இடுகைகள்

'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..'

படம்
'நா டக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது. பி ரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'. தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்...

"இது ஒரு கிறுக்கு பயபுள்ள.."

படம்
'பு த்திசாலியெல்லாம் தன்னை கிறுக்குன்னு சொல்லி பெருமைப்பட்டுக்குறாக.. உண்மையான கோட்டிக்காரன் இங்கன ஒருத்தன் இருக்கேன்..யாரும் கண்டுக்கிடவே மாட்டங்காங்களே..?' என்று புறக்கணிப்பின் தேதனையோடு புழுங்கித் திரிந்த நேரத்தில், 'வாங்க தம்பி' என வாஞ்சையோடு அழைத்திருக்கிறார் திரு. 'எல்லார்க்குள்ளயும் ஒரு பயந்தபய இருக்காம்ண்ணே.. ஆனால் யாரும் இதை ஒத்துக்கிற மாட்டாக. நான் அதை சினிமாவுல பண்றனா..அதைப் பார்த்து அம்புட்டு பேத்துக்கும் சந்தோஷம். இதுதாம்ணே நான் ஜெயிக்கிறதுக்குக் காரணம்' என்று நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நானும் அப்படிப்பட்ட பயந்தபயதான். வீட்டின் ஒற்றை ஆண்பிள்ளை என்று பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததன் விளைவாக இருக்கலாம்('உனக்கு உடம்புல தெம்பில்லை..அதை ஒத்துக்க. அதை விட்டுட்டு உன் அப்பன் ஆத்தாளை ஏன் குத்தம் சொல்லுற..?'). ஆனால், இந்த பயத்தை ஒருபோதும் ஒத்துக்கொண்டதில்லை. 'போட்ருவோம்..பொழந்துருவோம்' என்று பேச்சிலேயே வீச்சரிவாள் வீசுவது பழகிப்போய்விட்டது. ஆனால், இந்த வீர வெங்காயமெல்லாம் நோஞ்சான்களுக்கு மத்தியில்தான். கொஞ்சம் உடம்பு ...

வாத்திமார் வரலாறு....

படம்
ப ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு. தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான். மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரா ன்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்க...

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா...?

'இ ந்திய சாதிய சமூகத்தில், தலித்துகள் அடுக்கப்பட்ட மூட்டையில் கடைசி மூட்டையாக இருக்கிறார்கள்' என்று அம்பேத்கர் சொல்லி ஒரு நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த நிலையிலிருந்து நாடு இன்னும் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லையோ என்று சந்தேகம் வருகிறது. அதுவும் கடைசி மூட்டையான தலித்துகள் மீது மேலும், மேலும் சுமைகள் ஏற்றப்படுகின்றன என்பதுதான் வேதனை. இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டதாக ஒரு பம்மாத்து நாடகம் இங்கு வெகு காலமாக நடத்தப்படுகிறது. அந்த இடப்பங்கீடு, நடைமுறையில் ஆதிக்கசாதிகளிடம் சிக்கி எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது என்பதை, பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும், நாட்டார்மங்களத்திலும் பார்த்தோம். அங்கு உழைக்கும் தலித் மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்கும் அடிப்படை காரணங்களை கலைவதை விட்டுவிட்டு, அரசும் தன் பங்குக்கு ஒரு நாடகத்தை நடத்தியது. அண்மையில், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மூன்று தலித்துகளை பஞ்சாயத்து தலைவர்களாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக தேர்தல் நடக்காத ஊரில் தேர்தல் நடத்த...

தெய்வங்களைக் காப்பாற்றுவோம்

ந ம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும். நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது. 'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும...

காதலிக்க யாருமில்லை..

படம்
'தே வதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லி வைத்த பொய்கள்..' என்று பனிக்கூழ் வார்த்தைகளில் உரு(க்)குகிறார் பழனிபாரதி. 'பெண் இல்லாத ஊரிலே கொடி பூ பூப்பதில்லை..' என மிகை வார்த்தைகளால் மிரட்டுகிறார் வைரமுத்து. கேட்கும்போது சுகமாகத்தான் இருக்கிறது.உணரும்போதுதான் வருத்தமும், கழிவிரக்கமும் வந்துவிடுகிறது.நம்புங்கள் நண்பர்களே....காதலை சொந்த அனுபவத்தில் உணராத சபிக்கப்பட்ட இளைஞர்கள் எனைபோல் பெருங்கூட்டம் இங்குண்டு.உடனே, 'நல்லா யோசிச்சுப் பாரு...காதல்ல சிக்காதவன் எவனுமே இருக்க முடியாது.ஒண்ணு நீ காதலிச்சுருக்கனும்.இல்லை...உன்னை யாராவது காதலிச்சுருக்கனும்.ஆனா கட்டாயம் காதல் உன்னைக் கடந்துப் போயிருக்கும்..' என்று அறிவுரை வார்த்தைகளை கை நிறைய அள்ளி வீச தயாராக வேண்டாம். இந்த வார்த்தைகளை கேட்கும்போதுதான் ரொம்பவே கலக்கமாக இருக்கிறது. 'டீக்கடை முக்குல நின்னு,நாலு நாளு சிரிச்சு,சிரிச்சுப் பார்த்துச்சே...அந்தப் பிள்ளையா இருக்குமோ...? அந்த ராஜாளியார் வீட்டுபிள்ளை எப்பவும் எகனமொகனயா கிண்டல் பண்ணுமே..அதுவா..? 'உனக்கு வெள்ளை சட்டை நல்லாயிருக்கு..'ன்...

அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

படம்
உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள்.கலாச்சார,பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம். திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறமாக இருக்கிறது இந்த முகாம்.சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிர்ப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது.தன் மண்ணையும்,மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு, உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.கணவன் இங்கு...மனைவி அங்கு...பிள்ளை இங்கு...தாய் அங்கு..என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது.கேட்டபொழுதில் கதைப்பதற்கும்,பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின...