காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார்..?

னிப்படலம் போல மனதில் படிந்திருக்கும் மெல்லிய காதல் உணர்வுகளை
அழகாக காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் 'இயற்கை' .அதன் இயக்குனர் ஜனநாதன் எடுத்திருக்கும் 'ஈ' படத்தை கடந்தவாரம் பார்த்தேன்.
உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு காசு பார்க்கும் இரக்கமற்ற வியாபாரம் பற்றியும்,உலகை ஆட்டிப்படைக்கும் 'பயோவார்' என்ற மறைமுக யுத்தத்தைப் பற்றியும் வெகுஜன ஊடகத்தில் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.ஆனால் படத்தின் இறுதி காட்சியில்தான் கொஞ்சம் முரண்படுகிறார்.

வினோதமாக அமைக்கப்பட்ட ஒரு டவரின் உயரத்தில் உலக தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி புரட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி கம்யூனிசம் பேசும் பசுபதி, அதற்கு முந்தைய அல்லது பிந்தைய காட்சியில் காந்தியின் சத்தியசோதனைப் படிக்கிறார்.சத்தியசோதனை படித்துக்கொண்டே,'துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்று மாவோயிசம் பேசுகிறார்.'நான் உங்களை மாதிரி படிச்சவன் கிடையாது..'என்று சொல்லும் ஹீரோ ஜுவாவிடம் 'மக்கள்கிட்ட போ..மக்களைப் படி..அதைவிட வேற பெரிய பாடம் எதுவும் தேவையில்லை..'என்று சொல்லிவிட்டு, துப்பாக்கி குண்டுகளால் தன் மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.

என் கேள்வியெல்லாம் காந்தி எப்போது கம்யூனிஸ்டானார்..? என்பதுதான்.தன் வாழ்நாளில் கம்யூனிஸ்டுகளை ஒரு போதும் விரும்பாத, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டெழுந்து போராடிய பல சமயங்களில் அதை அஹிம்சை என்ற பெயரால் நீர்த்துப்போக செய்த,தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை முறையை அம்பேத்கார் முன்வைத்தபோது அதை,'இந்து மதத்தை பிளவுபடுத்தும் திட்டம்' என்று சொல்லி நிராகரித்த..தன் வாழ்நாள் முழுவதும் முழு இந்து சனாதானியாகவே வாழ்ந்து மறைந்த ஒருவரை எப்படி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டால் ஆதரிக்க முடியும்..?ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் சத்தியசோதனையும் என்பது தலைகீழ் முரண்பாடாக இல்லையா..?'சரி போகட்டும்.வியாபார சினிமாதானே..' என்று விட்டுவிட முடியவில்லை.இம்மாதிரியான வியாபார சினிமாக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் கருத்துக்கள், மக்களின் மனதில் ஒரு மேலெழுந்தவாரியான தாக்கத்தையும்,கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

சினிமா மற்றும் இலக்கிய தளத்தில் சிலர் வெற்றிபெற்ற பின்பு 'இவர் எங்கள் பட்டறையிலிருந்து போனவர்' என்று சொல்லிக்கொள்வதில் நம் கம்யூனிஸ்டுகளுக்கு அலாதி ஆர்வம் உண்டு.இளையராஜா,ஜெயகாந்தன் போன்ற முன் உதாரணங்களும் இதற்கு உண்டு.(மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் உள்ள இருவருமே தாங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்ததாக வெளியில் சொல்லிக்கொள்ளவே தயங்கினாலும், அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் 'என்ன இருந்தாலும் இந்த சிவப்பு சித்தாந்தம்தானே உங்களை புடம் போட்டுச்சு..' என்று பெருமை பேசுவார்கள் நம் தோழர்கள்).அதைப்போலவே இப்போது 'ஜனநாதனும் எங்களிடமிருந்து சென்றவர்தான்..' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆக 'புரட்சிபேசும் ஒரு கேரக்டரின் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கட்டும்' என்று சத்தியசோதனையை பசுபதியின் கையில் இயக்குனர் கொடுத்ததாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.எனில் அதற்கான காரணமும் விளங்கவில்லை.'அவர் எங்கள் ஆள்' என்று இப்போது சொல்லும் கம்யூனிஸ்ட்டு தோழர்களாவது ஜனநாதனிடம் கேட்டுச் சொல்வார்களா..காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார் என்று..?

கருத்துகள்

Vajra இவ்வாறு கூறியுள்ளார்…
காந்தி என்றுமே கம்யூனிஸ்ட் கிடையாது.

infact, காந்தி உயிருடன் இருந்த பொழுது வெள்ளைக்கார துரைகள் போட்ட எலும்புத்துண்டை நக்கிக் கொண்டே காந்தியைத் தூற்றியவர்கள் தான் இந்தியக் கம்யூனிஸ்டுகள்.

இன்று காந்தியைக் கொன்றான் என்று RSS பூச்சாண்டி காட்டி காந்தி பெயரை appropriate செய்யும் தன் மானமில்லாத கூட்டம். இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு உண்மை என்று நம்பினால் கேப்பையில் நெய் வடியுது என்பதையும் நம்பவேண்டும்.
Hariharan # 26491540 இவ்வாறு கூறியுள்ளார்…
எளியவர்களின் ஒரே விடிவிளக்கு கம்யூனிஸம்தான்! காந்தி எளிமையாக அரைவேட்டி உடுத்தி வாழ்ந்த எளியவர்தானே! காந்திக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் லிங்க் கெடைச்சாச்சா?

பிடல் காஸ்ட்ரோவின் உடல்நலக்குறைவால் நேர்ந்த ஆப்ஸன்ஸை அவரது தம்பிதான் நேரில் தோன்றி பொறுப்பேற்று சமாளிக்கும்படி க்யூபாவில் கம்யூனிஸ அரச பரம்பரை ஆட்சி இருக்கிறது!

ஜனார்த்தனன் என்ன லெனின்,கார்ல் மார்க்ஸ்,செகுவேரா என்று இவர்களாலேயே புரிந்துகொண்டுவிட முடியாத மக்கள் கொள்கைதானேங்க பொதுவுடமைன்றது!
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
//எளியவர்களின் ஒரே விடிவிளக்கு கம்யூனிஸம்தான்! காந்தி எளிமையாக அரைவேட்டி உடுத்தி வாழ்ந்த எளியவர்தானே! காந்திக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் லிங்க் கெடைச்சாச்சா?//

மேற்சொன்னது ஹரிஹரனின் கருத்து.இவரைப்போலவே நிறையபேருக்கு காந்தியின் அரைவேட்டி பற்றிய மயக்கம் இருக்கிறது. சமீபத்தில் 'காந்தி நல்லவரா..?கெட்டவரா..?' என்ற அசுரனின் பதிவில், சின்ன கட்டபொம்மன் என்பவரின் கருத்தாக வந்திருக்கும் வார்த்தைகளே உங்களுக்கான சரியான பதிலாக இருக்கும்.

//காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.

செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும், ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:-

"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.//
ஆழியூரான். இவ்வாறு கூறியுள்ளார்…
//கம்யூனிஸ அரச பரம்பரை ஆட்சி//

வார்த்தை பிரயோகத்திலேயே உங்கள் நிலைபாட்டை வலியுறுத்துகிறீர்களே..?

//ஜனார்த்தனன் என்ன லெனின்//

ஜனார்த்தனன் இல்லை...ஜனநாதன்.
Hariharan # 26491540 இவ்வாறு கூறியுள்ளார்…
//கம்யூனிஸ அரச பரம்பரை ஆட்சி//

வார்த்தை பிரயோகத்திலேயே உங்கள் நிலைபாட்டை வலியுறுத்துகிறீர்களே..?


ஆழியூரான்,

எனது நிலைப்பாடல்ல அது! பொதுவுடமை கம்யூனிஸ கியூபாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வு! கம்யூனிஸத்தின் க்யூபா நிலைப்பாடய்யா அது!

ஜனநாதன் எனத் திருத்தியமைக்கு நன்றி!
Hariharan # 26491540 இவ்வாறு கூறியுள்ளார்…
//பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்//

இங்க பாதுகாப்பு புரோட்டோகாலை காந்தியோட எளிமையோட குழப்பிக்கொண்டது மட்டுமே வெளிச்சத்தில் தெரிகிறது! காந்தி எளிமையான ஆள் என்பதை அவ்வளவு எளிமயாக மறுக்கமுடியாது மறந்தும் விடமுடியாது!
அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் ஹரிஹரனுக்கு காந்தியிசம், கம்யுனிசம் குறித்த அவரது நிலைப்பாட்டில் அழுத்தமான நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இது குறித்தான எனது இரு பதிவுகளில் எதில் வேண்டுமானாலும் வந்து வாதாடலாம்....

வரமாட்டார் என்பதை திண்ணமாக நம்பலாம்.

இரண்டாவது விசயம், க்யுபாவில் கம்யுனிசம் செம்மையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியதே?

ஆகவே இது போன்ற சில நபர்களின் நடவடிக்கையை, சில சம்பவங்களை கொண்டே கம்யுனிசத்தின் மீது அவதூறு கிளப்புவதை தவிர்த்து நியாயமான எமது கேள்விகளுக்கு உங்கள் ஆட்களிடமிருந்து இது வரை பதில்கள் வந்ததில்லை.

வஜ்ராவைப் பொறுத்தவரை வழக்கம் போல வாந்தியெடுத்து சென்றுள்ளார்.......

இது வரை பார்த்தவர்களிலேயே மிக வக்கிரமான சில ஆட்களில் அவரும் ஒருவர்(நேசகுமார் இந்த லிஸ்டில்தான் வருகிறார்).

அது சரி, வெள்ளைக்காரன் வீசிய துண்டை நக்கியவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பதற்க்கு அவர் ஏதாவது ஆதாரம் கொடுக்க வேண்டும்.

பகத்சிங் கம்யுனிஸ்டுதான் அவர் எதை நக்கினார் என்று வஜ்ரா தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்...

தெலுங்கானாவில் ஏழைகளின் புரட்சியை நடத்தியவர்கள் கம்யுனிஸ்டுகள்தான் அவர்கள் நக்கிய எலும்புத் துண்டு எது என்று வஜ்ரா அடையாளம் காட்ட வேண்டும்.

இவரையொத்த இந்துத்துவ பன்றிகள் இது போல ஏழைகளுக்காகா ஏதேனும் புரட்சி செய்தனரா என்றும் அவர் காட்ட வேண்டும்.

ஆனால் இவர்களது ஆத்ம புருஷ்ன் பயந்தாங்கொள்ளி சவர்க்கர் மண்டியிட்டு வெள்ளைக்காரன் செருப்பை நக்கியது உலகறிந்தது இது குறித்தும் வஜ்ரா கருத்து தெரிவிக்க வேண்டும்....

அசுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

சாதி சூழ் உலகு..!

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'