IPL: காசு, பணம், துட்டு, Money.. Money..

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி நாடே பேசுகிறது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 25 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்த ுள்ளது. ரன் எடுக்கும் வகையில் மோசமாக பந்து வீச ஒரு ஓவருக்கு 60 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கியிருக்கிறார்கள். மைதானத்தில் இருந்தபடி துண்டை இடுப்பில் சொருகுவது, டி-சர்ட்டை மேலே இழுத்துவிடுவது, கையில் ரிஸ்ட் பேண்ட்டை அணிந்துகொள்வது... என லட்சக் கணக்கான ரசிகர்களின் கண்கள் பார்த்திருக்கும்போதே ரகசிய சமிக்ஞைகளை கொடுத்திருக்கின்றனர். சிக்ஸ் அடித்தபோது தலையை கவிழ்ந்து அவர்கள் ஃபீல் பண்ணியதை நினைத்து ‘என்னமா ஃபீல் பண்ணான்டா.. ஙொய்யால..' என ஆதங்கப்படுவதைத் தவிர ரசிகர்களுக்கு இப்போது வேறு வாய்ப்புகள் இல்லை. இவர்களின் சிக்னல்களை வைத்து சூதாட்டக்காரர்கள் பெட் கட்டுவதற்கு ஏதுவாக மைதானத்தில் இருந்தபடி வாம்-அப் செய்வது போல நேரம் கடத்தியிருக்கிறார்கள். இந்த கருமம் எதுவும் புரியாமல் ‘லாஸ் ஆஃப் பே'-வில் லீவ் போட்டுவிட்டு டி.வி.யில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள், அவர்கள் அடித்த சிக...