தலித் முரசை ஆதரிப்போம்!

இறுகி கெட்டித்தட்டிப்போய் கிடக்கும் இந்திய, தமிழக சாதி அடுக்குகளை நோக்கி கல் எறிய வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் சமூகத்தை நேசிக்கிற நம் அனைவருக்குமே இருக்கிறது. பேச்சு, எழுத்து, உடை, உணவு அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியை அதிலிருந்து விலக்கம் செய்து அனைவருக்குமான மானுடத்தை அன்பால் கட்டியமைப்பதுதான் சுதந்திரமான, சுயேச்சையான ஜனநாயகத்துக்கான வழி. இந்தப் பொறுப்பை முன்னின்று செய்ய எல்லோராலும் இயலுவதில்லை. கடந்த 13 ஆண்டு காலமாக தமிழ் சூழலில் தலித் முரசு இதழ் இந்தப் பணியை முன்னின்று செய்து வருகிறது.தமிழ் பண்பாடு என்பதே சாதிப்பண்பாடாகவும், தமிழ் கலாசாரம் என்பதே சாதிக் கலாசாரமாகவும் இருக்கிற சூழலில் விளிம்புகளின் குரலை, வாழ்வை உரத்துப் பேசும் தலித் முரசின் பணி ஒப்பிட இயலாத ஒன்று. ஆனால் முற்போக்கு சக்திகளுக்கு வாய்வழி ஆதரவை மட்டும் வழங்கி, அவர்களின் நாளாந்த வேலைத் திட்டங்களுக்குக் கை கொடுக்காமல் ஒதுங்கி இருக்கும் நமது தொன்றுதொட்டப் பழக்கம் தலித் முரசுவுக்கும் தொடர்கிறது. மிகுந்த பொருளாதார தள்ளாத்துடன் 13 ஆண்டுகளை கடத்தி இருக்கும் தலித் முரசு இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 10 ஆயிரம் சந்தாதாரர்களுடன் தொடங்கப்பட்ட தலித் முரசுக்கு இப்போது இருப்பது வெறும் 5 ஆயிரத்துக்கும் குறைவான சந்தாதாரர்களே. இந்த எண்ணிக்கையை உயர்த்தாவிட்டால் தொடர்ந்து தலித் முரசு வெளிவருவது தடைபடும் வருத்தமான சூழல் ஒன்றும் வரக்கூடும்.

‘ஒரு பைசா தமிழன்’ தொடங்கிய அயோத்திதாசப் பண்டிதரால் அதைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் வரைக்குமே நடத்த முடிந்தது. அதன்பிறகு வேறு சிலர் தலித் மக்களின் நலன்களை முன்னிட்டு பத்திரிகைத் தொடங்கினாலும் அவை எல்லாம் குறுகியக் கால எல்லைக்குள்ளாகவே நின்றுபோயின. இச்சூழலில் 13 ஆண்டுகளைக் கடந்து எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், என்.ஜி.ஓ.க்களிடம் தன்னை அடகு வைக்காமல் மிகத் தரமான, நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியாகிக் கொண்டிருக்கும் தலித் முரசு பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது இச்சமூகத்தின்பால் அக்கரைக் கொண்ட அனைவரது கடமை.

திருச்சிக்கு அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில் ஊரேக் கூடி பஞ்சாயத்து வைத்து ஒரு தலித்தின் வாயில் மனித மலத்தை திணித்தது. நவீன யுகத்தில் நடந்து காட்டுமிராண்டித்தனமான இந்த வன்கொடுமைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா..? ‘அது திட்டமிட்டு நடந்ததாகத் தெரியவில்லை” எனக்கூறி வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒரு வன்கொடுமை தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதாவது திண்ணியம் கிராமத்தின் சாதி-இந்துக்கள் ஓரிடத்தில் எதேச்சையாக ஒன்று கூடியபோது, அந்த இடத்துக்கு யதேச்சையாக வந்த தலித் ஒருவர் மீது எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வாய்க்குள் பீயைத் திணித்தார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம். அப்படி என்றால் அந்த கிராமத்தில் எல்லோரும் எப்போதும் பீயுடன் அலைந்து கொண்டிருக்கிறார்களா..? எவ்வளவு கேவலமான தீர்ப்பு இது..? கையில் 2 ஆயிரம் இருந்தால் எவன் வேண்டுமானாலும் யார் வாயில் வேண்டுமானாலும் பீயைத் திணிக்கலாம் என்பதாக இதை புரிந்து கொள்ளலாமா..?

நம்மில் அதிகப்பட்சம் பேருக்கு பீ என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே நா கூசுகிறது. ஆனால் அதை மனித வாய்க்குள் திணிப்பது எத்தனை மோசமான மனித உரிமைகளுக்கு எதிரான வக்கிரம்..? அதற்கு எதிராகவும், இப்படி ஒரு அநீதியான தீர்ப்புக்கு எதிராகவும் இந்த தமிழ் சமூகம் என்ன எதிர்வினை செய்தது..? ஏன் யாருக்கும் ரத்தம் கொதித்து போராட வரவில்லை. உலகம் முழுக்க பல தேசங்களில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் வீதிக்கு வந்து போராடுகிறவர்கள் திண்ணியம் தீர்ப்புக்கு எதிராக என்ன செய்தார்கள்? யாரும் எதுவும் செய்யவில்லை/ செய்வதில்லை என்பதால்தான் சமூகத்தளத்தில் தலித் முரசுவின் வகி பாத்திரம் முக்கியமான ஒன்றாகிறது. அதை தாங்கிப் பிடிப்பதும் நமது கடமை என்றாகிறது.

‘தலித் முரசு என்பது தலித்துகளுக்கான பத்திரிகை. நாம் ஏன் வாங்க வேண்டும்?” என இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல. முதலில் தலித் என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. ‘தல்’ என்றால் மராத்தியில் ‘மண்’ என்று அர்த்தம். ‘தலித்’ என்றால் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் என்று அர்த்தம். இந்த மண்ணுக்கு சொந்தக்காரனாக இருக்கும் பூர்வ குடிகளை தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருப்பதைக் குறிக்கவே அச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தலித் என்ற சொல் சேரி மக்களை மட்டுமே குறிக்கும் என்றில்லை. அது உலகத்தின் ஒடுக்கப்படும் இனங்கள் அனைத்துக்குமானது.

பாபா சாகேப் அம்பேத்கர் மூங்நாயக் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடியாமல் நிறுத்தினார். அது நடந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் உலகமயமாக்கல் காலாம், தொழில் நுட்ப யுகம் என சொல்லப்படும் தலித்துகளால் ஒரு பத்திரிக்கை நடத்த முடியவில்லை என்பதே யதார்த்தம். உலகம் எவ்வளவு வேகமாக சுற்றினாலும் தலித்துகளைப் பொருத்தவரை காலம் உறைந்துப்போய் கிடக்கிறது. எனவே ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் விரும்பும் அனைவரும் தலித் முரசை ஆதரிக்க முன்வர வேண்டும்.

தலித் முரசு தனி இதழ் ஒன்றின் விலை வெறும் 8 ரூபாய்தான். ஆண்டு சந்தா 100 ரூபாய். ஆயுள் சந்தா 1,000 ரூபாய். இதைவிட குறைந்த விலையில் ஒரு இதழை தந்துவிட முடியாது. சந்தா செலுத்த விரும்புவோர் DALITH MURASU என்ற பெயருக்கு மணி ஆர்டர் எடுத்தோ, டிமாண்ட் டிராப்ட் எடுத்தோ அனுப்பலாம்.

முகவரி:

தலித் முரசு
203, ஜெயம் பிரிவு,
சித்ரா அடுக்ககம்,
9, சூளைமேடு நெடுஞ்சாலை,
சென்னை - 600 094
தொலைபேசி: 044- 23745473
E-mail: ambedkar@md4.vsnl.net.in
www.dalithmurasu.com


ஆண்டுக் கட்டணம் ரூ. 100/-
வாழ்நாள் கட்டணம் ரூ 1,000/-

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பருக்கு ‍‍வணக்கம்...

தழித் அல்லாதவர்கள் குரல் கொடுத்தால் மட்டுமே கொஞ்ஞம் awareness among the upper class people creat பண்ணலாம்...இல்லை என்றால் எத்தனை முரசு வந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை. நன்றி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பருக்கு ‍‍வணக்கம்...

தழித் அல்லாதவர்கள் குரல் கொடுத்தால் மட்டுமே கொஞ்ஞம் awareness among the upper class people creat பண்ணலாம்...இல்லை என்றால் எத்தனை முரசு வந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை. நன்றி
சுந்தரராஜன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு ஆழியூரானுக்கு,

திண்ணியம் சம்பவத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். அதில் எனக்கும் சில அனுபவங்கள் உள்ளன.

அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் பார்ப்பனர்கள் அல்லர். ஆனால் பார்ப்பனீயத்தை உள்வாங்கிய நவீன பார்ப்பனர்கள். அவர்கள் அரசியல்ரீதியாக பெரியாரின் வாரிசுரிமை கோருபவர்கள்.

இந்த உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துமாறு பல்வேறு ஊடகங்களையும் வலியுறுத்தியும் அவை அந்த உண்மைகளை எழுத மறுத்தன.

அரசியல் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது புரிந்தது.

இந்த உண்மைகளை வெளிப்படுத்துமாரு தலித் தலைவர்களையும் நாடினோம். அவர்களும் நிகழ்கால - வருங்கால கூட்டணி நலன் கருதி அமைதி காத்தனர். கூட்டணி தர்மமும் புரிந்தது.

தற்போதைய தேவை: தலித் மக்களின் விழிப்புணர்வுதான். அதற்கு உழைக்கிறது - தலித்முரசு.

ஆதரிப்போம்!
superlinks இவ்வாறு கூறியுள்ளார்…
தலித் முரசு ஒரு தலித் விரோத பாதையில் பயணிக்கும் பத்திரிகை.
அதற்கு கொள்கையும் கிடையாது ஒரு புன்ணாக்கும் கிடையாது.
ஏகாதிபத்திய எச்சில் காசை வாங்கி அதில் தான் தலித் விடுதலையை வென்றெடுக்க போகிறார்களாம்.என் மக்கள் செருப்பால் அடிப்பார்கள்
இதற்கு பின் உள்ள 'புனித' திரு உருக்களை.
ராஜ நடராஜன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது... இவைகள்தான்//

இல்லைங்க இன்னொரு தலைமுறைக்கும் இந்தக் கலாச்சாரத்தை மெதுவா நகர்த்தி விட்டுடலாம்:)அப்புறம் இந்தியன்னு எப்படி தனித்து நிற்கிறது?

(அடைப்பானுக்கும் மேலே நீங்க சொன்ன வார்த்தைகளுக்கு சம்பந்தமேயில்லாத ஒருவன்.மேலே என்னதான் சொல்றீங்கன்னு பார்க்கிறேன்)
thiraavidap puli இவ்வாறு கூறியுள்ளார்…
தலித் முரசை வெகுசன மக்களிடம் கொண்டு செல்வது ஒவ்வொரு பெரியார்வாதிகளின் கடமை..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'