பார்ப்பன மனநிலையும் , பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘ சமூக அ...