உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல. இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும்சமூக அக்கறைவிஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது... இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லைஎன்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாகதீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும்புனிதப்போர்என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர்தெரியாதத்தனமாகஅந்தசதிவலையில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ... குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர்ஆரிஃப்என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார். தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாகதேவர் மகன்என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்திபோற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் () ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா... ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா... செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா... மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும், இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில்என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாதுஎன்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லைஎன்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றனஎன்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில்எவனோ ஒருவன்என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்தஎவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி. தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும், பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி... ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதிஅதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல...’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமேஎன்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததேஎன்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத் தாங்கலை... இதுல யுகங்கள் தோறுமா?

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
hmmm muththi pochu.......onnum panna mudiyaadu
சென்ஷி இவ்வாறு கூறியுள்ளார்…
நான் வாசித்ததில் மிகச்சிறந்த உணர்வு வெளிப்பாடு உங்கள் எழுத்தில் கிடைத்திருக்கிறது. நன்றி ஆழியூரான்!
பனிமலர் இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான கண்ணோட்டம், வெளியில் பார்க்க தனிமனிதனின் கோபம் என்றாலும், அது ஏன் ஈழ தமிழர்களின் பால் வரவே இல்லை என்று சொல்வார்களா இந்த கமலகாசனின் வகையராக்கள்.
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பார்வை.. ஆனா.. இவங்களுக்கு புரியாது.. இந்தியில் வந்த அந்த படத்தை டப் செய்து வெளியிட்டு இருக்கலாம். :)
சுகுணாதிவாகர் இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்த ரவுண்ட் உங்களுக்குத்தான். வாழ்த்துக்கள்((-
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
கமலா இப்படி என்ற ஆச்சர்யத்தில் இருக்கேன் உங்கள் விமர்சணம் படித்து.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//hmmm muththi pochu.......onnum panna mudiyaadu//

Mm...correct. முத்திப் போச்சு...

//குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா?//

அந்த எண் 3000 என்பது சரியானது தானா?

http://www.gujaratriots.com/12/the-concocted-'provocations'

//...the UPA government (With Sonia Gandhi as its chairperson) and Leftists as outside supporters gave the figures of 790 Muslims and 254 Hindus killed in the riots//

அதற்காக அங்கே நடந்த கலவரத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?

//ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள்//

இல்லைன்னு சொல்றீங்களா? :)

//முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை.//

நீங்கள் தைரியமா கொடுப்பீர்களா? அப்ப வாழ்த்துக்கள்.

வெறும் வெறுப்பு தான் தெரிகிறது உங்கள் மனநிலையில். திருந்த பாருங்கள். வெறும் வெறுப்பை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியாது. அனைவரையும் அழித்து விடும்.
Jeyakumar Tamilmani இவ்வாறு கூறியுள்ளார்…
kamal eppavum ippadi thaan.... koodaiyil irruntha poonai,, veliya varuvatharkku ithanai naal aayyiduchu...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Vaendum pala aayiram Azhiyuraankal.
Vazhthukal
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சீனு... நான் பொய் சொல்லவில்லை என்று நீரூபிக்க தெஹல்கா ரிப்போர்ட் உள்ளிட்ட ஏராளமான இனப்படுகொலை ஆவணங்கள் இருக்கின்றன. ஒரு வாதத்துக்கு நான் எண்ணிக்கையைக் கூட்டி பொய்சொல்லிவிட்டேன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றால், நீங்கள் சொல்கிற 790 முஸ்லீம்களை கொன்றது நியாயம் என்றாகிவிடுமா?

ஊரில் சொந்த வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அதை ஒரு முஸ்லீமுக்குதான் கொடுப்பேன். சொல்லியனுப்புகிறேன் வந்து பாருங்கள்.
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழமான பார்வை! இந்திய திரைப்படங்களில் இந்து பாசிசத்தை வளர்க்கிற கருத்துருவாக்கங்ள் மலிந்து கிடக்கின்றன. அவற்றிற்கு தேசபக்தி சாயம் பூசுவது வாடிக்கை. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, சமூக விரோதிகளாக சித்தரிக்கும் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் இந்த மனநோய் பிடித்திருக்கிறது.
ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
gooood one.
பொய் முகம் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆயிரம் படங்களில் இந்துவை கெட்டவனாக சித்தரிப்பார்கள். அதை ஒப்புக் கொள்வீர்கள். உலகில் உள்ள தீவிரவாதத்தை சொன்னால் ஹிந்து ஃபேசிசம் பேசுவீர்கள். ஒரே கண்ணாடி போட்டுக் கொண்டு உலகைக் காணப் பழகுங்கள் !

இத்தனைக்கும் கமல் அப்படத்தில் சொல்லி இருக்கும் அனைத்தும் உலகறிந்த உண்மைகள்!

இதையும் கொஞ்சம் பார்த்துட்டு வாங்க!

http://veerantamil.wordpress.com/2009/09/22/போலி
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
படம் இன்னும் பார்க்கவில்லை. அவசரமாகப் பார்க்கும் திட்டமும் இல்லை.
ஆனால் தங்கள் எழுத்தில் குறிப்பிட்ட விடயங்கள் சிந்தனைக்குரியதே!
எல்லா இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களும் தீவிரவாதியெனின நினைத்தால்
ஈழத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனும் இலங்கை அரசின்
கூற்று உண்மையாகிவிடும்.
Sundararajan P இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாய்யா.. அவரு என்ன பண்ணாலும் அதுக்கு ஒரு கலர் கட்டுங்க.. original படத்த எடுத்தவன் வடக்க இருக்கான்.. அவன கேளு..நம்மாளு காசுக்காக எத்தையாவது பண்ணுவாரு.. ஒடனே ஒனக்கு ஆவாது.. நீ போய் மாத்தி எடேன்.. பாப்போம்... பம்பாய்ல ஒருத்தன் கண்மண் தெரியாம சுட்டானே அப்போ நீ என்னா பண்ணிகின இருந்த.. பமபாயில போய்ச் சொல்லிப் பாறேன் கசாப் பாவம்,... அறியாத பையன்... அவன விடுதல பண்ணுங்கன்னு.. பம்பாய் மக்களே உம் முதுகுல டின் கட்டி அனப்புவானுக.. நம் ஊரு துாத்துக்கடி காமராசு பாவம் பம்பாய் ஸ்டேசனில வந்து இறங்கனவுடனே செத்துப் போனானே... அவன் வீட்டில போய்தான் சொல்லிப் பாறேன்...சும்மா...

நாகராசு
அஹோரி இவ்வாறு கூறியுள்ளார்…
புதுசா சொல்லுவோமே ன்னு சொல்லி இருக்கீங்க.
ஒரு புப்ளிசிட்டி க்கு ம்ம்ம்ம்ம்ம்ம் ........
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இஸ்லாமிய பாசிசம் பற்றியும் ஆராய்ந்து எழுதுங்கள்.

உங்கள் வீட்டில் குடிவைக்கப்போகும் நபர்
சொர்க்கத்து செல்வார் , நீங்கள் முஸ்லீமாக பிறக்காததினால் நரகத்துக்குதான் செல்லவேண்டும். நீங்கள் அவரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். முஸ்லீம்களின் பாதிக்கபடுவதற்கு மூல காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.
Pot"tea" kadai இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விமரிசனம்.

ஆனாலும் இம்மாதிரியான கமல் போன்ற இண்டெலெக்ஷுவல் குசுக்களுக்கு மட்டும் எப்படி இரண்டு நாக்குகள் அதுவும் வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியேயென்று கூட அல்லாமல் பொதுவிலேயே தம்முடைய அரசியலை இலகுவாக வாழைப்பழ ஊசியைப்போல் ஏற்ற முடிகிறது என்பது தான் புரிவதில்லை.

நன்றி சரவணா.
Pot"tea" kadai இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன கொடும சரவணன் இது! அப்படி தான் சொல்லத் தோனுது சில பின்னூட்டங்களைப் படிக்கும் போது! இப்படி பொத்தாம்பொதுவாக கருத்துக்களை வைக்கும் போக்கு நிறவெறி, இனவெறி, மதவெறிக்கு ஒப்பானது. ஒரு நண்பர் முஸ்லீம்கள் தான் குண்டு வைப்பதாக பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார்...என்னய்யா இது! விட்டால் 20 கோடி முஸ்லீம்களையும் கழுவிலேற்றீவிடுவார் போலுள்ளதே? மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு பற்றி யாருக்காவது தெரியுமா? ஒரு நண்பர் புள்ளிவிவரங்கள் கொடுக்கிறார் இறந்து போனது 700 சொச்சம் இஸ்லாமியர்கள்தான். காணாமல் போனவர் பற்றிய தகவல் ஏதாவது தெரியுமா அவருக்கு?

அயர்ச்சியாய் இருக்கிறது ஒவ்வொன்றாய் எடுத்து சொல்வதற்கு!

இசுலாமியர் அனைவரும் தீவிரவாதிகள் . இந்துக்கள் அனைவரும் புனிதர்கள் என்று இவர்களே கட்டமைத்துக் கொண்டு பொத்தாம்பொதுவாய் எழுதிப் போவோர் குண்டியில் கடப்பாரையை சொருக...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி இது ஒரு சமூக அக்கறையுள்ள படம், சமூகத்தின் அழுக்குகளை க்ளீன் பண்ணப்போகிறது என்று படம் காட்டியவர்கள் எல்லாம் இப்போது ‘அது ஜஸ்ட் சினிமாதானே... அதுக்கு ஏன் இவ்ளோ உள்நோக்கம் கண்டுபிடிக்கிறீங்க?’ என்று ரிவர்ஸ் கியர் அடிக்கிறார்கள். அதேபோல அவர் ஏதோ வியாபாரத்துக்காக செய்கிறாராம். ஏண்டா ங்கோத்தா... முஸ்லீம்கள் சூலாயுதத்தால் கொலை செய்யப்படுவது உனக்கு யாவாரமா? உலக அளவில் கிறிஸ்தவ பாசிசமும், இந்திய அளவில் இந்து பாசிசமும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் ஒடுக்கொண்டிருக்கின்றன. ஈராக் முதல் ஆப்கன் முதல் குஜராத் தொடங்கி கோவை வரைக்கும் இதுதான் நடக்கிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா.... செல்வேந்திரன்னு ஒரு புனிதர் ஒரு கட்டுரை எழுதியிருக்கார் போய் பாருங்க. மற்ற சிலராவது கமல் ரசிக கோயிந்துகள். தான் நம்பும் ஒரு நபர் மீது அதிர்ச்சியாக கருத்துகள் வீசப்படும்போது ஜெர்க்காகி புலம்புகிறார்கள். சில பார்ப்பான்கள் ‘கமலை ஏன் பர்சனலா திட்டுற’ என்று ஏதோ கமலுக்கும் எனக்கும் வரப்புத் தகறாரு மாதிரி எழுதுகிறார்கள். ஆனால் இந்த செல்வேந்திரனோ ஏதோ பெரிய தியரி எல்லாம் சொல்லி பெருபான்மையின் நலன்களுக்காக சிறுபான்மைகள் கொல்லப்படுவதில் தவறே இல்லை என்று நிறுவப்பார்க்கிறார். இதை ஒத்துகலேன்னா பத்தாம் நம்பரோ, பதினோராம் நம்பரோ தெரியலை... அந்த செருப்பால அடிப்பானுங்களாம்... இவனுங்களை எல்லாம் எதைக்கொண்டு அடிக்கலாம்?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான். said...

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி இது ஒரு சமூக அக்கறையுள்ள படம், சமூகத்தின் அழுக்குகளை க்ளீன் பண்ணப்போகிறது என்று படம் காட்டியவர்கள் எல்லாம் இப்போது ‘அது ஜஸ்ட் சினிமாதானே... அதுக்கு ஏன் இவ்ளோ உள்நோக்கம் கண்டுபிடிக்கிறீங்க?’ என்று ரிவர்ஸ் கியர் அடிக்கிறார்கள். அதேபோல அவர் ஏதோ வியாபாரத்துக்காக செய்கிறாராம். ஏண்டா ங்கோத்தா... முஸ்லீம்கள் சூலாயுதத்தால் கொலை செய்யப்படுவது உனக்கு யாவாரமா? உலக அளவில் கிறிஸ்தவ பாசிசமும், இந்திய அளவில் இந்து பாசிசமும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் ஒடுக்கொண்டிருக்கின்றன. ஈராக் முதல் ஆப்கன் முதல் குஜராத் தொடங்கி கோவை வரைக்கும் இதுதான் நடக்கிறது.//

இந்து ,கிறிஸ்தவ பாசிசம் சரி , இஸ்லாம் மட்டும் பாசிசம் இல்லையா? மலேசியா என்ற நாட்டில் சக தமிழன் பாதிக்கப்படுவது என்ன இந்து/கிறிஸ்தவ பாசிசமா? அரபு/முஸ்லீம் நாடுகளில் உள்ளது கிறிஸ்தவ இந்து பாசிசமா? பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் /பங்களாதேசில் மைனாரிட்டிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது ? குற்றச்சாட்டு அனைத்து மதங்களின் மீது வைக்காவிட்டால் அது நியாயமல்ல.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
@ அனானி...

மலேசியாவில் இருப்பது இன மேலான்மை. அங்கு வேற்று நாட்டு இனத்தவர் என்ற அடிப்படையில்தான் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுகிறது. அதாவது தமிழன் என்ற அடிப்படையில்தான் அங்கு ஒடுக்குமுறை நிகழ்கிறது, இந்து என்பதால் அல்ல. ஒருவேளை தமிழ் மனம் என்பதே தன்னை இந்து மனமாக உணர்ந்துகொள்வதால் இந்த சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கலாம்.
மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல்மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்க கிறிஸ்தவம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாக கட்டமைத்தது. இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த வெர்ஷனாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது. அதனால் எல்லா மதத்துக்கும் நிகழ்வது போல்தான் இஸ்லாமுக்கும் நிகழ்கிறது என்று நீங்கள் இதைப் பொதுமைப்படுத்த முடியாது. ஏனென்றால் நீங்கள் திருநீரு பூசுவதினாலேயே தீவிரவாதியாக உணரப்படுவதில்லை. சிலுவை அணிந்துகொள்வதினாலேயே பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

அரபு நாடுகளில் இருப்பது இஸ்லாமிய மத அடிப்படைவாதம். அங்கு எந்த இந்துவை தெருத்தெருவாக குத்திக்கொன்றார்கள்?

பெரும்பான்மை வாதம் என்பது எங்கேயும் ஒரே மாதிரிதான் தொழிற்படுகிறது. முஸ்லீம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்க்கை நிலையில் பிற மதத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துவது பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உண்மையாக இருக்கலாம். அப்படியானால் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதை ஆதரிக்காததுதான் உங்களின் நிலைபாடு. அதையேதான் நானும் சொல்கிறேன். இந்தியாவின் சிறுபான்மையினராகிய இஸ்லாமியர்கள் மீது இந்துக்களாகிய நீங்கள் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்பதே என் கருத்து. ஏனென்றால் அநீதிக்கு நீதிதான் தீர்வு. அநீதி அல்ல.
யுவகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
:-)

பின்னூட்டங்களை மெயிலில் அறிய...
Athisha இவ்வாறு கூறியுள்ளார்…
அல்லேலுயா!
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
வழக்கம்போல சிந்தனையைத் தூண்டியிருக்கிறீர்கள். ஓரிருவருக்குள்ளாவது அது புகுந்து புறப்படட்டும்.

"முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. "

ஈழத்தமிழர்களாகிய நாங்களும் அந்த வகையறாக்கள்தான். வீடு தேடிப் பிடிப்பதற்குள் நாங்கள் பட்ட துன்பங்களைத் தனிப்பதிவே எழுதலாம். 'எப்பவும் புலம்புறதா?'என்று அதை விட்டாயிற்று. இப்போதெல்லாம் குறைவாகவே எழுதுகிறீர்கள். வேலைப்பளுவா:)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் வெண்ணைவெட்டி மைனர் மாய்க்கான் நாயே.
ரம்சான் பிரியாணி தின்னா மல்லாக்கப்படுத்து கொரட்ட விடு டா.

உடனே வந்து கமல் பார்ப்பான், நரேந்திரமோடி வில்லன், சோ ஒரு பார்ப்பான பாசிஸ்டு என்று எழுதவந்துட்ட.

ஒன்ன மாதிரி ஒப்புக்குச்சப்பாணி எல்லாம், பிரியாணியோட முஸ்லீம்கள் பீயைக் கலந்து கொடுத்தாலும் திங்கிற ஜாதி.

போ, போயி துலுக்கன் மூத்திரத்தைக் குடி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி அய்யா... உங்களுக்கு அவ்வளவாக கெட்டவார்த்தைகள் தெரியவில்லை. கற்றுக்கொண்டு வரவும்.

அதுசரி... பிரியாணியோட பீயை கலந்து திங்குறதுக்குன்னே தனியா ஒரு சாதி இருக்கா? இதுக்கெல்லாமாடா ஒரு சாதி வெச்சிருக்கீங்க..? அவ்வ்வ்வ்.....
அதே அனானி இவ்வாறு கூறியுள்ளார்…
திராவிட கம்யூனிஸ்டு பெரியாரிச நாதாரிகளுக்குத் தெரியும் அளவுக்கு எங்களுக்கெல்லாம் கெட்ட வார்த்தைகள் தெரியாது தான். ஒத்துக்கொள்கிறேன்.

துலுக்கர்கள் பிரியாணியில பீ யைக்கலந்து கொடுத்தாலும் உங்களைப்போன்றவர்கள் தின்பீர்கள் என்பது தான் அர்த்தம். அதற்கு மதச்சார்பின்மை சாயம்பூசி விற்பீர்கள் என்பதும் புலனாகிறது. அப்படி இருப்பவர்களெல்லாம் ஒரே சாதி தான். அது மனித சாதி அல்ல. பீ திங்கும் மிருகம் எதுவோ அந்த சாதி. அவ்வளவு தான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.
haja dubai இவ்வாறு கூறியுள்ளார்…
விமர்சனங்களை பற்றி கவலைபடாமல் பணியை தொடரவும்
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்திய தேசபக்தி என்பதே இந்து தேசபக்திதான். இதை இந்திய தேசியம் என்ற கற்பிதத்தின் பெயரால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊட்டியதில் காந்திக்கு பெரும்பங்கு உண்டு. //

௧)இதன் மூலம் காந்தி மதவாதி என்கிறீர்களா?

//அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான். அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்... தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது//

௨)இந்த ஜனநாயகம் உங்களுக்கு சிறைக்கூடமா?

//உண்மையில் மக்களின் மனங்களில் இருந்து தேசியம் துடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசியவெறி இல்லை. தேச எல்லைகள் தேவையாய் இல்லை. இதற்கு உலகமயமாதல் உட்பட பல காரணங்கள். //

௩)பின்னர் ஏன் நீங்கள் முந்தைய பத்தியில் தமிழீழ் தேசியத்திற்கான வரிகளை கூறியுள்ளீர்கள்?

//அசோக் சிங்காலும், நரேந்திரமோடியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் முருகேசனும், ராமசாமியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், எல்லோரும் சமமா? ஒரு அரசு தன் ஆளுகையின் கீழ் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சமமாக நடத்த வேண்டும்? அவ்வாறுதான் நடக்கிறதா?//

௩)ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம்,அவர்கள் முன்னேற வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைகள் மூலம் முன்னேறுவதற்கான வழிவகைகளை இந்திய அரசு (கட்ச்சிகளை விட்டு விடுங்கள்)செய்தது பொய் என்கிறீர்களா?

இதன் மூலம் பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களிலும் ,வேலைவைப்புகளிலும் எழுபது சதவீதம் பெற்ற பார்ப்பனனும் , ஐம்பது சதவீதம் பெற்ற மற்ற சமூகத்தினரும் வெளியேற ,வெறும் இருபத்து சதவீத மதிப்பெண் கொண்டு உள்ளே செல்ல எஸ்.சி/எஸ்.டி யினருக்கு செய்யப்பட சலுகைகளை அனுபவிக்காமல் வேண்டாம் என்றா கூறி விட்டார்கள் ?
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
௪)பல(குறிப்பாக தென் மாவட்டங்களில்) மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டில் காவல் துறையில்பணிபுரியும் எஸ்.சி/எஸ்/டி யினர் மற்ற சமூகத்தினரை குறி வைத்து வழக்குகளை போடும்போது மற்ற சமூகத்தினர் ஒடுக்கப்படுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?




//அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான். அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்... தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்ற நிலப்பரப்புக்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத வட கிழக்கு மாநில மக்களை இந்திய தேசிய வரையறைக்குள் எப்படி சேர்க்க முடியும்//

௭)தேசியம் என்பது தேவையிள்ளஎன்றால் ஒவ்வொரு நாடுகளுக்கும் நீங்கள் ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து போய் பிரச்சினைகளை தீர்ப்பீர்களா?மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்களா?

௮) தமிழ் தேசியம் தேவையில்லைஎன்றால் அதற்காக ஈழத்தில் உயிரைவிட்டவர்கலேல்லாம் முட்டாள்களா?

//தேசியக் கொடி ஏற்றும் நிபந்தணையை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்கள். இங்கு தேசபக்தி என்பது கட்டாயமாக்கி ஊட்டப்படுகிறது. இதை, ‘இந்த நாட்டில்தானே வசிக்கிறீர்கள். இந்த நாட்டு அரசாங்கத்தின் சலுகைகளைத்தானே அனுபவிக்கிறீர்கள். பிறகு தேசபக்தி இல்லாமல் இருந்தால் அது குற்றமில்லையா?’ என்ற எளிய தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். //

௰)இந்த தேசியம் வேண்டாம், இங்கு இருப்பவனெல்லாம் பைத்தியக்காரன் ..

இங்கேயே இருந்து கொண்டு இந்த தேசத்தின் மீது சேற்றை அள்ளி வீச நினைக்கும் தேசத்தின் மீது பற்றிழந்த ,அதற்காக மற்றவர்களை மூளைச்சலவை செய்கிற உங்களை இந்த தேசியம் காணாமல் விட்டுள்ளது இந்த அளவுக்கு நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்

௧௨)
உங்கள் வலைப்பதிவின் சுவாரசியத்துக்காக ஒரு கண்ணீர்கதை

௧௩) அவர்கள் இஸ்லாமியாய எதிர்ப்புவாதிகள் என்றால் நீங்கள் இந்த தேசியத்தை எதிர்க்கும் தேசத்துரோகிகள்

இங்கு நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் ,மதச்சார்பற்றவன் என்றால் எந்த மதத்தையும் சாராதவன் ,நீங்கள் தீவிர இந்து எதிர்ப்பாளனாகவும்,இஸ்லாமிய ஆதரவாளனாக்கவுமே இந்த கட்டுரையின் மூலம் அடையாளம் காணப்படுகிறீர்கள்.

எனவே எக்காரணம் கொண்டும் நீங்கள் மதச்சார்பற்றவனாக உங்களை கூறிக்கொள்ள முடியாது.

இந்துக்களும் ,முஸ்லிம்களும் சாமானியனாக ஒன்று கலந்து வாழும் இந்த சமூகத்தில் இந்துக்கள் மோசமானவர்கள் என்ற நச்சு வித்தை விதைக்க நீங்கள் பாடுபடுவது ஏன்?
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
கோவை கோட்டைமேட்டில் குண்டுவேடிப்புகலவரத்தின் போது,அந்தப்பகுதியில் சிறுபான்மையினராக இருந்த இந்துக்களை ,அந்தப்பகுதி முஸ்லிம்களே பாதுகாத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதேநாளில் இந்துக்களால் பாதுகாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்னும் ஒன்று பட்டு வாழ்வதை அறிவீர்களா?

