இடுகைகள்

தெய்வங்களைக் காப்பாற்றுவோம்

ந ம் சமூக மரபில் அனைத்து இனக்குழுவுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஒழித்து யாவருக்கும் ஒரே கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிறுவ முயல்கிறது உலகமயமாக்கமும், அதன் மூல பிரதியான பார்ப்பனமயமாக்கமும். நம் குடும்பங்கள் அனைத்திற்கும் குலசாமிகள் உண்டு. அவை இப்போது தோட்டத்து மரங்களிடையே பராமரிப்பில்லாத விளக்கு மாடமாகவோ, யாருமற்ற வனாந்திரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிலையாகவோ மாறிப்போயிருக்கின்றன அல்லது முனீஸ்வரன்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இது யதேச்சையானது அல்ல. நூற்றாண்டுகளின் நுணுக்க அரசியல் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது. 'உங்களை ஒவ்வொருவராக என் கலாச்சாரத்திற்கு மாற்றுவதைக் காட்டிலும் உன் சாமியையே என் கலாச்சாரத்திற்கு மாற்றிவிட்டால் அப்புறம் நீங்களென்ன பெரிய கொம்பா..? வேறு வழியின்றி இங்கு வந்துதானே ஆக வேண்டும்..?' என்ற பார்ப்பனவாத பாசிசக்குர இதற்குப்பின்னால் ஒழிந்திருக்கிறது. ஒரு சில குலசாமிகளின் கோயில்களில் சிவன், பிள்ளையார், விஷ்ணு போன்ற ஆதிக்க அடையாள தெய்வங்கள் வீற்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இறை நம்பிக்கையுள்ள தமிழ் குடும...

காதலிக்க யாருமில்லை..

படம்
'தே வதைகள் பூமிக்கு வருவதில்லை என்பதெல்லாம் காதலிக்காதவர்கள் சொல்லி வைத்த பொய்கள்..' என்று பனிக்கூழ் வார்த்தைகளில் உரு(க்)குகிறார் பழனிபாரதி. 'பெண் இல்லாத ஊரிலே கொடி பூ பூப்பதில்லை..' என மிகை வார்த்தைகளால் மிரட்டுகிறார் வைரமுத்து. கேட்கும்போது சுகமாகத்தான் இருக்கிறது.உணரும்போதுதான் வருத்தமும், கழிவிரக்கமும் வந்துவிடுகிறது.நம்புங்கள் நண்பர்களே....காதலை சொந்த அனுபவத்தில் உணராத சபிக்கப்பட்ட இளைஞர்கள் எனைபோல் பெருங்கூட்டம் இங்குண்டு.உடனே, 'நல்லா யோசிச்சுப் பாரு...காதல்ல சிக்காதவன் எவனுமே இருக்க முடியாது.ஒண்ணு நீ காதலிச்சுருக்கனும்.இல்லை...உன்னை யாராவது காதலிச்சுருக்கனும்.ஆனா கட்டாயம் காதல் உன்னைக் கடந்துப் போயிருக்கும்..' என்று அறிவுரை வார்த்தைகளை கை நிறைய அள்ளி வீச தயாராக வேண்டாம். இந்த வார்த்தைகளை கேட்கும்போதுதான் ரொம்பவே கலக்கமாக இருக்கிறது. 'டீக்கடை முக்குல நின்னு,நாலு நாளு சிரிச்சு,சிரிச்சுப் பார்த்துச்சே...அந்தப் பிள்ளையா இருக்குமோ...? அந்த ராஜாளியார் வீட்டுபிள்ளை எப்பவும் எகனமொகனயா கிண்டல் பண்ணுமே..அதுவா..? 'உனக்கு வெள்ளை சட்டை நல்லாயிருக்கு..'ன்...

அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

படம்
உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள்.கலாச்சார,பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம். திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறமாக இருக்கிறது இந்த முகாம்.சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிர்ப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது.தன் மண்ணையும்,மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு, உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.கணவன் இங்கு...மனைவி அங்கு...பிள்ளை இங்கு...தாய் அங்கு..என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது.கேட்டபொழுதில் கதைப்பதற்கும்,பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின...

ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.

படம்
"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு. ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை. என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை. ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய...

நாடார்..வெள்ளாளர்..கிறிஸ்டின்..-பேரா.ஆ.சிவசுப்ரமணியனுடன் ஒரு சந்திப்பு..

'எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட,எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல்.கடந்த காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பாத எந்த சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்..' -ஆனந்த விகடனில் வெளிவந்த 'தமிழ்மண்ணே வணக்கம்..' தொடரில் பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன் சொன்ன வார்த்தைகள் இவை. கே.ஆர்.விஜயாவையும்,டி.வி.சுந்தரம் அய்யங்காரையும் இன்ஷியலோடு தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் சொந்த தாத்தாவின் தந்தையார்/தாயார் பெயர் தெரிவதில்லை.இரண்டு தலைமுறைக்கு முன்பு, நகரங்களுக்கு குடிபெயர்ந்த குடும்பங்களின் இளைஞர்/யுவதிகளிடம், 'உங்களின் பூர்வீக ஊர் என்ன..?' என்று கேட்டால், 'தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்..' என்பதுதான் பதிலாக இருக்கும்.பூர்வீக கிராமத்தில் சொத்துகள் இருந்தால் மட்டும்,கிராமத்தைப்பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.இது யார் தவறு..?தன் சந்ததிக்கு குடும்ப வரலாற்றை உணர்த்தாத பெற்றோரின் தவறா..?அல்லது தன் பெற்றோரின் குடும்ப வழி வரலாற்றை தெரிந்து கொள்ளாதது பிள்ளைகளின் தவறா..?தன் முன்னோர்களின் வரலாறுபற்றி அக்கரை இல்லாத ஒருவர் தன் சந்ததியை சரியாக வழிநடத்துவார் என்று ந...

கனம் கோர்ட்டார் அவர்களே...இது நியாயமா..?

'க ல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டே சஸ்பெண்ட் செய்யலாம்..' என்று ஒரு அரைவேக்காட்டு தீர்ப்பை வழங்கியிருக்கிறது கேரள கோர்ட்.மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மயக்கத்தில் இருப்பதே நல்லது என்று அதிகார வர்க்கம் நினைப்பதாலோ என்னவோ இந்த விஷயம் இதுவரை பெரிதுபடுத்தப்படவில்லை. எர்ணாகுளம் அருகேயுள்ள மாழிங்கரை எஸ்.என்.எம். கல்லூரி சார்பாக,'எங்கள் கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற பெயரால் சில மாணவர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவதால் பிரச்னை ஏற்படுகிறது.அமைதியான முறையில் கல்லூரி நடத்த முடியவில்லை..எனவே மாணவர் அமைப்புகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.." என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பில்தான் இந்த கழிசடை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவனாய் இருக்கும் வயதில்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளின் சிந்தனை மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கிறான்.முடிவெடுக்கும் வேகமும்,செயல்படுத்தும் தைரியமும் உள்ள வயதும் அதுதான்.இந்த வயதில் அரசியலை தெரிந்து கொள்ளாமல் வேறு எந்த வயதில் தெரிந்து கொள்வது...? நீங்கள் விரும்பினாலும் ,விரும்பாவ...

பிணம் திண்ணும் கோக்..

படம்
உ லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வ...