ஆளாளுக்கு இஸலாமியத்துக்கெதிரான வேரியூட்டுகிறார்கள் என்கிறீர்களே , என்றோ இந்த சமுதாயத்தில் இருந்த பார்ப்பன ஆதிக்க முறை ஒழிந்த பின்னும் பார்ப்பனத்துக்கேதிரான வெறியூட்ட நீங்கள் வரிந்து கட்டுவது நியாயமா? பார்ப்பனியம் ஆகாது? இந்துவை எதிர்க்கவேண்டும்?இந்ந்திய தேசியம் வேண்டாம் ?

இப்படி வரிந்து கட்டுவதை விட்டு விட்டுதருக்கரீதியில் சிந்தியுங்கள் .

நாலு பதிவு எழுதியதால் நீங்கள் ஒன்றும் மிகப்பெரிய மேதாவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

// ‘இந்த நாட்டின் மீது எனக்கு பற்று இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல. நான் வாழ்வதற்கு உரிய குறைந்தப்பட்ச உரிமைகளைக் கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலை கொஞ்சமும் குறையாமல் இந்த நாடு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சேவை செய்யும் நிறுவனமாக இருக்கும் நிலையில் தேசபக்தி எப்படி வரும்?///

அம்பேத்கர் எழுதிய அரசமை சட்டத்தின் மூலம் நீங்கள் அனுபவிக்கும் உரிமைகள் பொய்யா?

இன்னும் பல லட்சம் கேள்விகளை அடுக்க முடியும்,கொள்கைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் கொள்கையைத்தான் எதிர்க்கவேண்டும் ,அதை விட்டுவிட்டு அந்த கொள்கையுடைய அனைவரையும் எதிர்க்கவேண்டும் என நினைக்க கூடாது.

சமநிலை சமுதாயத்தைச் இந்த அரசு தரவில்லை என கூறிவிட்டு நீங்களே ஒருதரப்புசார்ந்த முடிவுகளை நீங்களே எடுக்கலாமா?

தீர்வைகேட்பது நியாயம் தீர்வளிக்காதவனை கொள்ள வேண்டு என்பது வெறி !உங்களுடைய வெறியும் அப்படித்தான் உள்ளது.என்று கூட நான் கூற முடியும்


உங்களை சொல்வதா ,இல்லை இதற்கு பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பவர்களை சொல்வதா?பின்னூட்டம் உங்களுக்கு பண்டமாற்று தானே ? இன்றைக்கு உங்கள் நண்பருடைய பதிவில் நன்றாக இருக்கிறது என்று நீங்க எழுதுவீங்க ,நாளைக்கி அவங்க....

படிச்சு பார்த்து எழுதனா கூட பரவாயில்ல ...


ஆனா ஒண்டு மட்டும் உண்மை ,ஆழியூரான் என்பவர் இந்து மக்கள் மேல் வெறி கொண்டவர் ? பார்ப்பனிய மக்கள் மீது வெறி கொண்டவர் ? இப்படியும் நீங்கள் பார்த்த கோணத்திலேயே மற்றவர்களும் உங்களைப்பார்த்தால் /....?


எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் கொள்கை எதுவுமே சாராதவர்களால் மட்டுமே முழுமையான தீர்வு காண முடியும் . உங்களை போன்றவர்களால் ஒருதரப்பினரை சமாதானப்படுத்த அவர்கள் ஆதரவு பெற ,அவர்களுக்கு வேரியூட்டத்தான் முடியும்...
எதிர்கட்சி..! இவ்வாறு கூறியுள்ளார்…
வருந்துகிறேன் ஆழியூரான் ,... பின்னூட்டங்களை ஒரு கட்டுரை மாற்றி இட்டு விட்டேன்.

தேச பக்தி அயோக்கியர்களின் முகமூடி " என்ற கட்டுரைக்காக எழுதியதை ,,திரை விமர்சனத்தின் பின்னால் இட்டு விட்டேன் .உங்களுக்கு புரிந்திருக்கும் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!